இலங்கைத்தமிழுக்கும் தமிழ்நாட்டுத் தமிழுக்கும் சொல் அளவில் இருக்கும் வேறுபாடு பிற நாட்டுத் தமிழில் இருப்பதில்லை என்று நினைக்கிறேன். ஒரு 10 மாதக் காலம் சிங்கப்பூரில் இருந்ததில் கவனித்தது என்னவென்றால்:
தமிழ்நாடு, ஈழம் போன்று தமிழ் முதன்மை மொழியாக இருக்கும் இடங்களில் ஆங்கிலத்தைத் தமிழ் ஒலிப்பில் பேசுகிறோம். தமிழ் பயன்பாடு சமூகத்தில் முதன்மையாக இல்லாத சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழை அந்த ஊர் ஆங்கில ஒலிப்பில் பேசுகிறார்கள். ஆனால், ஊடகங்களிலும் மக்கள் பேச்சு வழக்கிலும் ஆங்கிலக் கலப்பு தமிழ்நாட்டை விட மிகக் குறைவாகத் தென்பட்டது. ஆங்கிலப் படிப்பறிவு குறைந்த தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் அதிகம் இருப்பதும், அங்கேயே பிறந்து வளரும் குழந்தைகள் ஒரு மொழியாக மட்டுமே தமிழைப் படிப்பதும், தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசும் தேவையின்றி முழுச்சமூகமும் ஆங்கிலத்தில் இயங்கக்கூடியதாய் இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
இதுவரை இந்த ஊர்த் தமிழ் ஒலிப்பைக் கேட்டே இராதவர்களுக்காக, எடுத்துக்காட்டுக்கு, சில சிவையான மலேசியத் தமிழ் நிகழ்படங்கள். எனினும், இவை பொதுப் போக்கை ஒட்டி இராமலும் இருக்கலாம்:
Dr.Burn நேர்காணல்:
Planet galatta நகைச்சுவைத் தொடர்:
மேற்கண்ட நாடுகளில் தமிழோடு ஆங்கிலத்தைச் சரளமாகக் கலக்கிறார்கள் என்றால், ஐரோப்பிய நாடுகளிலேயே பிறந்து வளரும் புதிய புலம் பெயர் தமிழ்த் தலைமுறை தமிழோடு டச்சு, ஜெர்மன், பிரெஞ்சு என்று உள்ளூர் மொழிச் சொற்களைச் சரளமாகக் கலந்து பேசுகிறார்கள். ஆங்கிலமும் தமிழும் மட்டும் அறிந்தவர்கள் ஐரோப்பியத் தமிழைப் புரிந்து கொள்வதில் நிச்சயம் சிரமம் இருக்கும்.
Comments
2 responses to “சிங்கப்பூர், மலேசியா தமிழ்”
/ஆங்கிலக் கலப்பு தமிழ்நாட்டை விட மிகக் குறைவாகத் தென்பட்டது. /
மிக மிக குறைவு………………………….
/தமிழ் ஒலிப்பைக் கேட்டே இராதவர்களுக்காக/
http://www.oli.com.sg/
http://www.minnalfm.com/
http://www.thr.fm/
/ஒரு மொழியாக மட்டுமே தமிழைப் படிப்பதும்/
மலேசியாவில் 547 தமிழ் தொடக்க பள்ளிகள் உள்ளன…….. 50000 மாணவர்கள் படிக்கிறார்கள்…
/இவை பொதுப் போக்கை ஒட்டி இராமலும் இருக்கலாம்:/ஆமாம்……. !
மலேசிய தொலைக்காட்சியில் ஒளியேற்றப்படும் நாடகங்கள் மற்றும் பிற நிகள்வுகள் தமிழக தொலைக்காட்சிகளை விட சிறந்த தமிழில் இருக்கும்……
எங்க ஊர் தொலைக்காட்சிகள்…………. 1.வானவில்…….. 2.வெள்ளித்திரை
உங்க ஊர் தொலைக்காட்சிகள்…….
1.sun
2.raj
3.jaya
4.sun news……………………????
தகவலுக்கு நன்றி, Dr. Sintok. தமிழை ஒரு மொழியாக மட்டும் படிப்பது சிங்கப்பூரில் மட்டுமே என்று தெளிவாகச் சொல்லாமல் விட்டு விட்டேன்.