இலங்கைத் தமிழ் X இந்தியத் தமிழ்

ஒரு குறிப்புக்காக, இலங்கைத் தமிழ் X இந்தியத் தமிழ் வேறுபாடுகளைக் குறித்து நான் கற்றுக் கொள்பவற்றை இங்கு தொடர்ந்து பதிந்து வைக்க இருக்கிறேன். இலங்கைத் தமிழ் என்று நான் குறிப்பது பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழாக இருக்கலாம். இல்லை, வேறு ஒரு இலங்கை வட்டாரத் தமிழாகவும் இருக்கலாம்.

வீட்டில் நிண்டிட்டு போங்கோ | இருந்துட்டுப் போங்க

மழை துமிச்சுக்கொண்டு இருக்கு | தூறிக்கிட்டு இருக்கு

சத்தி வருது | வாந்தி வருது

பஞ்சியா இருக்கு | சோம்பலா இருக்கு

வடிவா இருக்கு | அழகா / நல்லா இருக்கு

Phone எடுங்கோ | Phone அடிங்க

கதிரை | நாற்காலி

துவாய் | துண்டு.. (உடல் துவட்டப் பயன்படும் துணி..)

குஞ்சு | குட்டி (செல்லமாக விளிக்கும் சொல்..)

கடையில் வேண்டு | கடையில் வாங்கு

விசர் | பைத்தியம்

கதைப்பார் | பேசுவார்

பேசுவார் | திட்டுவார்

பகிடி | கிண்டல்

காணும் | போதும்


Comments

8 responses to “இலங்கைத் தமிழ் X இந்தியத் தமிழ்”

  1. நிண்டிட்டு – சீண்டல் என்னும் பொருளில் தஞ்சாவூர் பக்கம் பயன்படுகிறது

    துமி – தயிர் கடையும்போது ‘துமி’ கண்ணில் பட்டுவிடும் என்று தள்ளிப் போக சொல்வார்கள்; வேகமாக வந்து விழும் திரவத்துளி

    விசர் 🙂 (சுய)விசாரணை அதிகமானால் ஏற்படும் நிலை 😉

    —Phone எடுங்க | Phone அடிங்க—

    ஓ!

    —பேசுவார் | திட்டுவார்—

    😀

  2. யாரய்யா அது இந்தியத் தமிழ் தெரியாத ஆள்…. சில கரெக்ஷ்ன்(அதாங்க நீங்க திருத்தம்னு சொல்வீங்களே அது)

    கதிரை | சேர்
    துவாய்| டவல்
    குஞ்சு |பேபி

  3. //யாரய்யா அது இந்தியத் தமிழ் தெரியாத ஆள்…. சில கரெக்ஷ்ன்(அதாங்க நீங்க திருத்தம்னு சொல்வீங்களே அது)

    கதிரை | சேர்
    துவாய்| டவல்
    குஞ்சு |பேபி//

    🙂 இது நல்லாயிருக்கு.

  4. //கொஞ்சம் உங்க மறுமொழியைப் படிச்சுப் பார்த்துட்டுப் பதிப்பிக்கிறேனே.. நன்றி – ரவி//

    இது இன்னும் நல்லாயிருக்கே. 🙂

  5. பாலா – துமி குறித்த தகவல் புதிது. நன்றி. எங்க ஊரில் இதே தான் சொல்வார்களா, இப்படி சொல்வார்களா என்பது மறந்து விட்டது 🙁 அம்மா கிட்ட கேட்கணும்.

    நாகு – 🙂

    கலை – தனித்தளத்தில் wordpress நிறுவிக்கிட்டா, இப்படி நமக்குப் பிடித்த மாதிரி தள அறிவிப்புகளை மாத்திக்கலாம் 🙂 Your comment is waiting approval என்று சொல்லி மிரட்டுவதை விட, தனித்தன்மையோட இன்னும் கனிவா நமக்குப் பிடிச்ச மாதிரி அறிவிப்புகளை மாத்திக்கலாம்.

  6. Phone எடுங்க – எடுங்க என்பதை விட எடுங்கோ என்பது தான் பேச்சு மொழிவழக்கில் அதிகம் இருக்கிறது

    சித்தா – சித்தா என்பது குழந்தைகள் மட்டுமே செல்லமாகப் பேசுவது, இதனை வேறுபாட்டு எல்லைக்குள் அடக்க முடியாது

    குஞ்சு – குழந்தைகளை மட்டுமல்ல மனைவியையும் தான் 😉

    பேசுவார் – இதை விட ஏசுவார் என்பது அதிக புழக்கத்தில் இருக்கு,

    சரி என் கருத்துக்கள் இரண்டு

    தமிழ்மணம் போன்ற திரட்டிகளைப் பகீஷ்கரிக்கும் பதிவர்களில் ஒருவராக இருப்பதால் உங்கள் பதிவுகளை அடிக்கடி வாசிக்கமுடியாத வாசகர்களில் நானும் ஒருவன்

    உங்களின் தள வார்ப்புரு அவ்வளவாகக் கவரவில்லை

  7. கானா பிரபா – நீங்கள் சொன்ன திருத்தங்கள் சிலவற்றைச் செய்துள்ளேன். ஏசுவார் என்பது தமிழகத்திலும் வழக்கில் இருக்கு.

    கூகுள் ரீடர் பயன்படுத்திப் பாருங்களேன். பதிவுகள் தவிர பல ஆங்கில, தமிழ்த் தளங்களையும் அதன் மூலம் ஒரே இடத்தில் படிக்க முடியுமே?

    பல வார்ப்புரு மாற்றி கடைசியில் இந்த cutline வார்ப்புருவில் பிடித்துப் போய் அப்படியே விட்டு விட்டேன். வேறு தேடிப் பார்க்கிறேன்.

  8. என்ர மனுஷி – என் மனைவி