Tag: தமிழ்
-
in tamil alsoவா?
—
தனியாக ஒரு தெலுங்குக்காரர் தமிழர்களிடம் மாட்டிக் கொண்டால் அவர் பாடு பெரும் பாடு தான். கருணையே இல்லாமல் GULTI, GOLTI என்று எவ்வளவு ஓட்டித் தள்ளினாலும், நட்புக்கு உலை வைக்காமல் சிரித்தபடியே தாங்கிக் கொள்ளும் நல்லவர்கள். பிரசாத் என்று ஆந்திராவைச் சேர்ந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். பேசுவதற்கு ஒன்றுமில்லாவிட்டால், “பிரசாத், what is that in telugu, what is this in telugu” என்று அவரைப் போட்டு புரட்டி எடுப்பது வழக்கம். 12ஆம் வகுப்பு வரை…
-
தமிழ்நாட்டுத் தமிழ் x இலங்கைத் தமிழ்
—
in தமிழ்இலங்கைப் பேச்சுத் தமிழை, தமிழ்த் திரைப்படங்கள், இலங்கை வானொலி மூலம் சரியும் பிழையுமாக அறிந்திருந்தாலும், இணையத்தில் தமிழத் தளங்களைப் படிக்கத் தொடங்கிய பிறகு தான் இலங்கையின் எழுத்துத் தமிழ் வழக்குக்கும் தமிழ்நாட்டு வழக்குக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொண்டேன். இலங்கையின் வேறுபட்ட எழுத்து வழக்கு அவர்களின் வேறுபட்ட பலுக்கலின் விளைவே என்றாலும், இலங்கைத் தமிழ்ப் பலுக்கலை முழுமையாக அறிய வாய்ப்பு இல்லாது அவர்களின் எழுத்துக்களை மட்டும் படிக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உதவியாக இந்த இடுகை. ஜ இலங்கைத்…
-
அம்மாபட்டித் தமிழ்
—
அம்மாபட்டி – நான் 10 வயது முதல் 17 வயது வரை வளர்ந்த ஒரு மிகச் சிறிய ஊர். இப்பொழுதும் நாங்கள் குடி இருக்கும் ஊர். ஒரு 50 குடும்பங்கள் இந்த ஊரில் குடி இருக்கும என்று நினைக்கிறேன். இது போல் மாவட்டத்துக்குப் பல அம்மாபட்டிகள் உண்டு. திருச்சி, புதுகை, சிவகங்கை என மூன்று மாவடங்களின் எல்லையில் இவ்வூர் அமைந்திருக்கிறது. மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ் என்று இருப்பது போல் நான் வளர்ந்த புதுகை, திருச்சி மாவட்டங்களில்…
-
செருப்புக்காக காலை வெட்டுவது எப்படி?
—
in தமிழ்இன்றைய உதவிக் குறிப்பில், புதிதாக வாங்கிய மேலைநாட்டு ஆங்கிலச் சிந்தனைச் செருப்புக்குப் பொருத்தமாக உங்கள் தமிழ்க் காலை வெட்டுவது எப்படி என்று பார்ப்போம். 1. திற, மூடு, நிறுத்து, துவக்கு போன்ற பல சுருக்கமான தமிழ் வினைச்சொற்களை பயன்படுத்துவது சிரமம் என்பதால் பண்ணு என்ற ஒரே ஒரு “magic வினைச்சொல்லை” மட்டும் பயன்படுத்துங்கள். இதனுடன் open, close , start , stop போன்ற ஆங்கில வினைச்சொற்களைச் சேர்த்துக் கொள்க. இந்த முறையின் சிறப்புகள் – ஆங்கில…
-
தமிழ் அகரமுதலிகள்
—
in தமிழ்* ஆங்கில வழியத்தில் படித்து தமிழில் துறை சார் சொற்கள் அறியாதோர் பயன்படுத்த வேண்டியது தமிழ் இணையப் பல்கலை அகரமுதலி . இதனால், சொற்களைத் திரும்ப கண்டுபிடிக்கும் அசட்டுத்தனத்தையும் பொருத்தமற்ற சொற்களை புதிதாக உருவாக்கும் பிழையையும் தவிர்க்கலாம். * இலக்கியத்தில் உள்ள பழங்காலத் தமிழ்ச் சொற்கள், போன சில நூற்றாண்டுகளில் தமிழில் புழங்கிய பிற மொழிச் சொற்கள் குறித்து அறிய சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி விலை மதிப்பற்ற ஒரு களஞ்சியம். * வலைப்பதிவு (blog), திரட்டி (aggregator) போன்ற அண்மைய கால…
-
Puncture ஒட்டும் கடைக்குத் தமிழில் என்ன பேர்?
—
in தமிழ்இது சயந்தன் எனக்கு சொன்ன கதை ! 1990களில் தமிழீழத்தில் உள்ள கடைகளுக்கு எல்லாம் தமிழ்ப் பெயர் வைக்குமாறு விடுதலைப் புலிகள் வலியுறுத்திய காலமாம். bakery – வெதுப்பகம் ஆனது. bank – வைப்பகம் ஆனது. இந்த வரிசையில், tyreல் உள்ள துளை (puncture) ஒட்டும் கடைக்கு ஒருவர் தமிழ்ப் பெயர் எழுதி வைத்தாராம். அது என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சயந்தன் அந்தப் பெயரை சொன்ன போது விழுந்து விழுந்து சிரித்தேன் 🙂 அந்தப் பேர்..…
-
தமிழ்நாட்டில் குழந்தைகளின் பெயர்கள்
—
நல்ல, தூய தமிழ்க் குழந்தைப் பெயர்கள் தரும் இணையத்தளங்கள்: 1. http://peyar.in குறிப்பு: தூய தமிழ்ப் பெயர்களைத் தரும் இணையத்தளங்களை அறியத்தருவதும், தமிழ்நாட்டில் தமிழ்ப் பெயர்கள் குறைந்து வருவது குறித்த விழிப்புணர்வையும் பரப்புவதே இக்கட்டுரையின் நோக்கம். தயவு செய்து, உங்கள் குழந்தைக்குப் பெயரிடுவது குறித்த ஆலோசனைகளைக் கேட்க வேண்டாம். நாள், நட்சத்திரம் பார்க்காமல் மனதுக்கினிய பெயரை வைப்பதே சிறந்தது என்பதே என் நிலைப்பாடு. நன்றி. ** தமிழர் பெயர்களில் பிற மொழித் தாக்கம்: முந்தா நேத்து காலையில…
-
தமிழ்99
—
in தமிழ்தமிழ்99 விசைப்பலகை தான் உலகிலேயே சிறந்த தமிழ் விசைப்பலகை. மேலே இருப்பது தான் அந்த விசைப்பலகை ! இதில் என்ன சிறப்பா? 1. விசையழுத்தங்கள் மிகவும் குறைவு. இது தான் முதன்மையான பயன். அடுத்து வரும் சிறப்புகளுக்கும் இது தான் காரணம். கிரந்த எழுத்துக்கள், புழக்கத்தில் இல்லாத சிறப்பு எழுத்துக்கள் தவிர எல்லா தமிழ் எழுத்துக்களையும் SHIFT, CTRL விசை இல்லாம அழுத்த முடியும். உயிர் எழுத்து, அகர உயிர்மெய்கள் இரண்டையும் ஒரே விசையில் அழுத்த முடியும்.…