நிறுவனப்படுத்தப்பட்டு வரும் தமிழ்ப் பதிவுலகத் திரட்டிகளைச் சாராமல் புதிய பதிவர்களுக்கு பதிவுகளை எப்படி அறிமுகப்பபடுத்துவது என்று நண்பர்களுடன் ஒரு உரையாடல் வந்தது.
அந்தக் கேள்விக்கு ஒரு விடையளிக்கும் முயற்சியாக மாற்று! பங்களிப்பாளர்கள் தொகுத்து விரும்பிப் படிக்கப்படும் 450+ பதிவுகள் பட்டியலை வெளியிட்டிருக்கிறோம்..
பார்க்க – http://blog.maatru.net/மாற்று-opml/
தமிழ்த் திரட்டித் தளங்களை அறிமுகப்படுத்துவதற்குப் பதில் கூகுள் ரீடரையும் இது போன்று நாமே உருவாக்கும் opml கோப்புகளையும் அறிமுகப்படுத்தினாலே நாளடைவில் திரட்டிகள் உதவியின்றி பதிவர்களால் இயங்க முடியும் என்று நினைக்கிறேன்..
அன்புடன்
ரவி
Comments
3 responses to “திரட்டிகளைச் சாராமல் பதிவுகளை அறிமுகப்படுத்துவது எப்படி?”
ரவி!
முதலில், மிக நல்ல thoughtful முயற்சி! (உங்க அளவுக்கு நமக்கு இன்னும் தொழில்நுட்பத் தமிழ் பிடிபடலை! மன்னிச்சுக்குங்க!)
சரி என்னல்லாம் போட்டிருக்காங்கன்னு பார்க்கலாம்னு உட்கார்ந்தா, எனக்கு இருக்கற ஒரு முக்கியமான usability பிரச்சினை, நான் அந்த opmlல்ல ஒவ்வொரு சுட்டியாத் தேடி அதை ctrl c, ctrl v செய்யனும். மேலும் இவ்வளவு செய்த உங்க குழு, opml ஐ தனியாவும், Link with hyperlinked text ஆ ஒரு html கொடுத்திருக்கலாம். இன்னும் ரொம்ப usableஆ இருந்திருக்கும்!
(மறுபடியும் மன்னிக்கவும்! உங்கள் வலைப்பதிவுகளை சமீபமாய் படித்து வருகையில் தாங்கள் விமர்சனங்களை திறந்த மனதுடன் வரவேற்பவர் என்று அறிகிறேன். எனவேதான் இந்த ‘குற்றம் பார்த்தல்’! பிழையிருப்பின் பொறுத்தருள்க!)
அன்புடன்
வெங்கட்ரமணன்
வெங்கட்ரமணன், நீங்கள் செய்திருப்பது விமர்சனம் அல்ல. பயனுள்ள யோசனை. ஆனால், இந்தக் கருத்தைக் கூட ஒருவர் சொல்லத் தயங்க வைக்கும் அளவுக்குத் தமிழ் வலைப்பதிவுச் சூழல் இருக்கிறது என்பதை உணர்ந்து வருகிறேன் 🙁 சொடுக்கக்கூடிய பதிவுப் பட்டியலாக ஒரு பக்கத்தில் தர வேண்டும் என்று நானும் நினைத்து இருந்தேன். விரைவில் செய்கிறேன். நன்றி.
ரவி!
http://www.chrisfinke.com/2006/07/30/kickin-it-opml-style/ புண்ணியத்திலே நானே இந்த வேலையைப் பண்ணிட்டேன்.
அந்த html http://venkatramanan.googlepages.com/Maatru_Feeds.html என்ற சுட்டியில் உள்ளது!
ஏதோ நம்மாலான உதவி!
அன்புடன்
வெங்கட்ரமணன்.