தொடுப்புகள் – மே 27, 2010

1.  Project Tamils – உங்களுக்குத் தெரிந்த தமிழ், தமிழர் தொடர்புடைய இலாப நோக்கற்ற திட்டங்கள் பற்றிய தகவலைச் சேர்த்து உதவலாம்.

2. சேகரம் – நூறு ஆண்டு பழமை மிக்க தமிழ் நூல்களின் அரிய தொகுப்பு.

3. பேயோன் – இவர் தற்காலத் தமிழ் எழுத்தாளர்கள், அறிவுப் போக்குகளைக் கிண்டல் செய்து எழுதுகிறார். தங்களை எழுத்தாளர்கள் என்றுச் சொல்லிக் கொள்பவர்களை விட இவரது எழுத்து மிகச் சுவையாக உள்ளது. தனது முதல் ஆயிரம் டுவீட்டுகளை ஒரு புத்தகமாகவே வெளியிட்டிருப்பது தான் இவரது உச்சக்கட்டப் பகடி 🙂

4. அகராதி – அண்ணா பல்கலை ஆய்வாளர்கள் முயற்சியில் வந்துள்ள ஒரு தமிழ் அகரமுதலி. வழமையான அகரமுதலிகளை விட சற்றுக் கூடுதலான நுட்ப வசதிகள், உசாத்துணைகளுடன் உள்ளது. ஆங்கிலம் – தமிழ் அகரமுதலிகளின் விரிவான பட்டியலையும் காணலாம்.

5. Change This – மாறத் தூண்டும் சிந்தனைகள் கொண்ட குறுநூல்கள் தளம்.

6. நான் வாசித்த புத்தகங்கள்

7. நான் பார்த்த திரைப்படங்கள்

தொடுப்புகள் – August 24, 2008

1. தமிழில் கூகுள் செய்திகள் – தினத்தந்தி, மாலைமலர் போன்ற ஒருங்குறியில் இல்லாத தமிழ்த் தளங்களில் இருந்தும் செய்திகளைத் திரட்டித் தானியக்கமாகத் தொகுத்துத் தருகிறது. சில புதிய தமிழ்ச் செய்தித் தளங்களும் தென்படுகின்றன.

2. RSS Meme – வலையில் யார் எதை விரும்பிப் படித்துப் பகிர்கிறார்கள் என்று அறியலாம். இத்தளத்தின் This Week பகுதியில் உண்மையிலேயே நல்ல தொடுப்புகளைக் கண்டு கொள்ளலாம்.

3. Down For Everyone or Just me – ஏதாவது தளம் படுத்துவிட்டால் உங்களுக்கு மட்டும் தானா இல்லை எல்லாருக்குமா என்று அறியலாம்.

4. PhD Comics – ஐயோ பாவம் ஆராய்ச்சி மாணவர்கள் குறித்த துறை சார் நகைச்சுவைத் தளம் 🙂

5. xkcd – புகழ்பெற்ற வலை நகைச்சித்திரத் தளம். அண்மையில் வெளிவந்த கீழே உள்ள நகைச்சித்திரம் பெரிதும் பேசப்பட்டது. நம்ம நிறைய பேருக்குப் பொருந்துமோ?

கடமை அழைக்கிறது !
கடமை அழைக்கிறது !

6. டுவிட்டர் தேடல் – செய்திகள் நிகழ நிகழ சுருக்கமாக உடனுக்குடன் அறிய டுவிட்டர் தேடல் உதவும். இப்ப நிறைய தமிழ்ப் பதிவர்கள் கூட டுவிட்டரில் இருக்கிறார்கள்.

7. Flickr தளத்தில் நிறைய அழகான படங்கள் இருக்கும். ஆனால், முழு அளவு இல்லாமலோ தரவிறக்கவே முடியாமலோ இருக்கும். Flickrல் முழுப் படத்தையும் உருவுவதற்கு ஒரு குறுக்குவழி.

விளம்பரங்கள் 🙂

8. உளறல் – தமிழ் டுவிட்டர் போல் ஒரு முயற்சி.

கடைசியா ஒரு கேள்வி !

ஒரு தொடுப்பு இடுகையில் குறைந்தது / கூடுதல் எத்தனை தொடுப்புகள் இருந்தால் நன்றாக இருக்கும்?

தொடுப்புகள் – 8 பெப்ரவரி 2008

பல ஆங்கிலப் பதிவுகளில் Links for this week, Links for today என்று தொடுப்பு கொடுப்பதையே வேலையாக வைத்திருக்கிறார்கள். தொடுப்புப் பதிவுகள் என்று பதிவு வகையே இருக்கிறது. நாளைக்குப் பல பக்கங்களை பயர்பாக்ஸ் உலாவியில் சேர்த்து வைக்கிறேன். எல்லாவற்றையும் Del.icio.us போன்ற தளங்களில் ஏற்றிப் பகிர பொறுமையும் தேவையும் இருப்பதில்லை. எனவே, எனக்குப் பயன்பட்ட சுவையான, பயனுள்ள தகவல்களைத் தரும் தொடுப்புகளை அவ்வப்போது இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

* விண்டோஸ் எக்ஸ்ப்பி கணினியை வேகமாக்குவது எப்படி? – இதில் உள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி இப்ப என் கணினி 40% மடங்கு வேகமாகிடுச்சு !

* Matt cuts வழங்கும் ஜிமெயில் உதவிக் குறிப்புகள்

* புகழ்பெற்ற வலைப்பதிவராக ஆவது எப்படி?

cartoon from www.weblogcartoons.com

Cartoon by Dave Walker. Find more cartoons you can freely re-use on your blog at We Blog Cartoons.

* ReadBurner – பல மொழி கூகுள் பகிர்வுகளைத் திரட்டிக் காட்டும் தளம். இதைத் தான் ஓராண்டு முன்னரே மாற்று! என்ற பெயரில் தமிழுக்குச் செய்தோம். 

* Uncylopedia – கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியா படித்து மண்டை காய்ந்து இருப்பவர்கள் இந்த கொலைவெறிக் களஞ்சியத்தைப் படித்து வாய் விட்டுச் சிரிக்கலாம்.

* Freerice.com – GRE காலத்துக்குப் பிறகு ஆங்கிலச் சொற்தொகையைச் சோதித்துப் பார்த்து விளையாட உதவிய தளம்.

* FileHippo – இந்தத் தளத்தில் உள்ள சூடான பதிவிறக்கங்களைத் துழாவினால் சில உருப்படியான மென்பொருள்கள் கிடைக்கின்றன.

* Poverty – இந்தத் தள முகப்பில் நொடிக்கொரு முகம் தோன்றித் தோன்றி மறையும். முகங்கள் அழகா இருக்கே என்று யோசிக்கும் முன் ஒன்றை அறிந்து கொள்ளுங்கள். அம்முகங்கள் அண்மையில் பட்டினிக் கொடுமையால் இறந்தவர் முகங்கள் 🙁

* Pen Drive Linux – போகும் இடம் எல்லாம் லினக்ஸ் பென்குயினைக் கொண்டு செல்ல.

* உருப்படியான வலைப்பதிவு நுட்பக் குறிப்புகள் வழங்கும் ProBlogger

* Google Webmaster central – உங்கள் இணையத்தளத்தைக் கூகுள் பார்வையில் அறிய.

* NHM Converter – பல MB கோப்பையும் அசராமல் வழுவில்லாமல் குறியாக்கம் மாற்றித் தருகிறது. தமிழுக்கு ஒரு அருமையான இலவச மென்பொருள். முன்பு சுரதாவின் பொங்கு தமிழ் செயலியைச் சார்ந்து இருந்தேன்.

* µTorrent – ரொம்ப நாளா பிட்டொரன்ட் செயலி தான் பயன்படுத்தினேன். ஆனா, மியூடொரன்ட் சிறந்ததுங்கிறாங்க.

* கூகுள் திரட்டும் தமிழ்ப்பதிவுகளை கண்டுகொள்வது எப்படி 

சரி, இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி..

இணைப்பு, சுட்டி, தொடுப்பு – இந்த மூன்றில் link என்பதற்கு ஈடாக உங்களுக்குப் பிடித்த சொல் என்ன? முதலில் இணைப்பு, சுட்டி என்று சொல்லிக் கொண்டிருந்து இப்ப தொடுப்பு என்ற சொல் எனக்குப் பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. காரணம்: தொடுப்பு என்ற சொல் link என்பதற்கு ஈடாக இணையம், கணினி துறைகளுக்கு வெளியேயும் பயன்படுத்தலாம். பயன்படுகிறது. எனக்கும் அவனுக்கும் ஒரு தொடுப்பும் இல்லை என்று எங்கள் ஊரில் சொல்வதுண்டு.