பாகு – paagu
பாகி – paagi
என்றால்
பாகிசுத்தான் ஐ paakkisuththaan என்று ஒலிப்பது தவறல்லவா? பாக்கிசுத்தான் என்று எழுதலாமே?
இதா – idhaa
னிதா – nidhaa
என்றால்
அனிதா என்பதை aniththaa என்று ஒலிப்பது தவறல்லவா? அனித்தா என்று எழுதலாமே?
ஆடா – aadaa
வாடா – vaadaa
என்றால்
டாடா என்பதை taattaa என்று ஒலிப்பது தவறல்லவா? டாட்டா என்று எழுதலாமே?
தேவையான எழுத்துகளை விடுத்து எழுதுவது ஆங்கில வழக்கம்.
முத்து – muthu
முது – muthu
ஒரே எழுத்துக்கூட்டலுக்கு இரு வேறு ஒலிப்புகள் இருப்பது குழப்பும்.
பெரும்பாலும், பிற மொழிப் பெயர்ச் சொற்களைத் தமிழில் எழுதும் போது இப்பிழை விடுகிறோம்.
தமிழில் ஒலிப்பதைத் தான் எழுதுகிறோம். எழுதுவதைத் தான் ஒலிக்கிறோம்.
தமிழ் எளிமையாக இருப்பதற்கு இச்சீர்மை இன்றியமையாதது.
இச்சீர்மை கெடாமல் எழுத முயல்வோமே?
Comments
3 responses to “தமிழ் ஒலிப்புச் சீர்மை”
முனைவர் இரா. திருமுருகன் ‘இனிய தமிழைப் பிழையின்றி எழுத எளிய வழிகள்’ என்ற கையெட்டில் கூறுவதை படிக்கவும் ((மார்ச்2005)thamizham.net(வரிசை எண் 73)பக்கங்கள் 12, 13, 14, 15 ).
அவ்வாறு இடையில் ஓற்று வராமல் இருப்பதனால் தான் அவை வேற்று மொழிச்சொல் என எடுத்துக்கொள்ள வேண்டுமாம்.
முரளி, நீங்கள் கூறுவது சிந்திக்கத்தக்கது. தமிழ்வயப் படுத்தப்பட்ட பிற மொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்களாகவே எண்ணப்படுவதையும், வலிந்து திரிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள் வேற்று மொழிச் சொற்கள் போல் காட்சியளிப்பதையும் காண இயல்கிறது. எது தமிழ்ச் சொல் என்று உய்த்துணர தக்க வழிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால், அதற்காக தமிழின் ஒலிப்புச் சீர்மையைக் குலைக்க வேண்டுமா எனத் தெளிவில்லை.
நன்றாக உள்ளது, பணி தொடர வாழ்த்துக்களுடன் துணையும் நிற்போம்!!!!