Tag: தமிழ்
-
தமிழ் செல்பேசி
—
in தமிழ்நோக்கியா 5130 செல்பேசி வாங்கி இருக்கேன். தமிழ் விசைப்பலகை, இடைமுகப்பு, பயனர் வழிகாட்டி, தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருக்கிறது. உங்கள் செல்பேசியிலும் தமிழ் ஆதரவு பெற, அருகில் உள்ள Nokia Care கடைக்குச் சென்று கேளுங்கள். உங்கள் தொலைப்பேசி வகையில் தமிழ் ஆதரவு தர இயலும் என்றால், இலவசமாகவே செய்து தருவார்கள். தமிழ் எழுதும் முறை தமிழ்99 முறையை ஒத்திருப்பது மகிழ்ச்சி. க+ஆ=கா என்று எழுத வேண்டும். செல்பேசியில் இப்படி தமிழ் எழுதிப் பழகும் மக்கள்…
-
ஊடகத் தமிழ்
—
in தமிழ்“தமிழ் வெகுமக்கள் ஊடக நிறுவனங்கள் பெருமளவு தமிங்கிலத்தில் எழுதுகின்றன. தமிழ் இலக்கண முறைகளை மதிப்பதில்லை. ஆனால், இந்நிறுவனங்களின் தொலைக்காட்சிகள், இதழ்கள், திரைப்படங்கள் நன்றாக “விற்று” வெற்றி பெறுகின்றன. எனவே, இது இவ்வூடகங்கள் முன்னிறுத்தும் “தற்காலத் தமிழுக்கு” மக்கள் தரும் ஆதரவு ஆகும். NewYork Times, Washington Post போன்றவற்றின் எழுத்து நடையை யாரும் விமர்சிப்பது இல்லை. மக்கள் ஊடகங்களான வலைப்பதிவுகள் கூட, வெகுமக்கள் ஊடக நடையிலேயே உள்ளன. எனவே, தமிழ் ஊடகங்களின் எழுத்து நடையை விமர்சிப்பது தவறு.…
-
அடுத்த தனித்தமிழ் இயக்கம்
—
in தமிழ்தமிழ் ஆர்வலர் ஒருவருடன் பேசிய போது தனித்தமிழ் இயக்கம் பற்றி பேச்சு வந்தது. திரும்பவும் ஒரு தனித்தமிழ் இயக்கம் வர வாய்ப்புகள் குறைவு என்றார். அதற்கு அவர் சொன்ன காரணங்கள்: * பெருஞ்சித்திரனார், மறைமலை அடிகள், தேவநேயப்பாவாணர் போல் ஒரு இயக்கத்தை முன்னெடுக்கக்கூடிய தமிழ் அறிஞர்கள், தலைவர்கள் இப்போது இல்லை. * சென்ற தனித்தமிழ் இயக்கம் வந்த 20ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் இருந்த உலக கருத்துச் சூழல் இப்போது இல்லை. உலகமே இப்போது பொருள்முதல்வாதமாகவும் வலது சாரி…
-
தமிழ் ஒலிப்புச் சீர்மை
—
in தமிழ்பாகு – paagu பாகி – paagi என்றால் பாகிசுத்தான் ஐ paakkisuththaan என்று ஒலிப்பது தவறல்லவா? பாக்கிசுத்தான் என்று எழுதலாமே? இதா – idhaa னிதா – nidhaa என்றால் அனிதா என்பதை aniththaa என்று ஒலிப்பது தவறல்லவா? அனித்தா என்று எழுதலாமே? ஆடா – aadaa வாடா – vaadaa என்றால் டாடா என்பதை taattaa என்று ஒலிப்பது தவறல்லவா? டாட்டா என்று எழுதலாமே? தேவையான எழுத்துகளை விடுத்து எழுதுவது ஆங்கில வழக்கம். முத்து…
-
எல்லா துறையினருக்கும் ஆங்கிலம் தான் சோறு போடுகிறதா?
—
in தமிழ்தமிழ் நலம் சார்ந்து ஒரு அறிவியல் பேராசிரியர், பொறியாளர், மென்பொருளாளர் என்று யார் பேசினாலும், “ஆங்கில அறிவை வைத்து சோறு திண்பவர்களுக்கு ஏன் தமிங்கிலம் பற்றி இவ்வளவு வெறுப்பு, ஏன் இந்த போலித்தனம்?” என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. எல்லா துறைகளிலும் தொடர்பாடல் மொழியாக ஆங்கிலம் தேவைப்படுகிறது தான். ஆனால், அதற்காக “ஆங்கிலம் தான் சோறு போடுகிறது, அது இல்லாம பிழைப்பியா” என்பதெல்லாம் ரொம்ப… இது ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தமிழை வக்கற்ற மொழியாகச் உருவகப்படுத்தும் நோக்கமுடையது…
-
தமிழ் மொழிக் கல்வி
—
in தமிழ்“ஆங்கில வழியத்தில் பயிலும் குழந்தைகள், வெளிநாடுகளில் வளரும் தமிழ்க் குழந்தைகள் தமிழ் கற்றுக் கொள்ளச் சிரமப்படுகின்றன. தமிழ் எழுத்து முறை இலகுவாக்கினால், தமிழ் படிப்பதை இலகுவாக்கலாம்” எனச் சிலர் கருதுகின்றனர். குழந்தைகள் தமிழ் கற்கச் சிரம்பபடுவதற்கான காரணங்கள்: * பாடச் சுமை. ஒன்றாம் வகுப்புப் பிள்ளைக்குத் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று மூன்று மொழிகளைக் கற்பித்தால் குழம்பாதா? * ஆர்வமூட்டாத தமிழ் மொழிப் பாடத்திட்டம். அலுப்படிக்கும் பயிற்சி முறைகள். திறம் குறைந்த பள்ளிகள். ஆசிரியர்கள். * தமிழ்…
-
ஆங்கில எழுத்து முறை இலகுவானதா?
—
in தமிழ்“ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் மட்டுமே உள்ளது. தமிழில் 247 எழுத்துகள் இருப்பதால் குழந்தைகள் கற்றுக் கொள்ளச் சிரமப்படுகிறார்கள்” என்று சிலர் எழுதுகிறார்கள். ஆங்கில எழுத்துமுறை இலகுவானதா? இல்லை. ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகள் 26. இவற்றில் இருந்து மாறுபடும் சிறிய எழுத்து வடிவங்கள் 16. மொத்தம் 42 எழுத்துகள். எந்தெந்த இடங்களில் பெரிய எழுத்துகள் வரும், வராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். chalk என்பதில் ch ச ஒலி தரும். அதுவே, character என்பதில் ch க…
-
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்
—
in தமிழ்எழுத்துச்சீர்மை பற்றிய பேரா. வா.செ.கு அவர்களின் உரையைக் கண்டேன். தமிழ் உயிர்மெய்யெழுத்துகளில் ஆ, ஐ, எ, ஏ, ஒ, ஓ, ஔ வரிசைகளை எழுத அந்தந்த மெய்யெழுத்துகளையும் அவற்றுக்கு முன்பும் பின்பும் சில குறியீடுகளையும் பயன்படுத்துகிறோம். இது போல், இ, ஈ, உ, ஊ வரிசைகளை எழுதுவதற்காகப் புதிய குறியீடுகளை அறிமுகப்படுத்துகிறார். இந்தச் சீர்திருத்தத்தை முன்வைப்பதற்கு முக்கிய காரணமாக தமிழகத்துக்கு வெளியே 15 இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றும் இச்சீர்திருத்தம் அவர்கள் இலகுவாகத் தமிழ் கற்க உதவும்…
-
தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம்
பார்க்க: Tamil Baby Names Websites நண்பர் கார்த்திக், தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம் ஒன்று உருவாக்கி உள்ளார். விரைவில் இன்னும் ஆயிரக்கணக்கான பெயர்களைச் சேர்ப்போம். உங்களுக்குத் தெரிந்த பெயர்களை இந்தப் படிவத்தில் தரலாம். நேரடியாகவும் Google Spreadsheetல் பெயர்களை உள்ளிடலாம். தற்போதைய தளம் ஒரு முன்னோட்டப் பதிப்பு மட்டுமே. அறியப்பட்ட வழு: * தற்போது தரவுத்தளத்தில் உள்ள தமிழல்லா பெயர்களை நீக்க வேண்டும்.
-
கையொப்பம்
—
in தமிழ்பத்தாம் வகுப்பு வரை படித்த உறவினர் ஒருவர். ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்டு வந்திருந்தார். “தமிழ்ல தான் கையெழுத்து போட்டேன். படிக்காத முட்டாள்னு நினைச்சிருப்பாங்க” என்றார். “படித்த அறிவாளிகளும்” தமிழில் கையொப்பம் இடத்தொடங்கினால் மற்றவர்களின் தாழ்வு மனப்பான்மை நீங்கும். என்ன செய்யலாம்? * (ஏற்கனவே உள்ள ஆங்கிலக் கையொப்பத்தை மாற்ற இயலாதோர்) பணம் /அதிகாரம் தொடர்பற்ற இடங்களிலாவது தமிழிலேயே கையொப்பமிடலாம். * நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில், நம்மைச் சுற்றியுள்ள சிறுவர்களை, தமிழில் கையொப்பமிட ஊக்குவிக்கலாம். “தமிழனே தமிழ்ல கையெழுத்து…