கணினியில் தமிழில் எழுதுவது எப்படி?

பார்க்க வேண்டிய பக்கங்கள்:

1. கணினியில் தமிழ் எழுத்துக்கள் தெரிய வைப்பது எப்படி?
2. தமிழில் எழுத மென்பொருள்கள்
3. கணிச்சுவடி
4. தமிழ்த் தட்டச்சுப் பயிற்சிப் பாடம்

நான் பரிந்துரைக்கும் முறை:

1. NHM writer பதிவிறக்கி, தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்துங்கள். NHM writer பயன்படுத்த NHM Writer Manual உதவும். வேறு எந்த விசைப்பலகை வடிவத்தையும் நான் பரிந்துரைப்பதில்லை. பார்க்க – சிறந்த தமிழ் விசைப்பலகை எது?

கீழே இருக்கிறது தான் தமிழ் 99 விசைப்பலகை அமைப்பு. படத்தை பெரிய அளவில் பார்க்க அதன் மேல் சொடுக்குங்கள்.

தமிழ்99 விசைப்பலகை

அம்மான்னு அடிக்க அ ம ம ஆ – னு வரிசையா இடைவெளி இல்லாம அழுத்தணும். சில எடுத்துக்காட்டுக்கள்:

அப்பா – அ ப ப ஆ
தம்பி – த ம ப இ
உனக்கு – உ ன க க உ
கட்டம் – க ட ட ம f
கோடு – க ஓ ட உ
தங்கம் – த ங க ம f
தத்தம் – த அ த த ம f

மேலே உள்ளத இரண்டு மணி நேரம் பயிற்சி செஞ்சாலே எந்த எழுத்து எங்க இருக்குன்னு மனசில பதிஞ்சிடும். பழகிட்டா, ஆங்கிலத்த விட வேகமா எழுத முடியும்.

தயவு செஞ்சு அம்மா என்று எழுத ammaa என்ற மாதிரி உள்ள தமிழ்த் தட்டச்சுக் கருவிகளைப் பயன்படுத்தாதீங்க. துவக்கத்துல, தமிழ் எழுதிப் பார்க்க அது உதவும். ஆனா, வேகமா, சோர்வு இல்லாம எழுத மேல் உள்ள தமிழ்99 முறை தான் உதவும். இது பலரும் பரிந்துரைக்கும் உண்மை.

லினக்சில் எப்படி தமிழ் எழுதறதுன்னு தெரியனும்னா கேளுங்க. தனியா விளக்குறேன். NHM Writer நிறுவ admin access கணினியில் இல்லாதவர்கள், firefoxல் தமிழ் விசை நீட்சியை சேர்த்துக் கொள்ளலாம்.


Comments

19 responses to “கணினியில் தமிழில் எழுதுவது எப்படி?”

  1. வடுவூர் குமார் Avatar
    வடுவூர் குமார்

    தமிழில் எழுத – உபுண்டு இன்னும் பிரச்சனை கொடுக்கிறது.
    மொழிக்கான தேவைகள் மற்றும் SCIM எனப்படும் நிரலை சரி செய்தாலும் “பாமினி” தான் வருவேன் என்று அடம்பிடிக்கிறது.
    இதுவே fedoraவில் அழகாக வேலை செய்கிறது.
    வழி இருக்கா? திரை பிடித்தல் முறையில் விளக்கினால் புதியவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  2. வடுவூர் குமார் – உபுண்டுவுல நல்லா தமிழ் வரும்ங்க..மயூரன் இதுக்குன்னே தபுண்டுன்னு ஒரு பொதியே வெளியிட்டிருக்கார்.

    பார்க்க – http://www.viduthalai.org/home/doku.php?id=tabuntu

    வேறு உதவிகள் தேவையெனில் சொல்லுங்கள்.

    இடுகை தோறும் நீங்கள் மறுமொழி தந்திருப்பது மகிழ்ச்சி

  3. தல,
    உங்களை நம்பி வேர்ட்ப்ரெஸ்ல ஒரு ப்ளாக் (http://kuumuttai.wordpress.com) ஆரம்பிச்சுட்டேன். ஆனா பயர்பாக்ஸ்ல டபுள் டபுளாத் தெரியுது. உங்க ப்ளாக் மட்டும் சரியா தெரியுதே எப்படி ? கொஞ்சம் விளக்குங்கோ. வேர்ட்ப்ரெஸ்க்கும் பயர்பாக்ஸ்க்கும் ஒத்துக்காதுன்னா கடைய மூடவேண்டியது தான்.

    நன்றி.

  4. ஒரு சில themeல letter spacing 0px மேல இருந்தா இந்தப் பிரச்சினை வருது. இதைத் தீர்க்க பின்வருமாறு செய்யுங்க.

    site admin-> presentation ->themes போய் ஒவ்வொரு themeஆ மாத்திப் பாருங்க.

    நான் பார்த்ததுல , பதிவுத் தலைப்பு, இடுகைத் தலைப்பு, உள்ளடக்கம் எல்லாத்திலயும் தமிழை நல்லா காட்டுற themes

    1. almost spring

    2. vermillion christmas

    3. contempt 1.0

    4.rubric 1.0

    5. toni 1.0

    6. thirteen 1.0

    7. light 1.0

    8. benevolenc 1.0

    9. green marinee

    10. tarski 1.1.3

    11. pressrow 0.1

    12. sandbox 0.6.1

    13. silver is the new black

    இதில ஏதாச்சும் ஒன்னை தெரிவு செஞ்சு உங்க themeஆ வைச்சுக்கங்க. இன்னும் சில theme நல்லா இருக்கலாம். ஒவ்வொண்ணா அழுத்திப் பார்த்து கண்டுபிடிசுக்கங்க 🙂

    இதப் பத்தி விரிவா இங்க விரிவா எழுதி இருக்கேன்.

  5. தலைவா, நன்றி.

  6. மரியா Avatar
    மரியா

    நன்றி மிக்க நன்றி

  7. very happy to visit your website, I think, your site would be help very much to learn few about IT in my future…

    Regards

  8. […] Related post: கணினியில் தமிழில் எழுதுவது எப்படி? […]

  9. anpu ullam konda thiru Ravi awarkalukku
    tahngalin intah sevaikku ulaka Tamil makkal anaiwaru payan ataivarkal
    micka nanry sakotara
    Tamil vallka Tamil valarka

  10. VIJAYASARAVANANA Avatar
    VIJAYASARAVANANA

    thanks na……
    thamilla speeda ezhuthura mathiri software eethum unda na…..

  11. parthipan sethuraman Avatar
    parthipan sethuraman

    hai ravi
    how we use nhm writer for type amma in english to tamil amma plz help me

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      http://kmdfaizal.blogspot.com/2008/10/nhmwriter.html பக்கத்தில் சுட்டியபடி tamil phonetic keyboard தேர்ந்தெடுத்து எழுதலாம்.

  12. Sivabalan Avatar
    Sivabalan

    please send me some name of these tamil letters.

    sana, cna, theyanna, thowanna

    siva

  13. manimuthu.s Avatar
    manimuthu.s

    useful

  14. தொழில்நுட்ப வார்தைகள்(இயந்திரவியல் அல்லது குடிமுறைப் பொறியியல் அல்லது வதிப் பொறியியல்) – தமிழ் அகராதி உள்ளதா? எங்கு கடைக்கும்?

    is there a technical words(for mechanical or civil or chemical engineering) dictionary in தமிழ்? where can i buy it?

  15. i like this web.. its really usefull to every indians.. nandri..

  16. vanakkam enakku tamil typing easy yana vazhi edu.key borad illamal mouse il type panna vandum ok sir pls tell me how to use ok

  17. mohan raj Avatar
    mohan raj

    thank you very much for your advice.i wish to you for continueous service

  18. […] Related post: கணினியில் தமிழில் எழுதுவது எப்படி? […]