தமிழ் வலைப்பதிவுகள்

எனக்குப் பிடித்த சில தமிழ் வலைப்பதிவுகள். நினைவுக்கு வரும் வரிசையில்.

1. வளவு – தமிழ் மொழி, பண்பாடு குறித்த உரையாடல்களுக்கு.

2. வீணாய் போனவன் – அழகான, சுருக்கமான, மனதைத் தொடும் கவிதைகளுக்கு.

3. செவ்வாய்க்கிழமை கவிதைகள்மனிதர்கள் தொடர் அருமை.

4. மயூரன் எழுதும் GNU / Linux குறிப்பேடு – கட்டற்ற மென்பொருள்கள், அவற்றின் மெய்யியல் அறிய.

5. தமிழ் சசி – இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்த அலசல்கள்.

6. பயணங்கள் – மருத்துவர் புருனோ மூலம் அரசு ஊழியர்கள், மருத்துவத் துறை பற்றிய பல உண்மைகளை அறிய.

7. சாரல் – சயந்தன், தமிழ் வலையுலகில் மிகச் சிறந்த நகைச்சுவை உணர்வு உடையவர். கொஞ்ச காலமாக அப்படி எழுதுவதற்கான சூழல் இல்லை 🙁

8. S. Ramakrishnan – தகவல் செறிவுடன், புரிகிற மாதிரி, பயனுள்ள வகையில்  இணையத்தில் எழுதும் தமிழ் எழுத்தாளர்.

(பட்டியல் விரியும்)


Comments

5 responses to “தமிழ் வலைப்பதிவுகள்”

  1. அன்பு ரவிசங்கர், தங்களது பட்டியலில் எனது வலைப்பதிவும் இருப்பது கண்டு மகிழ்ச்சி. யாருக்காக படைக்கிறோம் என புரியாமல் ஏதோ மாய லோகத்தில் இணையத்தில் வலைப்பதிவு நடத்தும் என்னை போன்றவர்களுக்கு உங்களை போன்றவர்கள் தரும் உற்சாகமும் ஊக்கமும் தான் டானிக். நன்றிகள் பல.

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      வணக்கம் சாய்ராம்.

      நன்றாக வடிவமைக்கப்பட்ட தமிழ் வலைப்பதிவுகள் பட்டியலிலும் நீங்கள் உண்டு 🙂

      வலையில், அச்சில் கண்ட சமகாலப் புனைவுகளில் எல்லாவற்றிலும் மனிதர்கள் தொடர் என்னை மிகவும் கவர்ந்தது. மிகச் சிலப்பத்திகள், கேள்விப்பட்டிராத மனிதர்கள், எளிமையான சொற்கள், பொருத்தமான ஓவியங்கள் என மிக அருமையாக உள்ளது. கண்டிப்பாக இதை ஒரு புத்தகமாகப் பதிப்பிக்க வேண்டும்.

  2. ரவிசங்கர் உங்கள் பாராட்டு எனக்கு மூன்று கிளாஸ் டானிக் குடித்தாற் போல் இருக்கிறது. ‘மனிதர்கள்’ வகையறா ‘அவசரமாய் வந்து சில பத்திகளில் படித்து பறந்து போகிற’ வலை மேய் வாசகர்களுக்கான வடிவத்தில் உருவாக்கபட்டது. அச்சில் இது எப்படி ஏற்று கொள்ளபடும் என தெரியவில்லை. என்றாலும் இன்று அச்சில் கொண்டு வந்தால் இதனை படிப்பவர்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் வலையிலே நிறைய பேர் வாசித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      வலையிலோ அச்சிலோ எங்கு எழுதினாலும், இப்போதுள்ள மனிதர்கள் தொடர்களின் அளவு மிகச் சரியானது. அச்சிலும் அப்படியே நன்றாக வந்தால் நன்றாக இருக்கும்.

      அறிமுக எழுத்தாளர்களுக்கு அச்சைக் காட்டிலும் வலையில் கூடுதல் வாசகர்கள் கிடைப்பது உண்மை. ஆனால், அச்சில் வருவது தனி ‘இது’ தான்… 🙂