தமிழ் TuxPaint

குழந்தைகள் வரைவதற்கான TuxPaint மென்பொருளைத் தமிழாக்கி உள்ளோம். 2004ல் தமிழா குழுவினர் வெளியிட்ட தமிழாக்கம் TSCIIயில் இருந்தது. அதை ஒருங்குறிக்கு மாற்றி, கூடுதலாக இருந்த புதிய சரங்களைத் தமிழாக்கி உள்ளோம்.

1. TuxPaint மென்பொருளைத் தரவிறக்கி நிறுவுங்கள்.

2. நிறுவுகையில் configurationல் Languages என்பதில் தமிழைத் தெரிவு செய்யுங்கள். ஏற்கனவே நிறுவி இருந்தால், (விண்டோசு கணினியில்) C:\Program Files\TuxPaint போய் Tuxpaint-config என்பதைச் சொடுக்கி அமைப்பை மாற்றலாம்.

3.  C:\Program Files\TuxPaint\locale\ta\LC_MESSAGES என்ற இடத்தில் உள்ள Tuxpaint.mo கோப்பை நீக்குங்கள்.

4. புதிய TuxPaint.mo கோப்பைத் தரவிறக்கி C:\Program Files\TuxPaint\locale\ta\LC_MESSAGES ல் சேருங்கள்.

தமிழாக்க உதவிக்கு நன்றி: சுந்தர், மயூரன், இராம. கி, புருனோ, கட்டற்ற தமிழ்க் கணிமை குழுமம், தமிழ் விக்சனரி குழுமம்.

5 thoughts on “தமிழ் TuxPaint”

  1. வணக்கம்!
    தமிழ் TuxPaintமென்பொருளினை கணினியில் பதிவுசெய்து பயன்படுத்த முயன்றேன்.
    ஆனால் அதில் தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லை.
    எழுத்துரு ஏதாவது மேலதிகமாக நிறுவ வேண்டுமா?
    எனது கணினியில் Vista உள்ளது.
    வேறு தமிழ் மென்பொருள்கள் பாவிக்கிறேன். அவை சரியாக இயங்குகின்றன.

  2. என்னோடது xp கணினி. ஏற்கனவே சில ஒருங்குறி எழுத்துருக்கள் இருந்தன. புதுசா ஒரு எழுத்துரு, மென்பொருளும் நிறுவல. எதற்கும் nhm writer நிறுவி முயன்று பாருங்க.

    http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx

Comments are closed.