Tag: தமிழ்

  • தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்துக்களில் எழுதலாமா?

    என் விருப்ப வலைப்பதிவரும் குட்டித் தோழியுமான அஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கடிதம் ஒன்று அனுப்பி இருந்தேன்: Dear Anjali kutty, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கு நன்றி சொல்லிவிட்டு அவள் கேட்ட முதல் கேள்வி: குட்டி என்பது தமிழ்ச் சொல். அதை எப்படி நீங்கள் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு எழுதலாம்? அஞ்சலிக்கு வயது 9. பிறந்தது முதல் வளர்வது நோர்வேயில். எதிர்ப்பாராத இடத்தில் இருந்து எதிர்ப்பாராத நேரத்தில் வந்த கேள்வி திகைக்க வைத்தது. ஒரு சிறு பிள்ளைக்குப்…

  • Englishland

    குறிப்பு: amma not equal to அம்மா என்ற படிமத்தைச் சொடுக்கி இங்கு வருபவர்கள், சிறந்த தமிழ் விசைப்பலகை எது? என்ற தமிழ்99 விசைப்பலகை விளக்கக் கட்டுரைக்குச் செல்லவும். தவிர்க்க இயலாத காரணங்களால் பக்கம் வழ மாறியதற்கு வருந்துகிறேன். தமிழ்நாட்டில் தமிழர் தத்தம் பெயர்ச்சுருக்கங்களை ஆங்கிலத்திலேயே எழுதுகிறோம். தமிழ்நாட்டில் தமிழர் ஆங்கிலத்தில் தான் கையெழுத்து இடுகிறோம். பிற மொழி, ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டும் பேசத் தெரியாது. ஆனால், பலரும் ஒரு தமிழ்ச் சொல்லும் கலக்காமல் நுனி…

  • சிங்கப்பூர், மலேசியா தமிழ்

    இலங்கைத்தமிழுக்கும் தமிழ்நாட்டுத் தமிழுக்கும் சொல் அளவில் இருக்கும் வேறுபாடு பிற நாட்டுத் தமிழில் இருப்பதில்லை என்று நினைக்கிறேன். ஒரு 10 மாதக் காலம் சிங்கப்பூரில் இருந்ததில் கவனித்தது என்னவென்றால்: தமிழ்நாடு, ஈழம் போன்று தமிழ் முதன்மை மொழியாக இருக்கும் இடங்களில் ஆங்கிலத்தைத் தமிழ் ஒலிப்பில் பேசுகிறோம். தமிழ் பயன்பாடு சமூகத்தில் முதன்மையாக இல்லாத சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழை அந்த ஊர் ஆங்கில ஒலிப்பில் பேசுகிறார்கள். ஆனால், ஊடகங்களிலும் மக்கள் பேச்சு வழக்கிலும் ஆங்கிலக் கலப்பு…

  • பட்டிமன்றம் நடத்துவது எப்படி?

    பெண் பேச்சாளர்களுக்கு பட்டுப்புடவை, மினுக்கும் அணிகலன்கள் தேவை இல்லை. ஒத்திகை பார்த்த அசட்டுக் கும்மிச் சிரிப்புகள், குட்டிக் கதைகள் தேவை இல்லை. திரைப்படப் பாட்டு தேவை இல்லை. கண்ணீர் சிந்த வைக்கும் அழுகாட்சிக் கதைகள், அடித்தொண்டையில் கத்தும் பாசாங்குப் பேச்சு தேவை இல்லை. இப்படியும் அமைதியாக, ஆரவாரம் இன்றி பட்டிமன்றம் நடத்தலாம். மக்களின் வாழ்க்கையைப் பேசலாம். சமூகச் சூழல் தான் எப்படி எல்லாம் ஊடகப் போக்கை மாற்றுகிறது? பி.கு: சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி, விசு கவனத்துக்கு.

  • இலங்கைத் தமிழ்

    தெனாலி, நந்தா, கன்னத்தில் முத்தமிட்டால், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் – இவற்றில் கேட்கும் தமிழ் தான் இலங்கைத் தமிழ் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், “அப்துல் அமீது கமல்ஹாசனுக்குத் தவறான பலுக்கலைச் சொல்லித் தந்து விட்டார்” என்று என்னிடம் சொல்லி மாளாத இலங்கைத் தமிழரே இல்லை. ஐரோப்பா, நெதர்லாந்து மற்றும் இணையத்திலும் பல இலங்கைத் தமிழர்களுடன் பேசிப் பழகினாலும், என்னுடன் பேசும் போது எனக்கு சிரமமும் குழுப்பமும் வரக்கூடாது என்று இந்தியத் தமிழுக்கு மாறிப் பேச…

  • தமிழில் உரைத்துணை

    dotSUB தளம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் உரைத்துணை வழங்கும் நுட்பத்தை இலகுவாக்கி இருக்கிறது. சோதனைக்காக, நான் தமிழில் உரைத்துணை சேர்த்துப் பார்த்த நிகழ்படம் ஒன்று.. ஒரு விக்கி தளத்தைத் தொகுப்பது போல் இந்தத் தளத்தில் உரைத் துணையைச் சேர்ப்பதும் மிக இலகுவாக இருக்கிறது. தற்போது இந்தத் தளத்தில் முறையான காப்புரிமம், பொது உரிமம் உள்ள படைப்புகளைத் தான் சேர்க்க முடியும் போல் இருக்கிறது. ஆனால், இந்த நுட்பம் Youtube போன்ற தளங்களுக்கு வரும் எனில் எண்ணற்றை…

  • இலங்கைத் தமிழ் X இந்தியத் தமிழ்

    ஒரு குறிப்புக்காக, இலங்கைத் தமிழ் X இந்தியத் தமிழ் வேறுபாடுகளைக் குறித்து நான் கற்றுக் கொள்பவற்றை இங்கு தொடர்ந்து பதிந்து வைக்க இருக்கிறேன். இலங்கைத் தமிழ் என்று நான் குறிப்பது பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழாக இருக்கலாம். இல்லை, வேறு ஒரு இலங்கை வட்டாரத் தமிழாகவும் இருக்கலாம். வீட்டில் நிண்டிட்டு போங்கோ | இருந்துட்டுப் போங்க மழை துமிச்சுக்கொண்டு இருக்கு | தூறிக்கிட்டு இருக்கு சத்தி வருது | வாந்தி வருது பஞ்சியா இருக்கு | சோம்பலா இருக்கு…

  • சிறுவர் இலக்கியம் படைப்பவர்களுக்கான மொழி சார் பொறுப்பு

    மாடர்ன் முயலும் முட்டாள் ஆமையும் என்ற தலைப்பில் கண்மணி எழுதிய ஒரு சிறுவர் கதையைக் கண்டேன். அதில் உள்ள தமிங்கில நடையைத் தவிர்க்கலாமே என்று நடந்த உரையாடலைப் பதிந்து வைக்கிறேன். நான்: இயன்ற வரை நல்ல தமிழில் கதை சொன்னால் பரவாயில்லை. வளரும் பருவத்திலேயே குழந்தைகளுக்கு அரை குறை தமிழைக் கற்றுத் தர வேண்டுமா? ஆண்ட்டி என்பதை விட அத்தை என்று சொன்னால் இனிமையாக இருக்குமே? குட்டீஸ், சுட்டீஸ் என்ற சிறுவர் மலர், ஆனந்த விகடன் தமிழ்க்…

  • தமிழ்நாட்டுப் பள்ளிப் பாடநூல்கள் இணையத்தில் கிடைக்கின்றன

    ஏப்ரல் 2007ல் இணையத்தமிழ் உள்ளடக்க உருவாக்கத்துக்கு தமிழக அரசு செய்ய வேண்டியது குறித்து எழுதி இருந்தேன். அதை யாரும் பார்த்தார்களா தெரியாது 🙂 நேற்று கூட இதன் தேவை குறித்து தமிழ் விக்கிபீடியாவில் உரையாடினோம். நேற்று இரவே, தமிழ்நாட்டுப் பள்ளிப் பாடத்திட்ட நூல்கள் pdf வடிவில் இணையத்தில் கிடைக்கத் தொடங்கி இருப்பதை கண்டு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. http://www.textbooksonline.tn.nic.in/ என்ற முகவரியில் 1 முதல் 12 வகுப்பு வரைக்குமான பாடநூல்கள் தமிழ், ஆங்கிலம் இரு வழியிலும்…

  • சென்னை வலைப்பதிவர் பட்டறை திட்டமிடப்பட்டது எப்படி?

    989 மடல்கள். இரண்டு மாத உழைப்பு, திட்டமிடல். நூற்றுக்கணக்கில் தொலைபேசி உரையாடல்கள். ஒவ்வொரு வாரமும் பட்டறை குறித்த திட்டமிடலுக்கான நேரடி சந்திப்புகள். அரங்கத்தை இறுதி செய்வது, குறுந்தகடு, நூல் அச்சிடல் வேலை என்று இவற்றுக்காக குறைந்தது 15 மனித உழைப்பு நாட்களாவது செலவு இடப்பட்டிருக்கும். இவற்றின் விளைவாகத் தான் பதிவர் பட்டறை சாத்தியமானது.