Mummy

பக்கத்து வீட்டு அக்கா பையன் Mummyனு கூப்பிடுறத பார்த்து எரிச்சலா இருந்திச்சு.

“அக்கா, தமிழ் அது இதும்பீங்க. பேர் எல்லாம் கூட இனியன்னு தமிழ்ல வைச்சீங்க. இப்ப ஏன் Mummyன்னு கூப்பிடப் பழக்கினீங்க?”

“இல்லப்பா, சுதீசு சொல்றதைப் பார்த்து இவனும் பழகிட்டான்.”

சுதீசு முதல் பையன். தத்துப் பிள்ளை. அக்காவின் நாத்தனாரும் அவர் கணவரும் தற்கொலை செஞ்சுக்கிட்டதால, இவங்க எடுத்து வளர்க்கிறாங்க.

“சரி, சுதீசும் அம்மான்னு கூப்பிடுறது?”

“அம்மான்னு சொன்னா அவங்க அம்மா நினைவு வந்து அழ ஆரம்பிச்சுடுறான். Mummyனு சொன்னா அவனுக்குப் பரவால போல இருக்கு.ரெண்டும் பேரும் வேற வேற மாதிரி அழைக்க முடியுமா? என்னை Mummyன்னாலும் அவங்களை அப்பான்னு தான் அழைக்கிறாங்க”

“மன்னிச்சுக்கங்க அக்கா. தெரியாம கேட்டுட்டேன். அவங்க Mummyன்னே அழைக்கட்டும்”

3 thoughts on “Mummy”

  1. 🙁

    (நான் இந்த அடையாளம் போட எண்ணி வந்தால் ஏற்கனவே இன்னொருவர் போட்டிட்டார். இருந்தாலும் அதைத்தான் போட முடிந்தது.)

Comments are closed.