ஜட்டி காயப் போடுவது எப்படி?

ராத்திரி துவைச்சு வீட்டுக்குள்ளயே காயப் போட்ட எல்லா ஜட்டியும் காயல. drierக்கு உள்ள payment cardலயும் பணம் இல்ல. துவைச்சு காஞ்ச ஜட்டியும் ஒன்னும் இல்ல. ஜட்டி போடாம பள்ளிக்கூடம் போய் பல வருசம் ஆச்சு. ஆக, அன்னிக்கு காலைல தான் இந்த கேள்வி உதிச்சுச்சு.

உடனடியாக ஜட்டி காயப் போடுவது எப்படி?

ம்..பால் காய வைச்சுக்கிட்டே யோசிச்சப்ப தான் அந்த idea வந்துச்சு..பால் எல்லாம் காய வைக்கிற micro wave oven க்கு ஜட்டி காய வைக்கத் தெரியாதா? பாலுக்கு 2 நிமிசம். ஜட்டிக்கு 1 நிமிசம் போதும்னு நினைச்சு ஜட்டிய ஒரு தட்டுல வைச்சு ovenக்குள்ள அனுப்பியாச்சு.

living roomல வந்து பால ஆற வைச்சுக் குடிச்சுக்கிட்டு இருக்கையிலயே ஏதோ ஒரு வாசம்..ம்ம்..அடுப்புல ஒன்னும் வைக்கலயே?? பால் தான தீயும்..வேற என்ன தீயும்??

ஆஆ..ஜட்டீஈஈஈஈஈஈஈஈ..50 ரூபாய் VIP ஜட்டீ..

ஓடிப் போய ovenஅ திறந்தா ஒரே புகை மூட்டம்..குளிர்காலத்துக்கு வீடு எல்லாம் ஜன்னல் அடைச்சு வச்சிருந்தது.

புகையப் போக்க காத்து வேணுமே? சரின்னு ஜன்னல திறந்த காத்தோட்டமா இருக்கணுமேன்னு ஜட்டிய வெளிய பிடிச்சா, அடிச்ச காத்துக்கு ஜட்டி பத்திக்கிட்டு எரியுது.!!

ஜட்டி சுட்டதடா ! கை விட்டதடா !! 🙁

அப்புறம் தான் மண்டைல விளக்கு எரிஞ்சது. நெருப்ப அணைக்க தண்ணி கூட பயன்படும்னு..உடனே குழாய திறந்து ஜட்டியில் பற்றிய நெருப்பை அணைச்சாச்சு..

நல்ல வேளை வீட்டுல டச்சுப் பிள்ளைகள் இல்ல..இல்லாட்டி, என் மானம் மருவாதி எல்லாம் கப்பல் ஏறி இருக்கும்..சுத்தம், சுகாதாரம்னு கத்துற அந்த பிள்ளைகள்ட்ட பாட்டும் வாங்கி இருக்க முடியாது.

எரிச்சு முடிஞ்சதுக்கப்புறம், நல்ல ஜட்டி ஒன்னு மறைஞ்சு இருத்தது கண்ணுல தெரிஞ்சுச்சு. அத எடுத்துப் போட்டுக்கிட்டு, புகை போக எல்லா ஜன்னலயும் திறந்து வைச்சிட்டு, எரிஞ்ச ஜட்டிய குப்பை தொட்டில மறைச்சி வச்சிட்டு, college கிளம்பிப் போயாச்சு..இத என் colleague கிட்ட சொன்னப்ப ஏன் iron box பயன்படுத்தலன்னு கேட்டார்..ஹ்ம்..அத எப்படி மறந்தேன்??

இது ஒரு மானக்கேடான விசயம் தான். ஆனா, கேட்டவங்க எல்லாம் சிரிச்சாங்க..

எத்தனை நாளைக்கு தான் வடிவேலப் பார்த்தே சிரிக்கிறது..

ம்ம்..நான் எல்லாம் என்னத்த research பண்ணி என்னத்த கண்டுபிடிச்சு??

🙂 🙂