Tag: நாட்குறிப்பு
-
என் வலைப்பதிவுப் போக்குகள்
—
in வலைப்பதிவு2007 ஆம் ஆண்டை “வலைப்பதிதல் ஆண்டு” என்று நாட்குறிப்பில் எழுதத்தக்க அளவு வலைப்பதியும் வேகம் கூடுகிறது!! 2007 தொடக்கத்தில் துறை சார் பதிவுகள் என்று ப்ளாகரில் எண்ணற்ற புதுப் பதிவுகள் தொடங்கி, பராமரிப்பில் விழி பிதுங்கி, தொடக்க ஆர்வம் குன்றி நிறைய பதிவுகளை அழித்து விட்டேன். இனி புதிதாய் ஒரு வலைப்பதிவையும் எங்கும் திறக்கும் ஆர்வம் இல்லை. இருக்கிற வலைப்பதிவுகள் போதும் 🙂 தனித்தளத்துக்கு நகர்வது, திரட்டிகளில் இருந்து விலகுவது வலைப்பதியும் வேகத்தைக் குறைக்கும் என்று நினைப்பு…
-
பிற தளங்களில் எழுதியவை..
—
in பொதுஇந்தத் தனிப்பதிவு போக, அப்பப்ப பிற தளங்களில், கூட்டுப் பதிவுகளில், நண்பர்களின் பதிவுகளில் எழுதுவதும் ஒலி உரையாடல்களில் பங்குபெறுவதும் உண்டு. அவற்றில் சிலவற்றை ஒரு குறிப்புக்காக இங்கு தொகுத்து வைக்கிறேன். அண்மைய இடுகைகள் தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள் தமிழாக்கத் தொனி குறித்த உங்கள் கருத்து தேவை ஆன்மிகப் பதிவுகளால் தமிழ் இணையத்துக்கு நன்மை உண்டா? பதிவர் சுதந்திரமும் போலித்தனமும் தமிழ்99 – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தமிழ் வலைப்பதிவுலகம் 2 நிமிடத்தில் செய்த திரட்டி…
-
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
—
in நாட்குறிப்புநெதர்லாந்தில், இந்தியா குறித்து: 1. சாதின்னா என்ன? ஏன் சாதி இருக்கு? யார் சாதியை உருவாக்கினாங்க? பதிலை முழுசா விளக்குவதற்குள் மண்டை காய்ந்து ஓடி விடுவார்கள்! 2. நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை எப்படி ஏத்துக்கிறீங்க? பெண்ணைத் தெரியாம எப்படி கூட வாழ்றது? திருமணத்துக்கு மதம், சாதி, மொழி-ன்னு என்னென்ன தடைகள் வரும்? நெருங்கிய சாதிப் பெண் என்றால் மணந்து கொள்ளலாமா? அது எப்படி அத்தை மகளை மணக்கிறீங்க? நான் சொல்றது – நெருங்கிய சாதி என்ன, அத்தை மகளே…
-
abcd, அஆஇஈ, 123, டேய் போலீஸ்காரா, நாய்க்குட்டி, பூனைக்குட்டி, ஆட்டுக்குட்டி !
—
in நாட்குறிப்புஅஞ்சலிக்குப் போட்டியாய் ஒரு குட்டிப் பதிவரை இறக்கலாம்னு என் அக்கா பையனை ”தாஜா” 😉 பண்ணேன். பெரிய மனசு பண்ணி, ஒலிப்பதிவாவே போட்டுக் கொடுத்துட்டான் 🙂 குழலினிது யாழினிது என்பர் தன் அக்கா மகன் மழலைச்சொல் கேளா தவர் !
-
நாடி ஜோசியம் !
—
in நாட்குறிப்புஇந்த முறை ஊருக்குப் போனப்ப, மருதமலை அடில உள்ள ஒரு நாடிஜோசிய மையத்துக்கு அக்கா என்னை அழைச்சுக்கிட்டுப் போனாங்க. தம்பி ஆராய்ச்சி பண்ணாம இணையத்துலயே கிடக்குறானே, தேறுவானானு அவங்க கவலை..என்னடா வெளிநாட்டுல ஏதாச்சும் girl friend கிடைக்குமான்னு என் கவலை 😉 ஆக, திருமணக்காண்டம், வேலை காண்டம் இரண்டும் பார்க்குறதுன்னு முடிவு. ஏற்கனவே, அக்காவப் பத்தின விவரங்கள் எல்லாம் அந்த மையத்துல தெளிவா சொல்லி இருந்ததால, நம்மள பத்தி எப்படி சொல்லுறாருன்னு ஒரு பரபரப்பு. போன உடன…
-
எத்தனை பேர்?
—
in நாட்குறிப்புஇன்று நம்மை நினைத்துக் கொள்பவர்கள் எத்தனை பேர்? நம் வெற்றிக்கு வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி விருந்து கேட்காமல், அதைத் தன் வெற்றியாக கருதி அடுத்தவர்களிடம் சொல்லி மகிழ்பவர்கள் எத்தனை பேர்? நம் இழப்புக்கு வருந்துபவர்கள் எத்தனை பேர்? எப்படி இருக்கிறாய் என்று கேட்பதற்காக மெனக்கெட்டு அழைப்பவர்கள் எத்தனை பேர்? அடுத்து நம்மை எப்போது பார்ப்போம் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்? நாம் கேட்காமலேயே தேவையறிந்து உதவுபவர்கள் எத்தனை பேர்? கடனாகக் கொடுக்காமல், கொடுக்கும் பணம் நமக்கு உதவுமே…
-
வெயில் !
—
in நாட்குறிப்புதமிழ்நாட்டில் இருந்த வரைக்கும் வெயில் பத்தி அலுப்பு தான் இருக்கும். ஆனா, ஐரோப்பிய வாழ்க்கைல வெயிலைப் பார்த்து தான் வாழ வேண்டியதா இருக்கு..இங்க வந்த புதுசில ”The weather is great, right?” னு யாராச்சும் சொன்னா ”சரி, அதுக்கென்ன இப்ப”-னு சலிப்பா இருக்கும். ஆனா, ஒரு முழு ஐரோப்பிய குளிர் காலத்துல மண்டை காஞ்சப்புறம் வெயிலோட அருமை இப்ப புரிய ஆரம்பிச்சிருச்சு. இத்தனைக்கும் நெதர்லாந்து வரலாற்றிலயே இந்த குளிர் காலம் தான் வெப்பம் கூடின ஆண்டாம்.…
-
ஒரு நதி போல…
—
அன்புன்னா என்ன? இந்தக் கேள்வி தோன்றின முதல் முறையே அன்பைத் தவற விட்டு ரொம்ப நேரமாயிடுச்சோன்னு தோணுது.. இந்தக் கேள்வி எனக்கு எப்ப முதன் முதல தோணுச்சுன்னு சரியா நினைவில்லை. ஆனா, அடிக்கடி வந்து போகும் கேள்வி இது. இதுக்கான பதில் புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. புரிஞ்சும் ஏத்துக்க முடியாத மாதிரியும் இருக்கு. புரியாட்டியும் தேடல் மட்டும் ஓயாம இருக்கு. ஒரு நாள். பெரியம்மா வீட்டுக்குப் போயிருந்தேன். யாரோ யாருக்கோ “நாங்க அத…
-
ஜட்டி காயப் போடுவது எப்படி?
—
ராத்திரி துவைச்சு வீட்டுக்குள்ளயே காயப் போட்ட எல்லா ஜட்டியும் காயல. drierக்கு உள்ள payment cardலயும் பணம் இல்ல. துவைச்சு காஞ்ச ஜட்டியும் ஒன்னும் இல்ல. ஜட்டி போடாம பள்ளிக்கூடம் போய் பல வருசம் ஆச்சு. ஆக, அன்னிக்கு காலைல தான் இந்த கேள்வி உதிச்சுச்சு. உடனடியாக ஜட்டி காயப் போடுவது எப்படி? ம்..பால் காய வைச்சுக்கிட்டே யோசிச்சப்ப தான் அந்த idea வந்துச்சு..பால் எல்லாம் காய வைக்கிற micro wave oven க்கு ஜட்டி காய…
-
திரும்பத் திரும்ப பார்க்கும் திரைப்படங்கள்
—
சின்னப் வயசுல விரும்பினாலும் விரும்பாட்டியும் விதி, சம்சாரம் அது மின்சாரம் பட கதைவசன ஒலிநாடாக்கள் வீட்டிலோ பக்கத்து வீட்டிலோ ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும்.. நிறைய படங்கள் நல்லா இருந்தாலும் சில படங்கள் தான் அலுக்காம திரும்பத் திரும்ப அலுக்காம பார்க்க முடியுது.. வளந்த வயசுல ரஜினி படங்கள் அப்படி அலுக்காமல் பார்த்தது.. சன் தொலைக்காட்சி புண்ணியத்தில் பாட்ஷா படத்த நிறைய தடவை பார்த்திருக்கேன். கில்லி, பிதாமகன், காக்க காக்க இதெல்லாம் திரையரங்கிலயே மூணு முறைக்கு மேல பார்த்தது.…