Category: தமிழ்

  • இலங்கைத் தமிழ் X இந்தியத் தமிழ்

    ஒரு குறிப்புக்காக, இலங்கைத் தமிழ் X இந்தியத் தமிழ் வேறுபாடுகளைக் குறித்து நான் கற்றுக் கொள்பவற்றை இங்கு தொடர்ந்து பதிந்து வைக்க இருக்கிறேன். இலங்கைத் தமிழ் என்று நான் குறிப்பது பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழாக இருக்கலாம். இல்லை, வேறு ஒரு இலங்கை வட்டாரத் தமிழாகவும் இருக்கலாம். வீட்டில் நிண்டிட்டு போங்கோ | இருந்துட்டுப் போங்க மழை துமிச்சுக்கொண்டு இருக்கு | தூறிக்கிட்டு இருக்கு சத்தி வருது | வாந்தி வருது பஞ்சியா இருக்கு | சோம்பலா இருக்கு…

  • சிறுவர் இலக்கியம் படைப்பவர்களுக்கான மொழி சார் பொறுப்பு

    மாடர்ன் முயலும் முட்டாள் ஆமையும் என்ற தலைப்பில் கண்மணி எழுதிய ஒரு சிறுவர் கதையைக் கண்டேன். அதில் உள்ள தமிங்கில நடையைத் தவிர்க்கலாமே என்று நடந்த உரையாடலைப் பதிந்து வைக்கிறேன். நான்: இயன்ற வரை நல்ல தமிழில் கதை சொன்னால் பரவாயில்லை. வளரும் பருவத்திலேயே குழந்தைகளுக்கு அரை குறை தமிழைக் கற்றுத் தர வேண்டுமா? ஆண்ட்டி என்பதை விட அத்தை என்று சொன்னால் இனிமையாக இருக்குமே? குட்டீஸ், சுட்டீஸ் என்ற சிறுவர் மலர், ஆனந்த விகடன் தமிழ்க்…

  • தமிழ்நாட்டுப் பள்ளிப் பாடநூல்கள் இணையத்தில் கிடைக்கின்றன

    ஏப்ரல் 2007ல் இணையத்தமிழ் உள்ளடக்க உருவாக்கத்துக்கு தமிழக அரசு செய்ய வேண்டியது குறித்து எழுதி இருந்தேன். அதை யாரும் பார்த்தார்களா தெரியாது 🙂 நேற்று கூட இதன் தேவை குறித்து தமிழ் விக்கிபீடியாவில் உரையாடினோம். நேற்று இரவே, தமிழ்நாட்டுப் பள்ளிப் பாடத்திட்ட நூல்கள் pdf வடிவில் இணையத்தில் கிடைக்கத் தொடங்கி இருப்பதை கண்டு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. http://www.textbooksonline.tn.nic.in/ என்ற முகவரியில் 1 முதல் 12 வகுப்பு வரைக்குமான பாடநூல்கள் தமிழ், ஆங்கிலம் இரு வழியிலும்…

  • ஒருங்குறி X Unicode X யுனித்தமிழ்

    ஒரு கூகுள் குழும நிருவாகியுடன் பேசிய போது… — நான்: உங்கள் குழுமத்தில் யுனித்தமிழ் என்ற சொல்லைக் கையாள்கிறீர்களே? யுனித்தமிழ் என்று சொன்னால், இசைத்தமிழ், நாடகத் தமிழ் போல் அதையும் ஒரு தமிழாகக் கருதிக் குழப்பிக் கொள்ள வாய்ப்பளிக்காதா? ஒருங்குறித் தமிழ் என்றால் இலகுவாகப் புரியுமே? குழும நிர்வாகி: சுந்தரத் தமிழில் பாட்டிசைத்து….. என்று திருவிளையாடலில் சிவாஜி பேசும் வசனம் ஞாபகம் வருகிறது. சுந்தரம் என்பது தமிழல்ல, அதனால் இது ஒன்றும் குறையாகியும் போகவில்லை. நான்: தமிழ்…

  • ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும்?

    தமிழ்99 விசைப்பலகையின் அறிவியல், இலக்கண அடிப்படை நிறைகளை அறியும் முன் தமிங்கில விசைப்பலகையின் வடிவமைப்பு அடிப்படையின் போதைமையைப் பார்ப்போமா? தமிங்கில விசைப்பலகைக்கு அடிப்படையாக இருக்கும் asdf அல்லது qwerty விசைப்பலகையில் ஆங்கில எழுத்துக்கள் அமைந்திருக்கும் வரிசைக்கு காரணம் சொல்ல முடியுமா? தட்டச்சுப் பொறிகள் முதலில் உருவாக்கப்பட்ட காலத்தில் அவற்றில் வேகமாகத் தட்டச்சினால் அவை பழுதடைந்து விடுகின்றன என்ற காரணத்துக்காக, எழுத்துக்களைக் கலைத்துப் போட்டுத் தட்டச்சும் வேகத்தைக் குறைக்க உருவாக்கபட்டத்தே இப்போது உள்ள ஆங்கில விசைப்பலகை. ஆங்கில எழுத்து…

  • தமிழ்99 விழிப்புணர்வு படம்

    பின்வரும் நிரல்துண்டை உங்கள் பதிவில் சேர்த்தால்,  <br /> <a href=”https://blog.ravidreams.net/?p=218″ mce_href=”https://blog.ravidreams.net/?p=218″><img src=”http://poorna.rajaraman.googlepages.com/tamil99.gif” mce_src=”http://poorna.rajaraman.googlepages.com/tamil99.gif”/></a>கணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்<br /> என்ற தமிழ்99 விழிப்புணர்வு படத்தை உங்கள் வலைப்பதிவில் இடலாம்.

  • in tamil alsoவா?

    தனியாக ஒரு தெலுங்குக்காரர் தமிழர்களிடம் மாட்டிக் கொண்டால் அவர் பாடு பெரும் பாடு தான். கருணையே இல்லாமல் GULTI, GOLTI என்று எவ்வளவு ஓட்டித் தள்ளினாலும், நட்புக்கு உலை வைக்காமல் சிரித்தபடியே தாங்கிக் கொள்ளும் நல்லவர்கள். பிரசாத் என்று ஆந்திராவைச் சேர்ந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். பேசுவதற்கு ஒன்றுமில்லாவிட்டால், “பிரசாத், what is that in telugu, what is this in telugu” என்று அவரைப் போட்டு புரட்டி எடுப்பது வழக்கம். 12ஆம் வகுப்பு வரை…

  • தமிழ்க் கணிமை ஆர்வலர்கள்

    நான் அறிந்த சில இணையத் தமிழ் நுட்ப ஆர்வலர்கள் பெயரைப் பதிந்து வைக்கிறேன். (எந்த வரிசையிலும் இல்லை) 1. முகுந்த் – தமிழா! அமைப்பின் முனைப்பான பங்களிப்பாளர்களில் ஒருவர். இவர் உருவாக்கிய எ-கலப்பை பல தமிழர்கள் கணினியில் எளிதாகத் தமிழ் எழுத உதவுகிறது. 2. மாகிர் – தமிழூற்று – தமிழர்களின் அறிவுச் சுரங்கம் என்ற பெயரில்  தமிழிணையம் சார்ந்து பல நுட்பப் பணிகள் ஆற்றி வருகிறார். தமிழ் இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், விக்கி இயக்கங்கள் தொடர்பில் பயனுள்ள…

  • தமிழ்நாட்டுத் தமிழ் x இலங்கைத் தமிழ்

    இலங்கைப் பேச்சுத் தமிழை, தமிழ்த் திரைப்படங்கள், இலங்கை வானொலி மூலம் சரியும் பிழையுமாக அறிந்திருந்தாலும், இணையத்தில் தமிழத் தளங்களைப் படிக்கத் தொடங்கிய பிறகு தான் இலங்கையின் எழுத்துத் தமிழ் வழக்குக்கும் தமிழ்நாட்டு வழக்குக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொண்டேன். இலங்கையின் வேறுபட்ட எழுத்து வழக்கு அவர்களின் வேறுபட்ட பலுக்கலின் விளைவே என்றாலும், இலங்கைத் தமிழ்ப் பலுக்கலை முழுமையாக அறிய வாய்ப்பு இல்லாது அவர்களின் எழுத்துக்களை மட்டும் படிக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உதவியாக இந்த இடுகை. ஜ இலங்கைத்…

  • அம்மாபட்டித் தமிழ்

    அம்மாபட்டி – நான் 10 வயது முதல் 17 வயது வரை வளர்ந்த ஒரு மிகச் சிறிய ஊர். இப்பொழுதும் நாங்கள் குடி இருக்கும் ஊர். ஒரு 50 குடும்பங்கள் இந்த ஊரில் குடி இருக்கும என்று நினைக்கிறேன். இது போல் மாவட்டத்துக்குப் பல அம்மாபட்டிகள் உண்டு. திருச்சி, புதுகை, சிவகங்கை என மூன்று மாவடங்களின் எல்லையில் இவ்வூர் அமைந்திருக்கிறது. மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ் என்று இருப்பது போல் நான் வளர்ந்த புதுகை, திருச்சி மாவட்டங்களில்…