Category: நாட்குறிப்பு

  • abcd, அஆஇஈ, 123, டேய் போலீஸ்காரா, நாய்க்குட்டி, பூனைக்குட்டி, ஆட்டுக்குட்டி !

    அஞ்சலிக்குப் போட்டியாய் ஒரு குட்டிப் பதிவரை இறக்கலாம்னு என் அக்கா பையனை ”தாஜா” 😉 பண்ணேன். பெரிய மனசு பண்ணி, ஒலிப்பதிவாவே போட்டுக் கொடுத்துட்டான் 🙂 குழலினிது யாழினிது என்பர் தன் அக்கா மகன் மழலைச்சொல் கேளா தவர் !

  • அம்மாபட்டித் தமிழ்

    அம்மாபட்டி – நான் 10 வயது முதல் 17 வயது வரை வளர்ந்த ஒரு மிகச் சிறிய ஊர். இப்பொழுதும் நாங்கள் குடி இருக்கும் ஊர். ஒரு 50 குடும்பங்கள் இந்த ஊரில் குடி இருக்கும என்று நினைக்கிறேன். இது போல் மாவட்டத்துக்குப் பல அம்மாபட்டிகள் உண்டு. திருச்சி, புதுகை, சிவகங்கை என மூன்று மாவடங்களின் எல்லையில் இவ்வூர் அமைந்திருக்கிறது. மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ் என்று இருப்பது போல் நான் வளர்ந்த புதுகை, திருச்சி மாவட்டங்களில்…

  • நாடி ஜோசியம் !

    இந்த முறை ஊருக்குப் போனப்ப, மருதமலை அடில உள்ள ஒரு நாடிஜோசிய மையத்துக்கு அக்கா என்னை அழைச்சுக்கிட்டுப் போனாங்க. தம்பி ஆராய்ச்சி பண்ணாம இணையத்துலயே கிடக்குறானே, தேறுவானானு அவங்க கவலை..என்னடா வெளிநாட்டுல ஏதாச்சும் girl friend கிடைக்குமான்னு என் கவலை 😉 ஆக, திருமணக்காண்டம், வேலை காண்டம் இரண்டும் பார்க்குறதுன்னு முடிவு. ஏற்கனவே, அக்காவப் பத்தின விவரங்கள் எல்லாம் அந்த மையத்துல தெளிவா சொல்லி இருந்ததால, நம்மள பத்தி எப்படி சொல்லுறாருன்னு ஒரு பரபரப்பு. போன உடன…

  • எத்தனை பேர்?

    இன்று நம்மை நினைத்துக் கொள்பவர்கள் எத்தனை பேர்? நம் வெற்றிக்கு வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி விருந்து கேட்காமல், அதைத் தன் வெற்றியாக கருதி அடுத்தவர்களிடம் சொல்லி மகிழ்பவர்கள் எத்தனை பேர்? நம் இழப்புக்கு வருந்துபவர்கள் எத்தனை பேர்? எப்படி இருக்கிறாய் என்று கேட்பதற்காக மெனக்கெட்டு அழைப்பவர்கள் எத்தனை பேர்? அடுத்து நம்மை எப்போது பார்ப்போம் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்? நாம் கேட்காமலேயே தேவையறிந்து உதவுபவர்கள் எத்தனை பேர்? கடனாகக் கொடுக்காமல், கொடுக்கும் பணம் நமக்கு உதவுமே…

  • வெயில் !

    தமிழ்நாட்டில் இருந்த வரைக்கும் வெயில் பத்தி அலுப்பு தான் இருக்கும். ஆனா, ஐரோப்பிய வாழ்க்கைல வெயிலைப் பார்த்து தான் வாழ வேண்டியதா இருக்கு..இங்க வந்த புதுசில ”The weather is great, right?” னு யாராச்சும் சொன்னா ”சரி, அதுக்கென்ன இப்ப”-னு சலிப்பா இருக்கும். ஆனா, ஒரு முழு ஐரோப்பிய குளிர் காலத்துல மண்டை காஞ்சப்புறம் வெயிலோட அருமை இப்ப புரிய ஆரம்பிச்சிருச்சு. இத்தனைக்கும் நெதர்லாந்து வரலாற்றிலயே இந்த குளிர் காலம் தான் வெப்பம் கூடின ஆண்டாம்.…

  • ஒரு நதி போல…

    அன்புன்னா என்ன? இந்தக் கேள்வி தோன்றின முதல் முறையே அன்பைத் தவற விட்டு ரொம்ப நேரமாயிடுச்சோன்னு தோணுது.. இந்தக் கேள்வி எனக்கு எப்ப முதன் முதல தோணுச்சுன்னு சரியா நினைவில்லை. ஆனா, அடிக்கடி வந்து போகும் கேள்வி இது. இதுக்கான பதில் புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. புரிஞ்சும் ஏத்துக்க முடியாத மாதிரியும் இருக்கு. புரியாட்டியும் தேடல் மட்டும் ஓயாம இருக்கு. ஒரு நாள். பெரியம்மா வீட்டுக்குப் போயிருந்தேன். யாரோ யாருக்கோ “நாங்க அத…

  • தமிழ்நாட்டில் குழந்தைகளின் பெயர்கள்

    நல்ல, தூய தமிழ்க் குழந்தைப் பெயர்கள் தரும் இணையத்தளங்கள்: 1. http://peyar.in குறிப்பு: தூய தமிழ்ப் பெயர்களைத் தரும் இணையத்தளங்களை அறியத்தருவதும், தமிழ்நாட்டில் தமிழ்ப் பெயர்கள் குறைந்து வருவது குறித்த விழிப்புணர்வையும் பரப்புவதே இக்கட்டுரையின் நோக்கம். தயவு செய்து, உங்கள் குழந்தைக்குப் பெயரிடுவது குறித்த ஆலோசனைகளைக் கேட்க வேண்டாம். நாள், நட்சத்திரம் பார்க்காமல் மனதுக்கினிய பெயரை வைப்பதே சிறந்தது என்பதே என் நிலைப்பாடு. நன்றி. ** தமிழர் பெயர்களில் பிற மொழித் தாக்கம்: முந்தா நேத்து காலையில…

  • ஜட்டி காயப் போடுவது எப்படி?

    ராத்திரி துவைச்சு வீட்டுக்குள்ளயே காயப் போட்ட எல்லா ஜட்டியும் காயல. drierக்கு உள்ள payment cardலயும் பணம் இல்ல. துவைச்சு காஞ்ச ஜட்டியும் ஒன்னும் இல்ல. ஜட்டி போடாம பள்ளிக்கூடம் போய் பல வருசம் ஆச்சு. ஆக, அன்னிக்கு காலைல தான் இந்த கேள்வி உதிச்சுச்சு. உடனடியாக ஜட்டி காயப் போடுவது எப்படி? ம்..பால் காய வைச்சுக்கிட்டே யோசிச்சப்ப தான் அந்த idea வந்துச்சு..பால் எல்லாம் காய வைக்கிற micro wave oven க்கு ஜட்டி காய…

  • திரும்பத் திரும்ப பார்க்கும் திரைப்படங்கள்

    சின்னப் வயசுல விரும்பினாலும் விரும்பாட்டியும் விதி, சம்சாரம் அது மின்சாரம் பட கதைவசன ஒலிநாடாக்கள் வீட்டிலோ பக்கத்து வீட்டிலோ ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும்.. நிறைய படங்கள் நல்லா இருந்தாலும் சில படங்கள் தான் அலுக்காம திரும்பத் திரும்ப அலுக்காம பார்க்க முடியுது.. வளந்த வயசுல ரஜினி படங்கள் அப்படி அலுக்காமல் பார்த்தது.. சன் தொலைக்காட்சி புண்ணியத்தில் பாட்ஷா படத்த நிறைய தடவை பார்த்திருக்கேன். கில்லி, பிதாமகன், காக்க காக்க இதெல்லாம் திரையரங்கிலயே மூணு முறைக்கு மேல பார்த்தது.…

  • செருமன் நாட்கள்

      சிங்கப்பூரில் பாதிப்படிப்பை முடித்து மீதிப்படிப்புக்காக வந்துள்ள இடம் செருமன் மாநகரமான முன்சன் (ஆங்கிலத்தில் Munich – மியூனிக்). முதல் ரெண்டு வாரம் அரிசிச்சோறே சாப்பிடவில்லை. இத்தனை நாட்களுக்கு அரிசி சோறு சாப்பிடாமல் வாழ முடியுமா? அரிசி விற்கும் கடையைக் காட்டுவதாக பக்கத்து அறையிலுள்ள சீன நண்பர் சொல்லியிருக்கிறார். ஒரு வாரமாக முட்டையை வேக வைத்தே தின்ற பின் தான் அதை வைத்து ஆம்லெட் கூட போட முடியும் என நினைவு வந்தது. நான் ஆம்லெட் செய்வதைப்…