Category: featured

  • இயற்கை செயற்கை மாயை

    நவீன அறிவியல் மருத்துவத்துக்கு எதிரான மிகப் பெரிய பயம், பரப்புரை என்னவென்றால் அவர்கள் கொடுக்கும் * மாத்திரைகள், மருந்து, தடுப்பூசி ஆகியன செயற்கையான வேதிப் பொருட்கள். இதில் பக்க விளைவுகள் உண்டு. * மாறாக, சித்த மருத்துவம் உள்ளிட்ட மரபு மருத்துவம் தருவது இயற்கையான உணவு, மூலிகைகள் மட்டுமே. இதனால் பக்க விளைவுகள் இல்லை. இந்த உலகில் உள்ள அனைத்துமே வேதிப் பொருட்களால் ஆனது. இதில் இயற்கை, செயற்கை ஏதும் இல்லை. உங்கள் உடலும் சரி, நீங்கள்…

  • பெண் பார்க்கப் போவது எப்படி?

    திருமணத்துக்குப் பெண் பார்க்கப் போவது எப்படி? 1. பெண் பார்க்கச் செல்லும் முன்னரே பெண்ணின் அப்பா / அண்ணன் போன்றோரிடம் தொலைப்பேசி மூலம் சுருக்கமாக பேசி ஒரு அறிமுகம் பெற்றுக் கொள்ளுங்கள். வரும் நேரம், வழி ஆகியவற்றை ஒப்புக்குக் கேட்கலாம். இதனால் முன் பின் அறியாமல் போய் விழிப்பதைத் தவிர்க்கலாம். பெண்ணிடமே முன்கூட்டிப் பேசி விட முடியுமானால் இன்னும் அருமை. பெண்ணின் படிப்பு, வேலை, குடும்பப் பின்னணி இவற்றை வைத்து இதைக் கேட்டுப் பார்க்கலாமா என முடிவு…

  • தமிழில் பெயர்ப் பலகைகள்

    பொருளகம், தங்கும் விடுதி, பெரு அங்காடி, காலணியகம், இனிப்பகம், உணவகம், மின்னணுப் பொருளம், எழுது பொருளகம், கணினி பயிற்சி மையம்.. இப்படிச் சென்னையின் சில கடைகளில் புதிய தமிழ்ப் பெயர்ப் பலகைகள் தென்படுகின்றன. என்னடா, இது தமிழ்நாடு தானா இல்லை இலங்கை, சிங்கப்பூரா என்று குழப்பமாகப் போய் விட்டது 🙂 தமிழில் பெயர் எழுத வேண்டும் என்று முன்பே அரசு உத்தரவு இருந்தாலும், இப்போது செம்மொழி மாநாட்டை முன்னிட்டு அந்த உத்தரவைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துகிறார்களாம். நல்ல மாற்றம்.…

  • கோவையில் உலகத் திரைப்படங்கள்

    கோவையில் கோணங்கள் திரைப்படக் கழகம் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிறும் மாலை 5.45 மணிக்கு ஒரு உலகத் திரைப்படத்தைத் திரையிடுகிறது. விவரங்களுக்கு http://konangalfilmsociety.blogspot.com/ பார்க்கவும். நேற்று Akira Kurosowaவின் Red Beard திரையிட்டார்கள். மிகச் சிறப்பான திரையிடல். தொடர்ந்து செல்ல இருக்கிறேன். உலகத் திரைப்படங்கள் DVD வாங்க HollyWood DVD Shopee என்ற கடை இயங்குகிறது. இதன் முகவரி: கற்பகம் வளாகம், சிறீ வள்ளி திரையரங்க பேருந்து நிறுத்தம் அருகில், 173 / 22,…

  • இந்தி மொழிக் கல்வி

    இந்தி ஒரு தேசிய மொழி இல்லை. இந்தியாவுக்குத் தேசிய மொழி என்று ஏதும் இல்லை. ஒருவர் இந்தி கற்று தான் இந்தியன் என்று நிரூபிக்க வேண்டுமா? ஒழுங்காக வரிகள் கட்டி, சட்டத்தை மதித்து நடந்தால் போதாதா? தமிழ்நாட்டில் இருந்து இந்தி தெரியாத இளைஞர்கள் இந்தியப் படைகளில் சேர்ந்து நாட்டுக்குப் பங்களிப்பதில்லையா?

  • தேடுபொறிகளுக்கு உகந்ததாகத் தளத்தை மாற்றுவது எப்படி?

    தேடுபொறிகளில் முதல் சில முடிவுகளில் எப்படி வருவது? இவை அனைத்தும் 100% நான் முயன்று பார்த்து உறுதிப்படுத்திக் கொண்ட அடிப்படையான விசயங்கள்:

  • PhD, University Research Student Life abroad Vs India, Admission, Funding

    நண்பர் ஒருவர் வெளிநாட்டு ஆராய்ச்சிப் படிப்பு குறித்து மடலில் கேட்டிருந்தார். அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்குப் பதில் கீழே: — நண்பர்: எனக்கு ஒரு தகவல் வேணும்.. நீங்க ஆராய்ச்சி படிப்பு படிக்கிறீங்க இல்லையா, இதுக்கான செலவெல்லாம் எப்படி? – எல்லாமே உங்க கைக்காசா? இல்லை அரசாங்க / பல்கலைக்கழக உதவி ஏதாச்சும் இருக்கா? அப்படி அரசாங்க உதவி உண்டுன்னா, உங்க படிப்புக்கு மட்டுமே இருக்குமா? அல்லது மற்ற செலவுகளுக்கும் தருவாங்களா? அமெரிக்கா மாதிரி research assistant/ teaching…

  • ஒரு நதி போல…

    அன்புன்னா என்ன? இந்தக் கேள்வி தோன்றின முதல் முறையே அன்பைத் தவற விட்டு ரொம்ப நேரமாயிடுச்சோன்னு தோணுது.. இந்தக் கேள்வி எனக்கு எப்ப முதன் முதல தோணுச்சுன்னு சரியா நினைவில்லை. ஆனா, அடிக்கடி வந்து போகும் கேள்வி இது. இதுக்கான பதில் புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. புரிஞ்சும் ஏத்துக்க முடியாத மாதிரியும் இருக்கு. புரியாட்டியும் தேடல் மட்டும் ஓயாம இருக்கு. ஒரு நாள். பெரியம்மா வீட்டுக்குப் போயிருந்தேன். யாரோ யாருக்கோ “நாங்க அத…

  • கணினியில் தமிழில் எழுதுவது எப்படி?

    பார்க்க வேண்டிய பக்கங்கள்: 1. கணினியில் தமிழ் எழுத்துக்கள் தெரிய வைப்பது எப்படி? 2. தமிழில் எழுத மென்பொருள்கள் 3. கணிச்சுவடி 4. தமிழ்த் தட்டச்சுப் பயிற்சிப் பாடம் நான் பரிந்துரைக்கும் முறை: 1. NHM writer பதிவிறக்கி, தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்துங்கள். NHM writer பயன்படுத்த NHM Writer Manual உதவும். வேறு எந்த விசைப்பலகை வடிவத்தையும் நான் பரிந்துரைப்பதில்லை. பார்க்க – சிறந்த தமிழ் விசைப்பலகை எது? கீழே இருக்கிறது தான் தமிழ்…

  • ஜட்டி காயப் போடுவது எப்படி?

    ராத்திரி துவைச்சு வீட்டுக்குள்ளயே காயப் போட்ட எல்லா ஜட்டியும் காயல. drierக்கு உள்ள payment cardலயும் பணம் இல்ல. துவைச்சு காஞ்ச ஜட்டியும் ஒன்னும் இல்ல. ஜட்டி போடாம பள்ளிக்கூடம் போய் பல வருசம் ஆச்சு. ஆக, அன்னிக்கு காலைல தான் இந்த கேள்வி உதிச்சுச்சு. உடனடியாக ஜட்டி காயப் போடுவது எப்படி? ம்..பால் காய வைச்சுக்கிட்டே யோசிச்சப்ப தான் அந்த idea வந்துச்சு..பால் எல்லாம் காய வைக்கிற micro wave oven க்கு ஜட்டி காய…