புதிய தனித்தள வேர்ட்பிரெஸ் பயனர்களுக்கான குறிப்புகள்

1. Filezilla போன்ற ftp செயலி மூலமாக உங்கள் /blog அடைவில் வலச் சொடுக்கி file attributes பாருங்கள். அதில் read, write, execute என்ற 3×3 தெரிவுகளையும் தேர்ந்தெடுத்து recurse into subdirectories என்பதையும் குறியுங்கள்.

இந்த ஏற்பாடு வலைத்தளத்தில் இருந்து உங்கள் வழங்கியில் மாற்றங்களைச் செய்வதற்கான அனுமதியைத் தரும். இவ்வாறு செய்வது design-theme editor, plugins-plugin editor போன்றவற்றில் இருந்து வலையூடாக மாற்றங்கள் செய்ய உதவும்.

2. நிரந்தரத் தொடுப்பை மாற்றுங்கள்.

settings-permalink போய் custom என்ற பெட்டியில் /%postname%/ என்று கொடுத்து சேமித்தால் உங்கள் முகவரி தானாக மாற்றப்பட்டு விடும். இந்த மாற்றத்தைச் செய்ய .htaccess கோப்பில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும். முந்திய அடியில் சொன்னது போல் நாம் file attribute மாற்றங்கள் செய்திருந்தால் வேர்ட்பிரெஸே இந்த மாற்றத்தைச் செய்து விடும்.

3. பொதுவாக, வேர்ட்பிரெஸ்ஸில் ஒரு சிக்கல் என்றால் எல்லா நீட்சிகளையும் முடக்கி விட்டு இயல்பிருப்பு வார்ப்புருவுக்கு மாற வேண்டும். பிறகு ஒவ்வொரு நீட்சியாகப் போட்டுப் பார்த்து எதில் கோளாறோ அதைச் சரி செய்த பிறகு வேண்டிய வார்ப்புருவுக்கு மாறலாம். http://wordpress.org/extend/themes/ முகவரியில் கிடைக்கும் வார்ப்புருக்கள் பிரச்சினையின்றியும் வேர்டுபிரெசின் அனைத்து வசதிகளையும் தருவதாகவும் இருக்கலாம்.

4. வேர்ட்பிரெஸ் தரவுத் தளம் உங்கள் /blog அடைவுக்குள் இல்லை. தனியே இன்னொரு இடத்தில் இருக்கிறது. எனவே, பிரச்சினைகளைச் சரி செய்வதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் வேர்ட்பிரசை மீள நிறுவிப் பார்க்கலாம். மீள நிறுவும் முன் உங்கள் wp-content அடைவையும், wp-config கோப்பையும் படி எடுக்க மறவாதீர்கள்.

5. MistyLook வார்ப்புருவில் தமிழ்ப் பதிப்பும் இருக்கிறது. MistyLook பதிவிறக்கப் பக்கத்தில் இருந்து Tamil translation file என்னும் zip கோப்பைப் பெற்று பிரித்து எடுத்தால் ta_TA.mo என்று இருக்கும். அதை உங்கள் வழங்கியில் உள்ள mistylook அடைவுக்குள் போடுங்கள். பிறகு, பதிவின் wp-config கோப்பில்

define (‘WPLANG’, ”);

என்ற வரியை

define (‘WPLANG’, ‘ta_TA.mo’);

என்று மாற்றவும். அவ்வளவு தான்.

விவரங்களுக்கு

http://wprocks.com/wordpress-tips/how-to-use-an-internationalized-theme-for-wordpress/

இந்தத் தமிழாக்கத்தை வேண்டியவாறு எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இதைச் செய்ய http://www.poedit.net/download.php செயலியைத் தரவிறக்க வேண்டும். பிறகு, உங்கள் mistylook அடைவில் உள்ள POT கோப்பைத் திறந்து தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். உங்களிடம் உள்ள mo கோப்புக்குத் தகுந்த தமிழாக்கங்கள் POT கோப்பில் இருக்காது. இதற்கான மூலத் தமிழ் POT கோப்பு என்னிடம் இருக்கிறது. யாருக்கும் வேண்டுமானால் அனுப்பி வைக்கிறேன்.

6. அருட்பெருங்கோ புதிய தமிழ்மணம் கருவிப்பட்டை நீட்சி செய்திருக்கிறார். இது தமிழ்மணம் கருவிப்பட்டையைப் பக்கத்தின் இறுதியில் சேர்க்கும். எனவே, பக்கத்தின் தரவிறக்க வேகத்தைப் பாதிக்காமல் இருக்கும். 

தமிழ்மண நீட்சி /images அடைவுக்குள் ஒரு குரங்குத் தலை படம் இருக்கும். அதை நீக்கி உங்கள் படத்தை default.png என்ற பெயரில் பதிவேற்றுங்கள். நீங்கள் தமிழ்மணத்தில் இடுகைகளை அளிக்கும் போது இந்தப் படத்தைக் காட்டும்.

7. settings-discussion போய் before a comment appears என்பதில் முதல் தெரிவை நீக்கி மற்ற இரண்டையும் தேர்வு செய்யுங்கள். இப்படிச் செய்வதன் மூலம், ஏற்கனவே மறுமொழி இட்டவர்களின் மறுமொழிகளை மட்டுறுத்தத் தேவை இருக்காது. உங்கள் நண்பர்களின் மறுமொழிகள் உடனுக்குடன் வெளியாக உதவும்.

பயனுள்ள தொடுப்புகள்:

WordPress.org உதவி மன்றம். – உங்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு இங்கு ஏற்கனவே பதில் இருக்கும்.

* WordPress.org ஆவணங்கள் – வேர்ட்பிரெஸ் நிரலில் மாற்றங்கள் செய்வது குறித்த வழிகாட்டி.

* How to install a self-hosted WordPress blog?

* Blogger to WordPress converts – Beginner questions

* Tamil in WordPress

* தமிழ் வேர்ட்பிரெஸ் பயனர்கள் குழுமம்

* வேர்ட்பிரெஸ் பதிவுகளில் ஜிலேபி எழுத்துப் பிரச்சினையை நீக்குவது எப்படி?

* வேர்ட்பிரெஸ் குறித்த சின்னச் சின்ன ஐயங்களைக் கேட்டுத் தெளிய http://ravidreams.net/forum ஐப் பயன்படுத்த வரவேற்கிறேன்.