தமிழ்நாட்டில் இருந்த வரைக்கும் வெயில் பத்தி அலுப்பு தான் இருக்கும். ஆனா, ஐரோப்பிய வாழ்க்கைல வெயிலைப் பார்த்து தான் வாழ வேண்டியதா இருக்கு..இங்க வந்த புதுசில ”The weather is great, right?” னு யாராச்சும் சொன்னா ”சரி, அதுக்கென்ன இப்ப”-னு சலிப்பா இருக்கும். ஆனா, ஒரு முழு ஐரோப்பிய குளிர் காலத்துல மண்டை காஞ்சப்புறம் வெயிலோட அருமை இப்ப புரிய ஆரம்பிச்சிருச்சு. இத்தனைக்கும் நெதர்லாந்து வரலாற்றிலயே இந்த குளிர் காலம் தான் வெப்பம் கூடின ஆண்டாம். உலக வெப்பமாதல் !!
இப்ப முழுசாவே வெயில் வந்திருச்சு !! எப்படியும் அக்டோபர் வரைக்கும் வெயில் தொடரும்னு எதிர்ப்பார்க்கலாம் !! வெயில் வந்தா என்னெல்லாம் நடக்குதுன்னா –
– ஒரே ஒரு மெல்லிசான சட்டை, கால்சட்டை மட்டும் போட்டா போதும். குல்லா, மப்ளர், சால்வை, மழைச்சட்டை, குளிருடுப்பு, கையுறை-ன்னு எல்லாத்தையும் போட்டுக்கிட்டு டொம்பக் கூத்தாடியாட்டம் திரிய வேண்டாம்.
– shoe போடாம வெறும் செருப்பு மட்டும் போட்டு சுத்துற சுகமே தனி !
– தெருக்களில், கடைகளில், கடற்கரைகளில் எந்நேரமும் மனித நடமாட்டத்தைப் பார்க்கலாம் ! குளிர் காலத்தில ஒரு பெரிய பேய்நாட்டில் இருப்பது போலத் தான் இருக்கும். வீடு முழுக்க சன்னலை அடைச்சு வைச்சு குறுகுறுன்னு ஒக்காந்திருக்க வேண்டாம். வெந்நீர் இல்லாம குளிக்கலாம். வீட்டுக்கார அம்மா இரவு 10 மணிக்கு மேல வெப்பமேற்றிய அணைச்சாலும் குளிராம போத்தாமத் தூங்கலாம் !
– தமிழ்நாட்டுக்கும் இங்கயும் நேர இடைவெளி ஒரு மணிநேரம் குறையும் ! கொஞ்சம் சீக்கிரமே வீட்டுக்குப் பேசலாம் !
– கோடை கால bonus கிடைக்கும் 🙂 நாடு சுத்தலாம் ! விடுமுறைக்கு நண்பர்கள் வருவாங்க !
– விடிஞ்சிச்சா விடியலையானு தெரியாம் இருட்டைப் பார்த்துத் தூங்கிக்கிட்டே இருக்க வேண்டாம். காலை 6 மணிக்கே வெயில் சுள்ளுன்னு முகத்தில அடிக்கும். எப்படி இரவு 11 மணி வரைக்கும் இங்க இருட்டாதுன்னு ஊர்ல உள்ளவங்களுக்கு இன்னொரு முறை விளக்கிச் சொல்லலாம் !
– ஆளாளுக்கு sun bath எடுப்பதால் ஊரே “கண்கொள்ளாக் காட்சியா” இருக்கும் 😉 பொண்ணுங்களின் உடுப்பு ரசனையைப் பார்க்கலாம் 😉 குளிர் காலத்தில் தலை முதல் கால் வரை போர்த்திய பெண்கள் செம bore 🙂
– ice cream வண்டி வண்டியா திங்கலாம் !
– bore அடிச்சா கடற்கரைக்குப் போலாம். கடல்ல நீஞ்சலாம்.
– நெதர்லாந்து முழுக்க துலிப் பூக்கள் பூத்துக் குலுங்கும் அழகை ரசிக்கலாம். மலர்க் கண்காட்சிகளுக்குப் போலாம்.
– நகர சதுக்கத்துல ஏதாச்சும் மாலை நேர கேளிக்கை நிகழ்ச்சிகளுக்குப் போலாம்.
– மாலைல ரொம்ப நேரம் கிரிக்கெட், கால்பந்து விளையாடலாம்.
– காசு கொடுத்து drierல துணி காயப்ப்போட வேண்டாம்.
– தோசைக்கு மாவு ஆட்டினா ஒரே நாள்ல புளிச்சுடும். அடிக்கடி தோசை சுட்டு சாப்பிடலாம். இது எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியம் !
கொஞ்சம் நடு ஐரோப்பால இருக்க எனக்கே இப்படின்னா, ஐரோப்பா வட கோடில இருக்கவங்க, அண்டார்ட்டிக்காவுல இருக்கவங்க நிலைமை எல்லாம்.. !!!
Comments
2 responses to “வெயில் !”
“கண்கொள்ளாக் காட்சியா” So true 😉
ஏதேனும் பணி இ௫ந்தால் எனக்கு சொல்லுங்கள் ரவி நானும் அங்கு வ௫கிறேன்..