பாகு – paagu
பாகி – paagi
என்றால்
பாகிசுத்தான் ஐ paakkisuththaan என்று ஒலிப்பது தவறல்லவா? பாக்கிசுத்தான் என்று எழுதலாமே?
இதா – idhaa
னிதா – nidhaa
என்றால்
அனிதா என்பதை aniththaa என்று ஒலிப்பது தவறல்லவா? அனித்தா என்று எழுதலாமே?
ஆடா – aadaa
வாடா – vaadaa
என்றால்
டாடா என்பதை taattaa என்று ஒலிப்பது தவறல்லவா? டாட்டா என்று எழுதலாமே?
தேவையான எழுத்துகளை விடுத்து எழுதுவது ஆங்கில வழக்கம்.
முத்து – muthu
முது – muthu
ஒரே எழுத்துக்கூட்டலுக்கு இரு வேறு ஒலிப்புகள் இருப்பது குழப்பும்.
பெரும்பாலும், பிற மொழிப் பெயர்ச் சொற்களைத் தமிழில் எழுதும் போது இப்பிழை விடுகிறோம்.
தமிழில் ஒலிப்பதைத் தான் எழுதுகிறோம். எழுதுவதைத் தான் ஒலிக்கிறோம்.
தமிழ் எளிமையாக இருப்பதற்கு இச்சீர்மை இன்றியமையாதது.
இச்சீர்மை கெடாமல் எழுத முயல்வோமே?