பத்தாம் வகுப்பு வரை படித்த உறவினர் ஒருவர். ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்டு வந்திருந்தார்.
“தமிழ்ல தான் கையெழுத்து போட்டேன். படிக்காத முட்டாள்னு நினைச்சிருப்பாங்க” என்றார்.
“படித்த அறிவாளிகளும்” தமிழில் கையொப்பம் இடத்தொடங்கினால் மற்றவர்களின் தாழ்வு மனப்பான்மை நீங்கும்.
என்ன செய்யலாம்?
* (ஏற்கனவே உள்ள ஆங்கிலக் கையொப்பத்தை மாற்ற இயலாதோர்) பணம் /அதிகாரம் தொடர்பற்ற இடங்களிலாவது தமிழிலேயே கையொப்பமிடலாம்.
* நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில், நம்மைச் சுற்றியுள்ள சிறுவர்களை, தமிழில் கையொப்பமிட ஊக்குவிக்கலாம். “தமிழனே தமிழ்ல கையெழுத்து போடாட்டி, வேற எவன் போடுவான்”னு என் தமிழ் ஆசிரியர் சொன்னதே நான் தமிழில் கையொப்பமிடுவதற்கான தூண்டுதல்.
Comments
9 responses to “கையொப்பம்”
என்னுடைய பல்கலைக்கழக நண்பர்கள் பலர் தமிழில் தான் தங்களின் உத்தியோகபூர்வ கையொப்பங்களை போடுகிறார்கள்…
எனது கையெழுத்து தமிழும் இல்லை, ஆங்கிலமும் இல்லை, ஒரு சில கோடுகளால் கிறுக்கும் வடிவம் 🙂
//எனது கையெழுத்து தமிழும் இல்லை, ஆங்கிலமும் இல்லை, ஒரு சில கோடுகளால் கிறுக்கும் வடிவம் //
மொழிகளைக் கடந்து எங்கயோ போயிட்டீங்க, நிமல் 😉
வங்கி போன்றவற்றில் முதலில் ஆங்கிலக் கையெழுத்து,பிறகு தமிழ் என்று மாற்றுவது எளிதல்ல.நடைமுறையில் ஒரே கையெழுத்தை ஒரே மொழியில்
இடுவது பல பிரச்சினைகளை தவிர்க்கும்.பலர் இன்று தமிழில் எழுத கணிணியை பயன்படுத்துகின்றனர்.பேனா பிடித்து தமிழில் எழுத தேவை
இல்லாதவர்களுக்கும் கணினிதான் தமிழ் எழுத உதவுகிறது.என் அன்றாட
வாழ்வில் பேனாவால் தமிழில் எழுத, கையொப்பம் இட தேவையே இல்லை.
தமிழில் கையெழுத்து போடுவது எனக்கு கடினம்.ஏனெனில் தமிழில் பேனாவால் எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.என் போன்றோருக்கு
ஆங்கில கையெழுத்தே சிறந்தது. நாளையே நான் தமிழ்நாட்டில் வாழ
நேர்ந்தாலும் ஆங்கில கையெழுத்துதான் நடைமுறையில் சிக்கல் இல்லாதது.
தமிழக அரசு ஊழியர்கள் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்று விதி
உள்ளதா?
//தமிழில் கையெழுத்து போடுவது எனக்கு கடினம்.ஏனெனில் தமிழில் பேனாவால் எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.//
எத்தனை ஆண்டுகளுக்கு முன் எழுதி இருந்தாலும், ஒரே ஒரு பெயரை தமிழில் எழுதுவது அவ்வளவு கடினமா?? 🙁
//நாளையே நான் தமிழ்நாட்டில் வாழ
நேர்ந்தாலும் ஆங்கில கையெழுத்துதான் நடைமுறையில் சிக்கல் இல்லாதது.//
என்ன விதமான சிக்கல் என அறியலாமா? gazette, வங்கிக் கணக்கு, சொத்துப் பத்திரம் என்று எல்லா இடத்திலும் மாற்றுவதற்கு நேரம் வீணாகும், குழப்பங்கள் வரலாம் என்று அறிவேன். இத்தகையோரிடம் நான் எதிர்ப்பார்ப்பது, நாம் நண்பர்களுக்கு கடிதம் எழுதும் போதோ, எங்காவது பொது இடங்களில் வருகைப் பதிவேட்டில் எழுதும் போதாவது தமிழில் கையொப்பம் இடலாம் என்பதே.
//தமிழக அரசு ஊழியர்கள் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்று விதி
உள்ளதா?//
ஆம்.
ஆம் நண்பரே சிரீசிரீ விதி உள்ளது .
அன்புடன்.
மீ.அ.
If ur a tamilan should u sign ur own language,.
otherwise u dont do that
கையெழுத்து, கையொப்பம் என்பது ஒருவர் தானகத் தேர்ந்து தன்னை அடையாளப்படுத்தும் ஓர் கைச்சாத்து (கையெழுத்தால் அமைந்த அடையாளச் சான்று). இது எம்மொழியிலும் இருக்கலாம், மொழிகடந்த படங்களாகவும் இருக்கலாம். டென்னிசு விளையாடும் ஒருவர் தன் ஆர்வத்தால் டென்னிசு மட்டைகளின் படங்களைக் கூடத் தன் கையெழுத்தாகப் பயன்படுத்தலாம் (இப்படி சிலர் இடுவதாக கேள்விப்பட்டுள்ளேன்). கையெழுத்து என்பது தன்னை அடையாளப்படுத்த தான் தேர்வது, அது எப்படியும் இருக்கலாம். தமிழன் தமிழில் கையெழுத்திடுவது இயற்கை. சட்டத்தால் கட்டுப்படுத்துவது தவறு.
கையெழுத்து இடுவதற்காக ஆங்கிலம் அறியாதவர்கள் ஆங்கில எழுத்துக்களில் (இலத்தீன்/உரோமானிய எழுத்துக்களில்) தன் பெயரை எழுதக் கற்றுக்கொண்டு கையெழுத்தாக இடுவதைக் கண்டிருக்கின்றேன். இதெல்லாம் பெரும்பாலான நேரங்களில் வடிகட்டின தாழ்வு மனப்பான்மை, போலி நாகரீக உணர்வுகளால் எழும் கோணல் போக்குகள். என் கையெழுத்து எல்லா இடங்களிலும் எப்பொழுதும் தமிழில் தான். இந்தியாவில் தான் பல இடங்களில் என் உரிமையை நிலைநாட்டப் போராட வேண்டியிருந்தது, இங்கே நான் வாழும் கனடாவில் யாரும் ஏன் தமிழில் கையெழுத்து இடுகிறீர்கள் என்று கேட்டதில்லை. பெயரையும், கையெழுத்தையும் சட்டப்படி, அரசு ஒப்புதல் பெற்ற ஒன்றாக எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும். சற்று பணம் செலவாகும், அவ்வளவுதான். விரும்புபவர்கள் கட்டாயம் செய்யலாம். பார்க்கவும்: http://en.wikipedia.org/wiki/Name_change
Nanry naanum vavetkiren.
நான் என் கையெழுத்தை தமிழில் மாற்ற வேண்டும் .. அதற்கு எவ்வளவு விதிமுறைகள் வழிமுறைகள் இருதாலும் பரவாயில்லை ..
யாராவது அதற்கான வழிமுறை சொல்ல முடியுமா தெரிந்தவர்கள் …