Category: வலைப்பதிவு
-
தமிழ் இணைய அறிமுகப் பட்டறை: தன்னார்வலர்கள் தேவை
—
சூன் 23-27, 2010 நடக்கும் உலகத் தமிழ் இணைய மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ்க் கணினி, இணைய நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெறுகிறது. இதில் தமிழ் இணையம் குறித்த அறிமுகம், பயிற்சி அளிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி, தமிழ் இணைய அறிமுகம், தமிழில் இணைய அறிமுகம், வலைப்பதிவுகள், விக்கிப்பீடியா, கட்டற்ற மென்பொருள் இயக்கம் போன்ற அடிப்படைக் கருக்களில் பயிற்சி அளிக்கலாம். தமிழ் இணையத்தில் பால் ஆர்வமுள்ள நண்பர்களாக இந்த நிகழ்ச்சியைக் கூடிச் செய்து கலைவோம்.…
-
வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி?
—
in வலைப்பதிவுஆர்வமுள்ள ஒரு துறை, தொடர்ந்து வலைப்பதிதல், பிற ஆர்வலர்களுடன் உறவாடல், பணம் ஈட்டுவது குறித்து தெளிவான திட்டமிடலும் முயற்சியும் இருந்தால் வலைப்பதிவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணம் ஈட்டுவதற்கு பல வழிகள் உள்ளன. நேரடி வழிகள் 1. வலைப்பதிவில் விளம்பரம் வலைப்பதிவில் பணம் என்றால் பலரும் புரிந்து கொள்வந்து இந்த நேரடி வழியைத் தான். வலைப்பதிவு ஆங்கிலத்தில் இருந்தால் கூடுதல் வாய்ப்புகள். ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் வருகைகள் வேண்டும். Adsense, தட்டி விளம்பரங்கள், தொடுப்பு விளம்பரங்கள் மூலம் பணம்…
-
தமிழ் வலைப்பதிவுகள்
—
in வலைப்பதிவுஎனக்குப் பிடித்த சில தமிழ் வலைப்பதிவுகள். நினைவுக்கு வரும் வரிசையில். 1. வளவு – தமிழ் மொழி, பண்பாடு குறித்த உரையாடல்களுக்கு. 2. வீணாய் போனவன் – அழகான, சுருக்கமான, மனதைத் தொடும் கவிதைகளுக்கு. 3. செவ்வாய்க்கிழமை கவிதைகள் – மனிதர்கள் தொடர் அருமை. 4. மயூரன் எழுதும் GNU / Linux குறிப்பேடு – கட்டற்ற மென்பொருள்கள், அவற்றின் மெய்யியல் அறிய. 5. தமிழ் சசி – இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்த அலசல்கள். 6.…
-
கூகுளுக்குத் தமிழ் தெரியாது
—
இணையத்தில் எழுதும் அனைவரும் தமிழை, அதன் இலக்கணத்தை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் அல்லர். எனவே, கூகுள் காட்டும் முடிவுகளை வைத்து ஒரு சொல் எவ்வாறு எல்லாம் எழுதப்படுகிறது, இணையத்தில் ஒருங்குறியில் எழுதுவோரிடம் எச்சொல் அதிகம் புழங்குகிறது என்று அறியலாமே ஒழிய எது சரியான சொல் என்று முடிவு செய்ய இயலாது. பல சமயங்களில் அதிகம் புழங்கும் சொற்கள் சரியானவையாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும் 100% இப்படிச் சொல்ல இயலாது.
-
என் வலைப்பதிவுப் போக்குகள்
—
in வலைப்பதிவு2007 ஆம் ஆண்டை “வலைப்பதிதல் ஆண்டு” என்று நாட்குறிப்பில் எழுதத்தக்க அளவு வலைப்பதியும் வேகம் கூடுகிறது!! 2007 தொடக்கத்தில் துறை சார் பதிவுகள் என்று ப்ளாகரில் எண்ணற்ற புதுப் பதிவுகள் தொடங்கி, பராமரிப்பில் விழி பிதுங்கி, தொடக்க ஆர்வம் குன்றி நிறைய பதிவுகளை அழித்து விட்டேன். இனி புதிதாய் ஒரு வலைப்பதிவையும் எங்கும் திறக்கும் ஆர்வம் இல்லை. இருக்கிற வலைப்பதிவுகள் போதும் 🙂 தனித்தளத்துக்கு நகர்வது, திரட்டிகளில் இருந்து விலகுவது வலைப்பதியும் வேகத்தைக் குறைக்கும் என்று நினைப்பு…
-
புதிய தமிழ் வலைப்பதிவர்களுக்கான வேண்டுகோள்கள்
—
in வலைப்பதிவுபல புதிய தமிழ் வலைப்பதிவுகளைக் காண்கையில் மனதில் தோன்றிய எண்ணங்களை இங்கு பதிந்து வைக்கிறேன். இக்கருத்துக்களில் நான் செய்து திருத்திக் கொண்ட பிழைகளும் அடங்கும். இன்னும் நிறைய புதியவர்களைப் பார்க்கையில் கருத்துகள் மாறலாம். கூடலாம். தங்கள் வாசிப்புக்காக மட்டுமே எழுதுவோர், நிகழ் வாழ்க்கை நட்பு வட்டத்துக்கு மட்டும் எழுதுவோர் இவ்வேண்டுகோள்களைக் கண்டு கொள்ள வேண்டாம். ஆனால், முன் பின் அறிமுகமில்லா பலரும் தன் எழுத்துக்களைத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று எழுதுவோர் கவனிக்கலாம்.
-
தமிழ் வலைப்பதிவர்களுக்குப் 10 வேண்டுகோள்கள்
—
in வலைப்பதிவுதொடர்ந்து பல தமிழ் வலைப்பதிவுகளை வாசித்து வரும் வகையில் தமிழ் வலைப்பதிவர்களை நோக்கி சில வேண்டுகோள்களை வைக்க விரும்புகிறேன்.
-
திரட்டிகளைச் சாராமல் பதிவுகளை அறிமுகப்படுத்துவது எப்படி?
—
in வலைப்பதிவுதமிழ்த் திரட்டித் தளங்களை அறிமுகப்படுத்துவதற்குப் பதில் கூகுள் ரீடரையும் நாமே உருவாக்கும் opml கோப்புகளையும் அறிமுகப்படுத்தினாலே நாளடைவில் திரட்டிகள் உதவியின்றி பதிவர்களால் இயங்க முடியும்.
-
சென்னை வலைப்பதிவர் பட்டறை திட்டமிடப்பட்டது எப்படி?
—
in வலைப்பதிவு989 மடல்கள். இரண்டு மாத உழைப்பு, திட்டமிடல். நூற்றுக்கணக்கில் தொலைபேசி உரையாடல்கள். ஒவ்வொரு வாரமும் பட்டறை குறித்த திட்டமிடலுக்கான நேரடி சந்திப்புகள். அரங்கத்தை இறுதி செய்வது, குறுந்தகடு, நூல் அச்சிடல் வேலை என்று இவற்றுக்காக குறைந்தது 15 மனித உழைப்பு நாட்களாவது செலவு இடப்பட்டிருக்கும். இவற்றின் விளைவாகத் தான் பதிவர் பட்டறை சாத்தியமானது.
-
தமிழ்மணம், தேன்கூடு, கில்லி செயலிழப்பு !
—
in வலைப்பதிவுஇது மாதிரி நேரங்களில் தான் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளின் தேவை புலப்படுகிறது. தமிழ்ப் பதிவுகளைப் படிக்காவிட்டால் கையும் காலும் ஓடாதவர்கள், நிலைமை சீராகும் வரை (அதுக்கு அப்புறமும் தான் 🙂 ) தமிழ்ப் பதிவுகள், மாற்று! தளங்களை அணுகலாம். அல்லது, Bloglines, Google Reader, NetVibes மூலம் நீங்களே உங்கள் திரட்டியை உருவாக்கிக் கொள்வது நலம்.