Category: தமிழ்
-
இணையத் தமிழ் உள்ளடக்க உருவாக்கம் – தமிழ்நாடு அரசு கவனிக்குமா?
—
in தமிழ்என்றாவது, தமிழ் வளர்ச்சித் துறை தொடர்புடைய தமிழக அரசு அமைச்சர் / அதிகாரி கண்ணில் படலாம் என்ற பேராசையில், தமிழக அரசுக்கு சில வேண்டுகோள்கள். * தமிழ்நாடு அரசு இணையத்தளத்தின் அனைத்துத் தகவல்களையும் முழுக்கத் தமிழில் தாருங்கள். TSCII வடிவில் இருந்தாலும், கூடவே ஒருங்குறித் தமிழிலும் ஒரு பதிப்பு தாருங்கள். இதன் மூலம் தமிழக அரசுத் தகவல்களை கூகுள் போன்ற தேடுபொறிகளின் மூலம் தேட இயலும். * தமிழ்நாடு அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி பாட நூல்கள்…
-
தமிழ் செல்பேசி விசைப்பலகை வடிவமைப்புக்கான தேவை
—
in தமிழ்செல்பேசியில் உள்ள ஆங்கில விசைப்பலகையைக் கொண்டு தமிழ் குறுஞ்செய்தித் தகவலை எழுதுவது நேரத்தை வீணாக்கும், அயர்வூட்டும் வேலையாகும். எடுத்துக்காட்டுக்கு, உண்ணி என்று எழுத ஆங்கில எழுத்துக்களான uNNi – யை அழுத்த எத்தனை விசை அழுத்தங்கள் வருகிறது என்று பார்ப்போம். u – 2 விசையழுத்தங்கள் (8ஆம் எண் விசையில் tக்கு அடுத்து u அழுத்த வேண்டும்). N – குறைந்தது 2 விசையழுத்தங்கள் (6ஆம் எண் விசையில் mக்கு அடுத்து n அழுத்த வேண்டும். ந,…
-
இலக்கண அடிப்படை தமிழ் சொற்திருத்திக்கான வரைவு
Due to time constraints, I am posting the draft in English. This idea of a grammar based spell checker for Tamil was proposed by Mauran and drafted by me in Thamizha! group but yet to be materialised. I welcome all Tamil computing enthusiasts to help realise this project. — I see an immediate possibility to…
-
ஒருங்குறி குறியாக்கத்தில் தமிழில் தோன்றும் வழுக்கள்
—
in தமிழ்இன்று ஒருங்குறி குறியாக்கத்தில் அமைந்த தமிழ்த் தளம் ஒன்றில் Firefox உலாவி கொண்டு தேடுகையில் பின்வரும் வழுவைக் கண்டேன். உண்ட என்று தேடினால் உண்டு, உண்டான் உண்ட் என்ற எல்லா உண்+டகர வரிசைச்சொற்களையும் காட்டுகிறது. ஒருங்குறி குறியாக்கத்துக்கு டா, டு, டி இவையெல்லாம் வேறு வேறு எழுத்துக்கள் என்று தெரியவில்லை. ஒருங்குறி குறியாக்கம் கணினியில் தமிழைக் காட்ட உதவும் அளவு கணித்தல் வேலைகளைச் செய்ய உதவவில்லை. எடுத்துக்காட்டுக்கு, திருக்குறளில் எத்தனை இடங்களில் உண்ட என்று வருகிறது என்று…
-
ஒருங்குறி, எ-கலப்பை, விசைப்பலகை – ஒரு குட்டிக் கதை
பலரிடமும் நீங்கள் எந்த விசைப்பலகையில் கணினியில் தமிழில் எழுதுகிறீர்கள் என்று கேட்டால், “எ-கலப்பை” அல்லது “ஒருங்குறித் தமிழ்” என்று பதில் வருகிறது. குறியேற்றம் வேறு, மென்பொருள் வேறு, விசைப்பலகை வேறு என்ற புரிதல் வியக்கத்தக்க அளவில் மிகக் குறைவாகவே இருக்கிறது. இது குறித்து தெளிவாக, விரிவாகப் புரிந்து கொள்ள மயூரனின் கட்டுரையைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன். தற்போதைக்கு, இது குறித்து எளிமையாக விளக்க ஒரு குட்டிக் கதை / உவமை இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்துப் பார்த்தேன்…
-
செருப்புக்காக காலை வெட்டுவது எப்படி?
—
in தமிழ்இன்றைய உதவிக் குறிப்பில், புதிதாக வாங்கிய மேலைநாட்டு ஆங்கிலச் சிந்தனைச் செருப்புக்குப் பொருத்தமாக உங்கள் தமிழ்க் காலை வெட்டுவது எப்படி என்று பார்ப்போம். 1. திற, மூடு, நிறுத்து, துவக்கு போன்ற பல சுருக்கமான தமிழ் வினைச்சொற்களை பயன்படுத்துவது சிரமம் என்பதால் பண்ணு என்ற ஒரே ஒரு “magic வினைச்சொல்லை” மட்டும் பயன்படுத்துங்கள். இதனுடன் open, close , start , stop போன்ற ஆங்கில வினைச்சொற்களைச் சேர்த்துக் கொள்க. இந்த முறையின் சிறப்புகள் – ஆங்கில…
-
தமிழ் அகரமுதலிகள்
—
in தமிழ்* ஆங்கில வழியத்தில் படித்து தமிழில் துறை சார் சொற்கள் அறியாதோர் பயன்படுத்த வேண்டியது தமிழ் இணையப் பல்கலை அகரமுதலி . இதனால், சொற்களைத் திரும்ப கண்டுபிடிக்கும் அசட்டுத்தனத்தையும் பொருத்தமற்ற சொற்களை புதிதாக உருவாக்கும் பிழையையும் தவிர்க்கலாம். * இலக்கியத்தில் உள்ள பழங்காலத் தமிழ்ச் சொற்கள், போன சில நூற்றாண்டுகளில் தமிழில் புழங்கிய பிற மொழிச் சொற்கள் குறித்து அறிய சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி விலை மதிப்பற்ற ஒரு களஞ்சியம். * வலைப்பதிவு (blog), திரட்டி (aggregator) போன்ற அண்மைய கால…
-
தமிழ் செய்தித் தளங்கள்
கூகுள் செய்திகளின் இந்திப் பதிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. விரைவில் பிற இந்திய மொழிப் பதிப்புகளும் வரும் என்கிறார்கள். இந்தியில் ஒருங்குறி அல்லாத பிற எழுத்துருக்களில் அமைந்திருந்த தளங்களின் தகவல்களையும் ஒருங்குறிக்கு மாற்றி வெளியிடும் பொறுப்பை கூகுளே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் தினமலர், தினகரன், விகடன் போன்ற தளங்கள் ஒருங்குறியில் செய்தி வெளியிடுவதற்கான அறிகுறிகளை காணாதிருக்கையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. குறைந்தபட்சம் செய்தியோடைகளையாவது வழங்க இது போன்ற முன்னணி செய்தித் தளங்கள் முன்வரவேண்டும். தற்போது MSN தமிழ், Yahoo தமிழ்,…
-
Puncture ஒட்டும் கடைக்குத் தமிழில் என்ன பேர்?
—
in தமிழ்இது சயந்தன் எனக்கு சொன்ன கதை ! 1990களில் தமிழீழத்தில் உள்ள கடைகளுக்கு எல்லாம் தமிழ்ப் பெயர் வைக்குமாறு விடுதலைப் புலிகள் வலியுறுத்திய காலமாம். bakery – வெதுப்பகம் ஆனது. bank – வைப்பகம் ஆனது. இந்த வரிசையில், tyreல் உள்ள துளை (puncture) ஒட்டும் கடைக்கு ஒருவர் தமிழ்ப் பெயர் எழுதி வைத்தாராம். அது என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சயந்தன் அந்தப் பெயரை சொன்ன போது விழுந்து விழுந்து சிரித்தேன் 🙂 அந்தப் பேர்..…
-
முதல் 10 உலக மொழிகள்
—
in தமிழ்உலகின் முதல் 10 மொழிகளைப் பத்தின விரிவான ஆய்வுக்கட்டுரைய இங்க பார்க்கலாம். மொழியியல் ஆர்வம் உள்ளவங்க கண்டிப்பா படிக்க வேண்டிய ஆய்வு. பேசும் மக்கள் எண்ணிக்கைய அடிப்படையா வைச்சா சீனம் தான் முதல் இடத்துல இருக்கணும் (சீனம்கிறது ஒரு மொழி இல்லீங்க. எழுத்து மட்டும் தான் ஒன்னு. ஆனா, நிறைய வெவ்வேறு பொருள், உச்சரிப்பு உள்ள சீனப் பகுதியில் உள்ள மொழிகள் எல்லாத்தையும் மொத்தமா சீனம்னு சொல்லிடுறாங்க.இந்த மொழிகளை வட்டார வழக்குன்னு கூட சொல்ல முடியாது. அதுக்கும்…