முதல் 10 உலக மொழிகள்

உலகின் முதல் 10 மொழிகளைப் பத்தின விரிவான ஆய்வுக்கட்டுரைய இங்க பார்க்கலாம். மொழியியல் ஆர்வம் உள்ளவங்க கண்டிப்பா படிக்க வேண்டிய ஆய்வு. பேசும் மக்கள் எண்ணிக்கைய அடிப்படையா வைச்சா சீனம் தான் முதல் இடத்துல இருக்கணும் (சீனம்கிறது ஒரு மொழி இல்லீங்க. எழுத்து மட்டும் தான் ஒன்னு. ஆனா, நிறைய வெவ்வேறு பொருள், உச்சரிப்பு உள்ள சீனப் பகுதியில் உள்ள மொழிகள் எல்லாத்தையும் மொத்தமா சீனம்னு சொல்லிடுறாங்க.இந்த மொழிகளை வட்டார வழக்குன்னு கூட சொல்ல முடியாது. அதுக்கும் மேல வேறுபட்டவை). ஆனா, உலக அளவில் வணிகம், அறிவியல், அரசியல் என்று பல துறைகள்ல செல்வாக்கு செலுத்துற மொழிகள் அடிப்படையில் இந்தப் பட்டியலைத் தந்திருக்காங்க.

1. ஆங்கிலம்
2. பிரெஞ்சு
3. எஸ்பான்யோல் (spanish)
4. உருசிய மொழி
5. அரபு
6. சீனம்
7. டாயிட்ச் (german)
8. ஜப்பானிய மொழி
9. போர்த்துகீசிய மொழி
10. உருது / இந்தி.

பேசும் மக்கள் எண்ணிக்கைல மட்டும் தமிழ் 18ஆவது இடத்தில் இருக்கு. தமிழ் உலக மொழியாகுறதுக்கான வாய்ப்பு அடுத்த பல நூற்றாண்டுகளுக்குத் துளியும் இல்லை ! எனவே இந்தப் பட்டியல்ல தமிழுக்கு என்ன இடம்னு கவலைப்பட வேண்டாம். தகுதிச் சுற்றுக்கே நமக்கு இடம் இல்லை. உலக அளவில தமிழ் எந்த ஒரு துறைக்கான மொழியாகவும் இல்லை. ஒரு இனம் பேசும் மொழியா மட்டும் தான் இருக்கு. அந்த இனத்திலயும் திரைப்படம், இலக்கியம், ஆன்மிகம், சமையல், சோதிடம் அப்படின்னு ஒரு மிகச்சிறிய வட்டத்துக்குள்ள தான் தமிழ் இருக்கு. தமிழ்நாட்டில் தமிழ் முதல் மொழிங்கிற நிலை வந்தாலே பெரிய விசயம்.

மத்தபடி, இந்த உலக மொழிகள் குறித்த தமிழ் விக்கிபீடியா கட்டுரை இங்கு.

தாய்மொழியை மறப்பது எப்படி?

தாய்மொழியை மறக்கடித்து தேசிய மொழியைப் படிப்பது எப்படி ?

தமிழார்வம், மொழியார்வம் உள்ளோர் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.