நெதர்லாந்தில், இந்தியா குறித்து:
1. சாதின்னா என்ன? ஏன் சாதி இருக்கு? யார் சாதியை உருவாக்கினாங்க?
பதிலை முழுசா விளக்குவதற்குள் மண்டை காய்ந்து ஓடி விடுவார்கள்!
2. நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை எப்படி ஏத்துக்கிறீங்க? பெண்ணைத் தெரியாம எப்படி கூட வாழ்றது? திருமணத்துக்கு மதம், சாதி, மொழி-ன்னு என்னென்ன தடைகள் வரும்? நெருங்கிய சாதிப் பெண் என்றால் மணந்து கொள்ளலாமா? அது எப்படி அத்தை மகளை மணக்கிறீங்க?
நான் சொல்றது – நெருங்கிய சாதி என்ன, அத்தை மகளே ஆனாலும் எந்தப் பிரச்சினையும் இல்லாம காதல் திருமணம் கைகூடுறது ஒரு கொடுப்பினை தான் !
3. இந்தியால பல மொழி இருக்கே? எப்படி தொடர்பு கொள்றீங்க? அது என்ன ஒரு நாட்டுல இருந்து வந்துட்டு ஒருவருக்கு
ஒருவர் ஆங்கிலத்துல பேசிக்கிறீங்க?
4. இந்தியாவுல ஏன் பணக்காரன் – ஏழைக்கு இடையில் இவ்வளவு பெரிய பிரிவு இருக்கு?
5. இந்தியாவுல பாம்பு இருக்கா? வேற என்ன எல்லாம் விலங்கு இருக்கு? ஏன் மாட்டுக் கறி சாப்பிட மாட்டீங்க? எந்தெந்த சாமிக்கு என்னென்ன வாகனம்?
6. இந்தியா ஏன் இலங்கைப் பிரச்சினையில் தலையிட மாட்டேங்குது?
7. கிரிக்கெட்னா என்ன? அத எப்படி விளையாடுறது? இந்தியால ஏன் கால்பந்து பிரபலமாகலை?
கிரிக்கெட்னா குதிரை மேல ஏறி ஆடுற ஆட்டமான்னு ஜெர்மனில ஒருத்தன் கேட்டான்..அடப்பாவிகளா!
8. இப்ப இருக்க காந்தி எல்லாம் மகாத்மா காந்தியின் உறவுகள் தான?
9. எப்படி இந்து மதத்தில் இவ்வளவு கடவுள்கள்? உனக்கு யாரைப் பிடிக்கும்? ஏன் பிடிக்கும்? ஒரு கடவுகளுக்கு இன்னொருவர் என்ன உறவு?
அலுவலகத்தில்:
வார இறுதி எப்படி போச்சு? விடுமுறைக்குப் போறியா? அம்மா அப்பாவை எப்ப இங்க அழைச்சிட்டு வர்ற? weather மோசமா / நல்லா இருக்கு இல்ல?
Project meetingல்:
So how about the results?
#$%&* 🙁
தமிழர் அல்லாத இந்தியர்கள்:
ஏன் இந்தி கத்துக்க மாட்டீங்கிறீங்க? ஏன் இந்தி மேல வெறுப்பு? சமசுகிருதத்துல இருந்து தான தமிழ் வந்துச்சு? தமிழ் எவ்வளவு பழமையானது? தமிழ் எப்படி செம்மொழியாகும்? ஏன் உங்க மொழித் தூய்மையை வலியுறுத்துறீங்க? இந்தி படிச்சா நாட்டு ஒற்றுமை கூடும்ல?
உண்மையிலயே அறியாமையால கேட்டா விளக்கம் சொல்வேன். விதண்டாவாதத்ததுக்குக் கேட்டால், “போடா, புண்ணாக்கு”-னுட்டுப் போய்டுவேன். தமிழ், மொழி தொடர்பில நான் கொஞ்சம் sensitive தான். தெலுங்கு, கன்னடக் காரர்களுக்கு அவர்கள் மொழி தமிழில் இருந்து வந்தது என்று சொல்லிக் கொள்வது ஏதோ அவர்கள் உடம்பில் கம்பளிப்பூச்சி ஊர்வது போல் இருக்கும் போல. சமசுகிருதத்தில் இருந்து அவர்கள் மொழி வந்தது என்று சொல்லும் போது அவர்கள் முகத்தில் ஒரு 100 watts ஒளி பார்க்கலாம். தனித்தமிழ் இயக்கம், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் நடத்தியே தமிழின் நிலை இந்த அளவில் இருக்கிறது. பிற மாநிலத்தவர் போக்கைப் பார்த்தால், இன்னும் 50 ஆண்டுகளில் அவர்கள் மொழிகளின் நிலை பின்வருமாறு இருக்கலாம் – மெத்தப்படித்தவர்கள், ஆங்கில எழுத்துக்களில் தெலுங்குச் சொற்களை எழுதிக் கொண்டிருப்பார்கள். படிக்காதவர்கள், ஆங்கிலச் சொற்களைத் தெலுங்கில் எழுதி அதை தெலுங்காக்கி விட்டிருப்பார்கள். தமிழின் வளர்ச்சியை எந்த அளவு வலியுறுத்துகிறேனோ அதே அளவு வங்காள, தெலுங்கு நண்பர்களிடம் அவர்களின் மொழியின் இருப்பு, வளர்ச்சி, தொடர்ச்சி குறித்து வலியுறுத்தினால் வரும் பதில் – “Why unnecessarily think about all this..see the world is changing and we better learn english..these things all need to be done by government..blah blah blah” மொழி மீதான அறிவு, பற்று, காதல், உணர்வு, பிணைப்பு நம்மவர்களுக்கு ரொம்பவே கூட என்று தான் தோன்றுகிறது.
வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்புகையில் கேட்கப்படுவது:
அபத்தா, அமத்தா, அத்தை, சித்திகள்:
உங்க நாடு எவ்வளவு தொலைவில இருக்கு? எவ்வளவு நேரம் பயண நேரம்? உங்க நாட்டுல சாப்பாடு, குளிர் எப்படி? அங்க மாட்டுக் கறி, பன்னிக்கறி திம்பீங்களா? நீயா தான் சமைக்கணுமா? என்ன சமைப்ப? நம்ம ஊர் சாப்பாடு கிடைக்குமா? என்ன விலை? கோயில் இருக்கா? அதில என்ன சாமி இருக்கு? அது எவ்வளவு தொலைவு? எப்பெப்ப கோயிலுக்கு போவ? தண்ணி கிண்ணி அடிச்சுப் பழகிட்டியா? phone பேசுறதுக்கு ரொம்ப செலவு வராதா? நம்ம ஊர் ஆளுங்க எல்லாம் இருக்காங்களா? போய் பத்து மாசத்துல வந்துட்ட? அங்கனயே இருந்தா காசு மிச்சப்படுத்தலாம்ல?
மாமாக்கள்:
என்ன மாப்ளே படிச்சுக்கிட்டே போறீங்க? எப்ப சம்பாதிக்கிறது, கல்யாணம் கட்டுறது? நம்ம புள்ளைகளை எல்லாம் கட்டுவீங்களா? உங்களுக்குப் படிச்ச புள்ளை தானே ஒத்து வரும்?
டீக்கடை பெரிய மனுசர்கள்:
அங்க வேலை எப்படி தம்பி? எவ்வளவு நேரம் வேலை? எவ்வளவு சம்பளம்? மிச்சப்படுத்தலாமா? நம்ம வீட்டுத் தம்பி Polytechnique படிச்சிருக்கான்? அங்க வேலை கிடைக்குமா? Agent மூலமா போனீங்களா? Ticket செலவு எவ்வளவு? அதுவும் உங்க companyல கொடுப்பாங்களா? நெதர்லாந்து எங்க இருக்கு?
நண்பர்கள்:
மச்சான், CD- கீடி, P*** magazines, சரக்கு வாங்கி வந்திருக்கலாம்ல? அங்க figureங்க எல்லாம் எப்படி? என்னென்ன ஊர் பார்த்த? இன்னும் virgin-னு சொல்லாத? தண்ணி அடிக்காம, சிகரெட் புடிக்காம, ****** பண்ணாம நீ எல்லாம் ஏன்டா europeல இருக்க? பல் இல்லாதவனுக்குத் தாண்டா பக்கோடா கிடைக்குது? அடுத்து என்ன பண்ற மச்சி? பார்த்து, பேசி ரொம்ப நாளாச்சுல்ல?
அம்மா, அப்பா, அக்கா, தங்கை:
இன்னும் கொஞ்சம் நாள் இருக்க மாதிரி வந்திருக்கலாம்ல? வந்த உடன போற? எப்ப திரும்ப வர்ற? வந்தா வீட்ல இருக்காம ஏன் friends friendsனு நாய் மாதிரி சுத்திக்கிட்டுத் திரியுற? சாப்பிட என்ன செஞ்சு தரட்டும்? இங்க இருந்து என்ன வாங்கிட்டுப் போகணும்? காசு இல்லைன்னு சொல்லிட்டு அங்க இருந்து ஏன் இவ்வளவையும் வாங்கிட்டு வர்ற?
காணாமல் போன நண்பர்கள் orkutல் கண்டுபிடித்தால்:
How’s life machaan? what’s up da? no scraps? what’s ur research about da? where r u da now?
நெதர்லாந்தில் இருந்து வீட்டுக்கு phone பேசும்போது:
சாப்டியா? என்ன சாப்ட? நல்லா இருக்கியா? உடம்பு நல்லா இருக்கா? அடுத்து எப்ப ஊருக்கு வர்ற? என்னாச்சும் வாங்கி அனுப்பவா? அங்க என்ன மணி இப்ப? படிப்பு எப்படி போகுது? வெயில் அடிக்குதா, குளிரா? மழை பெய்யுதா? அந்த DVD வாங்கி அனுப்புறியா? எனக்கு என்ன வாங்கிக் கொடுத்து விடுற? என்ன படம் பார்த்த? செலவுக்கு காசு இருக்கா?
இணையத்தில்:
விக்கிபீடியாவை எப்படி நம்புவது? விக்கிபீடியாவுக்கு எப்படி, ஏன் பங்களிக்க வேண்டும்? உங்கள் வலைப்பதிவை ஏன் திரட்டிகளில் இணைக்கவில்லை?
நான் அடிக்கடி கேட்கும் கேள்விகள்:
வீட்டுக்குப் பேசும் போது:
அக்கா பேசிச்சா? harish எப்படி இருக்கான்? உடம்பு நல்லா இருக்கா, அம்மா? அப்பா எங்க? பணம் கிடைச்சுச்சா? மழை பேஞ்சுச்சா? வயல்ல என்ன போட்டிருக்கு? மாடு கன்னுக்குட்டி போட்டிருச்சா? எங்க போனீங்க? வீட்டுக்கு யார் வந்தாங்க ? என்ன சாப்பாடு?
எனக்குள் நான்:
அன்புன்னா என்ன? நட்புன்னா என்ன? கற்புன்னா என்ன? உண்மைன்னா என்ன? காதல்னா என்ன? What’s the purpose of living? Is this all worth it?
விடையே இல்லாத கேள்விகள்:
ஏன் இப்படி பண்ண? நான் என்ன தப்பு பண்ணேன்? சொல்லிட்டு செஞ்சிருக்கலாம்ல?
Comments
16 responses to “அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்”
All are very good questions, especially the ones, you ask yourself. 🙂
ஐயோ ரவி,
இத்தனை கேள்விகளின் மத்தியிலா உங்கள் வாழ்க்கை..!!!! 😉
தெலுங்கர், கன்னடர் எக்கேடாவது கெட்டுப் போகட்டும் நாம் நம்ம மொழிழை பார்ப்போம்… வழர்ப்போம்!!!! 🙂
சிங்களவர் மத்தியில் சாதி இப்போது பெரும்பாலும் மறைந்துவிட்டது.. அவர்களிடம் கூட இப்படி நான் மாட்டி முழித்ததுண்டு.. ஆனாலும் சிங்களப் பெண்கள் பலபேருக்கு தமிழர் பண்பாடு கலாச்சாரம் மீது அன்பான பொறாமை உண்டு!! 🙂
அன்புடன்,
மயூ
nice, applicable to every one and everywhere,
குதிரையில கிரிக்கற் விளையாடுறது.. ஐயோ… தாங்க முடியல என்னால!! 🙂
//நாம் நம்ம மொழிழை பார்ப்போம்… வழர்ப்போம்!!!//
ஓம் ! வழர்ப்போம் 🙂
Hi Ravi
இந்த பதிவு தாங்கள் அருகிலிருந்து உரையாடியதை போன்ற உணர்வை தருகிறது, அருமை!
அருமை நண்பா !
// அன்புன்னா என்ன? நட்புன்னா என்ன? கற்புன்னா என்ன? உண்மைன்னா என்ன? காதல்னா என்ன? What’s the purpose of living? Is this all worth it?
//
என்னூள் இருக்கும் கேள்விகளும் கூட !
கேள்விகள் கேட்டால்தான் விடைகள் கிடைக்கும்.
நாம், நம் சொந்தம், இன்று, நாளை என்று குறிகிய வட்டத்தில் வாழ்பவர்களுக்கும் பணம், பணம் என்று அலைபவர்களுக்கும் இது புரியாது.
இந்த பதிவு பலரை நிச்சயமாக சிந்திக்க தூண்டியிருக்கும்.
உங்க வாழ்க்கையின் எல்லா முனைகளிலிருந்த பார்வைகளை கேள்விகளை மட்டும் கொண்டு அழகா சொல்லியிருக்கீங்க. நான் அடிக்கடி சொல்லாத ஒன்று: உங்கள் எண்ண மற்றும் எழுத்து நடையப் பார்த்து நான் பொறாமைப்படுறேன். 🙂
நன்றி சுந்தர். என்ன இருந்தாலும் உங்களை மாதிரி பலக்கிய விக்கிப்பீடியா கட்டுரை எழுத முடியலைன்னு எனக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை தான் 😉
http://www.oligoglot.com அப்படிங்கற தளத்த பதிவு பண்ணியிருக்கேன். அதுல வேர்டுபிரச நிறுவி விரைவில் தமிழ்ல எழுதத் துவங்கனும். ம் …
http://oligoglot.com – www இன்னும் வேல செய்யல.
மகிழ்ச்சி சுந்தர். விரைவில் தமிழ், வேர்ட்பிரெஸ் ரெண்டுக்கும் நல்ல கொள்கை பரப்பாளரை எதிர்ப்பார்க்கிறேன் 😉
Jessie…
Nice Post!…
வெளி நாட்டில் கேட்கப்படும் கேள்விகளையும், மொழிப்பற்றில் தெலுங்கர் கன்னடர் கருத்துகளையும் தங்கள் குறிப்பில் வாசித்தேன். அவை உண்மைதான். நம்மை நாட்டின் ஒற்றுமைக்காக இந்தி படிக்கச் சொல்பவர்கள் புண்ணாக்குகள் தான். அதே ஒற்றுமைக்காக ஒரு சில சொற்களைத் தமிழிலோ பிற மாநில மொழிகளிலோ தெரிந்து வைத்துக்கொள் என்று அந்தப் புண்ணாக்குகளிடம் சொல்லிப் பாருங்கள் அப்போது தெரியும் அவர்கள் வெத்து வேட்டுகள் என்பது.
அருமை தொடருங்கள்
வாழ்த்துகள்
கவிஞர்வாலிதாசன்
முகவை-1
9894887705