Raaga.comல் விளம்பரங்கள் இல்லாமல் பாட்டு கேட்கலாம்

Firefox பயனர்கள் ராகா தளத்தில் விளம்பரங்கள் இல்லாமல் பாட்டு கேட்கலாம். முதலில் Greasmonkey நீட்சியை நிறுவி Firefoxஐ மீளத் திறங்கள். அடுத்து Raagaadskipperuser என்ற நிரலை நிறுவிக் கொள்ளுங்கள்.

விளம்பரங்களை நிறுத்துவதுடன் பின்வரும் குறுக்கு விசைகளும் கிடைக்கும்.

  • z – முந்தைய பாட்டு
  • x -பாடு
  • c -பொறு
  • v -நிறுத்து
  • b – அடுத்த பாட்டு
  • Up அம்பு – ஒலியளவைக் கூட்டு
  • Down Arrow – ஒலியளவைக் குறை

நிரலை உருவாக்கிய சரவணனுக்கும் Firefoxக்கும் நன்றி 🙂

தமிழ் சொல்லிசைப் பாடல்கள்

முன்பு இசையமைப்பாளர் ஆதித்யன் ஏகப்பட்ட remix பாட்டுக்கள் போடுவார். இப்ப எல்லா தமிழ் இசையமைப்பாளர்களும் remixல் புகுந்து விட்டார்கள்.

ஆனால், remix தவிர புதுசாகவும் சொல்லிசைப் (rap music) பாடல்கள் நிறைய வருகின்றன. மலேசியக் கலைஞர்கள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இதில் முன்னிலையில் இருப்பது போல் தெரிகிறது. ரசிக்கவும் வைக்கிறது. சில சமயம் தமிழ்நாட்டில் எழுதப்படுவதை விட நல்ல பாடல் வரிகளும் வந்து விழுகின்றன.

அண்மையில் ரசித்த பாடல்கள் –

– Rise of the Brammahsல் இருந்து இரண்டு பாடல்கள்.

Get Your Own Music Player at Music Plugin

– MIA Birdflu

– ரொம்பவுமே பிரபலமான “மடை திறந்து” rap remix


உங்கள் வலைப்பதிவில் பாடல்கள் ஒலிபரப்புவது எப்படி?

நான் அண்மையில் விரும்பிக் கேட்ட பாடல்களை கீழே ஒலிபரப்புகிறேன். நீங்களும் இதுபோல் எளிதாக செய்யலாம்.

Get Your Own Hindi Songs Player at Music Plugin

மேலே உள்ள பாடல் பட்டியல் – உன்னைக் கண்டேனே (பாரிஜாதம்), உன்னாலே உன்னாலே (உன்னாலே உன்னாலே), காற்றின் மொழியே (மொழி).

இது போல் நீங்களும் பாடல்களை ஒலிபரப்ப,

1. http://www.musicplug.in செல்லுங்கள்.
2. ஒரு பயனர் கணக்கு உருவாக்குங்கள்.
3. நீங்கள் விரும்பும் பாடல்களுக்கு அருகில் உள்ள + குறியை அழுத்தி, ஒரு albumல் சேருங்கள்.
4. இப்பொழுது அந்த albumஐத் திறந்து பாட விடுங்கள்.
5. கீழ் வருவது போல் உங்கள் இயக்கியில் உள்ள embed code அருகில் உள்ள copy to clipboard என்ற பொத்தானை அழுத்தி, நிரலை பிளாக்கரில் ஒட்டி விடுங்கள்.

அவ்வளவு தான்..உங்கள் சொந்த juke box, radio mirchy, சூரியன் FM எல்லாம் தயார் 🙂

இந்த Musicplug.in தளத்தை அண்மையில் தான் கண்டுபிடித்தேன். இதன் சிறப்பியல்புகள்:

1. Raaga.comக்கு இணையான பாடல்களின் ஒலிப்புத் தரம்.
2. Raaga.comஐ மிஞ்சும் கவர்ச்சியான தள வடிவமைப்பு.
3. நண்பர்களுக்கு மின்மடலில் பாடல் அனுப்ப, இணைப்புகளை பகிர, இப்படி உங்கள் தளத்தில் இருந்து ஒலிபரப்ப என்று ஏகப்பட்ட வசதிகள்.
4. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, பஞ்சாபி பாடல்கள்.
5. முக்கியமாக உயிரை வாங்கும் விளம்பரங்கள் இல்லை. Raagaவில் “ஊட்டுக்கு பணம் அனுப்புறியா, அனுப்புறியா”-னு ஒரு மேரி அக்கா கூவிக்கிட்டே இருக்கும் 🙂
6. பாடல்கள், பாடல் பட்டியல் தானாக திரும்பத் திரும்ப பாடும் வசதி.
7. புதிய, பழைய பாடல்கள் என்று நிறைய குவிந்திருக்கின்றன.
8. Realplayer தேவை இல்லை. Raagaவில் இது முக்கியத் தொல்லை.
9. லினக்ஸ், Firefox எல்லாவற்றிலும் பாடுகிறது. Raaga லினக்சில் மக்கர் செய்யும். Realplayer plugin போடு என்று அழும் !

தளத்துக்கு போய் பாட்டு கேட்டுப் பார்த்து சொல்லுங்களேன்..யார் கண்டார்? தமிழ்ப் பதிவுலகில் இதைத் தொடர்ந்து வானொலிப் பதிவுகள் வந்தாலும் வரலாம். வந்தாலும் நல்லா இருக்கும் தான்.

Raaga, 5 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ இப்பொழுதும் அப்படியே இருக்கிறது. நுட்ப அளவில் ஒரு மாற்றமும் இல்லை. Youtube போன்ற தளங்கள் நிகழ்படப் பகிர்வுகளை பரவலாக்கியது போல் இந்த தளமும் இந்தியப் பாடல் பகிர்வுகளை பரவலாக்கக் கூடும். கூடிய சீக்கிரம் இந்த தளம் Raagaவை ஏறக் கட்டி விடும் என்பது என் கணிப்பு. பார்க்கலாம்.


பி.கு.
1. இந்த இடுகையை நீங்கள் திறக்கும்போது தானாகவே பாடத் தொடங்கி விடும். இது போல் அல்லாமல் பயனர் விரும்பி பாட வைக்க musicplug நிரலில் autoplay=true என்பதை false என மாற்றிக் கொள்ளுங்கள்.
2. தமிழ்த் திரைப்பாடல்களை துல்லியமாக, எளிதாகத் தேட ஆன்ந்த் ஒரு நிரல் உருவாக்கி உள்ளார். தகவலுக்கு நன்றி, மு.கார்த்திகேயன்.

தொடர்புடைய இடுகை:

வலைப்பதிவில் ஒலிப்பதிவு இடுவது எப்படி?