Tag: தமிழாக்கம்

 • தமிழ் TuxPaint

  குழந்தைகள் வரைவதற்கான TuxPaint மென்பொருளைத் தமிழாக்கி உள்ளோம். 2004ல் தமிழா குழுவினர் வெளியிட்ட தமிழாக்கம் TSCIIயில் இருந்தது. அதை ஒருங்குறிக்கு மாற்றி, கூடுதலாக இருந்த புதிய சரங்களைத் தமிழாக்கி உள்ளோம். 1. TuxPaint மென்பொருளைத் தரவிறக்கி நிறுவுங்கள். 2. நிறுவுகையில் configurationல் Languages என்பதில் தமிழைத் தெரிவு செய்யுங்கள். ஏற்கனவே நிறுவி இருந்தால், (விண்டோசு கணினியில்) C:\Program Files\TuxPaint போய் Tuxpaint-config என்பதைச் சொடுக்கி அமைப்பை மாற்றலாம். 3.  C:\Program Files\TuxPaint\locale\ta\LC_MESSAGES என்ற இடத்தில் உள்ள Tuxpaint.mo கோப்பை நீக்குங்கள். 4.…

 • பிற மொழியாளர் கண்டுபிடிப்புகளுக்குத் தமிழ்ப் பெயர் தரலாமா?

  “பிற மொழியாளர் கண்டுபிடிப்புகளுக்கு அவர்கள் இட்ட பெயரே தர வேண்டும். அதுவே அவர்களுக்குத் தரும் மதிப்பு. தமிழில் பெயர் தருவது அவர்கள் அறிவைத் திருடுவது போல. கண்டுபிடிக்க வக்கில்லாத நாம் ஏன் பெயரை மட்டும் தமிழில் வைக்க வேண்டும்” என்பது போன்ற சிந்தனைகளைச் சில இடங்களில் கண்டேன். இச்சிந்தனை தவறு. * கண்டுபிடிப்பின் பெயரில் கண்டுபிடித்தவர் பெயர், வணிக உரிமை பெற்ற பெயர் இருந்தால் மட்டுமே தமிழாக்கக்கூடாது. எடுத்துக்காட்டுக்கு, Diesel எல்லா மொழிகளிலும் Diesel தான். ஏனெனில்,…

 • ஆன்

  counter, filter, reader போன்று -er இல் முடியும் ஆங்கிலச் சொற்களையும் இன்ன பல சொற்களையும் எண்ணுவான், வடிகட்டுவான், படிப்பான் என்று -ஆன் விகுதி போட்டு தமிழாக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இதைத் தவிர்க்கலாம். இத்தகையை சொற்களுக்கு -இ விகுதி உதவலாம். சுருக்கமாகவும் மேற்கண்ட குறைகள் இல்லாமலும் இருக்கும். எ.கா: Counter – எண்ணி, Washer – துவைப்பி, கழுவி.

 • ஏன் பாடநூல் கலைச்சொற்களை அப்படியே பின்பற்றத் தேவையில்லை?

  பீடபூமி என்ற சொல்லுக்குப் பதில் மேட்டுநிலம் என்ற சொல்லை ஆளலாமா என்றொரு உரையாடல் தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழ்ந்தது. “பீடபூமி என்ற சொல் பாடநூல் வழக்கில் இருப்பதால் இச்சொல்லையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்; ஒவ்வொரு கலைச்சொல்லிலும் குற்றம் கண்டுபிடித்து மாற்றிக் கொண்டிருந்தால் மாணவர்கள் குழம்ப நேரிடும்” என்று  ஒரு பக்க வாதம் இருந்தது. குழப்பங்களைத் தவிர்க்க கலைச்சொற்களில் ஒருங்கிணைவு அவசியம் என்றாலும் எல்லா இடங்களிலும் பாடநூல் கலைச்சொற்களை மாற்றாமல் அப்படியே பயன்படுத்தத் தேவையில்லை. ஏன்? 1. தற்போதும் கூட…

 • வாழ்த்துகள்

  இன்னைக்கு அக்கா கிட்ட இருந்து “காலை வணக்கம்” என்று “தமிழில்” மடல் வந்தது. இப்படி காலை வணக்கம், மதிய வணக்கம்னு சொல்றது சரியா? ஏன்னா அது good morning என்பதன் நேரடித் தமிழாக்கமே தவிர, நம் பண்பாட்டில் இப்படி நேரத்தோடு சேர்த்து வணக்கம் சொல்வது இல்லையே? நெருங்கிய உறவுகளுக்குள் வணக்கம் சொல்லும் வழக்கமும் இல்லை. தவிர, good morning என்ற வாழ்த்து தரும் பொருளும் வணக்கம் என்ற சொல் தரும் பொருளும் வேறு வேறு அல்லவா?

 • இடைமுகப்புத் தமிழாக்கம்

  தளங்கள், மென்பொருள்களைத் தமிழாக்குகையில் அவற்றின் தொனி எப்படி இருக்க வேண்டும் என்ற உரையாடல் தமிழ் விக்சனரி குழுமத்திலும் கணிமை வலைப்பதிவிலும் நடக்கிறது. இந்த உரையாடல்களில் இருந்து இது ஒரு நோக்குப் பிரச்சினை என்று புரிகிறது. இவை நாம் கணினிக்குத் தரும் கட்டளைகள் என்று சிலரும், கணினி தம்மை நோக்கி அறிவுறுத்துவனவாக சிலரும் உணர்கிறார்கள்.  * இவை உயிரற்ற கணினிக்கு இடும் கட்டளைகள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், கணினி தம்மைப் பார்த்துச் சொல்வதாக நினைக்கும் ஒவ்வொருவரிடமும் போய் “இது…

 • எளிய தமிழ்

  தகுந்த இடங்களில் புதிய பொருத்தமான சொற்களைப் பயன்படுத்துவதும் கற்றுக் கொள்வதும் தவிர்க்க இயலாதது. புல்லாங்குழல் என்று சொன்னால் கூடத் தான் குழந்தைக்குப் புரியாது. அதற்காக காலத்துக்கும், ஓட்டை போட்ட இசைக் கருவி / பீப்பீ என்றே அதற்குப் புரிகிற மாதிரி சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? நம்மில் பலரும் புதிய தமிழ்ச் சொற்களைக் கற்றுக் கொள்வதை பள்ளிக்கூடக் காலத்துடன் நிறுத்திக் கொள்கிறோம். இது தான் பிரச்சினை. இந்தக் குறைவான சொற் தொகையைக் கொண்டு எப்படி உலகின் எல்லா கருத்துக்களையும்…

 • மக்கா சொற்கள்

  தமிழ் வேர் உள்ள சொற்கள் பல்வேறு விதமாக கிளைத்துப் பெரும்பயன் தரவல்லது. கடன்பெறும் சொற்கள் அப்படிப்பட்டன அல்ல. மண்ணில் போட்ட பிளாஸ்டிக் போல் துருத்திக்கொண்டு நிற்கும். நியூ என்பது எளிய சிறிய சொல்தானே, ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது? புது என்றால் அது மேலும் “புத்” என்று சுருக்கம் கொண்டு புத்+ஆண்டு = புத்தாண்டு, புத்துணர்வு, புத்தூக்கம், புத்திணக்கம், புத்தெழுச்சி என்று எத்தனையோ சொற்கள் ஆக்கலாம். புதிய கிளர்சியூட்டும் பொருள்கள் கிட்டும். நியூ உணர்ச்சி, நியூ ஊக்கம் , நியூ…

 • வேர்ட்பிரெசு தமிழாக்கம் தந்த படிப்பினைகள்

  டிசம்பர் 2007ல் வேர்ட்பிரெஸ் தமிழாக்கத்துக்கான ஒரு பெருமெடுப்பிலான அழைப்பு விடுத்த ஒரு சில நாள்களிலேயே 3000க்கும் மேற்பட்ட சரங்களைத் தமிழாக்கினோம். அதில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்

 • பெயர்ச்சொல் தமிழாக்கம்

  நாட்டுப் பெயர்கள் தவிர, ஊர்ப்பெயர்கள், மொழிகளின் பெயர்கள் என்று பல இடுகுறிப் பெயர்களும் கூட உள்ளூர் ஒலிப்பு, பேசப்படும் மொழியின் இலக்கணம் ஆகியவற்றுக்கு ஏற்ப இசைந்தும் திரிந்தும் ஒலிப்பது இயல்பே. இதில் நகைக்கவும் கண்டிக்கவும் ஒன்றும் இல்லை. முன்னை விட உலகின் பல பகுதிகளிலும் தமிழர்கள் பரவி வாழும் இந்த வேளையில் அந்தந்த உள்ளூர் வழக்கங்களை நேரடியாகத் தமிழுக்குக் கொணர்வதே தமிழை வளப்படுத்தவும் அவ்வூர் வழக்கங்களைச் சிறப்பிக்கவும் உதவும். நேரடியாக அந்தந்த மொழியினருடன் தொடர்பு கொள்ள இயலும்…