செல்பேசியில் உள்ள ஆங்கில விசைப்பலகையைக் கொண்டு தமிழ் குறுஞ்செய்தித் தகவலை எழுதுவது நேரத்தை வீணாக்கும், அயர்வூட்டும் வேலையாகும்.
எடுத்துக்காட்டுக்கு, உண்ணி என்று எழுத ஆங்கில எழுத்துக்களான uNNi – யை அழுத்த எத்தனை விசை அழுத்தங்கள் வருகிறது என்று பார்ப்போம்.
u – 2 விசையழுத்தங்கள் (8ஆம் எண் விசையில் tக்கு அடுத்து u அழுத்த வேண்டும்).
N – குறைந்தது 2 விசையழுத்தங்கள் (6ஆம் எண் விசையில் mக்கு அடுத்து n அழுத்த வேண்டும். ந, ன, ண என்று மூன்றுக்கும் n என்ற விசையை மட்டும் வைத்தோமானால் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு விசையழுத்தங்களும் தேவைப்படும்).
N – குறைந்தது 2 விசையழுத்தங்கள்.
i – 3 விசையழுத்தங்கள் (4ஆம் எண் விசைப்பலகையில் g, hக்கு அடுத்து i வருகிறது).
ஆக, உண்ணி என்ற மூன்றெழுத்துத் தமிழ்ச் சொல்லை எழுத குறைந்தது 9 விசைகளை அழுத்த வேண்டும் !!
ஆங்கில ஒலிப்பியலைக் கொண்டு தமிழை உள்ளிட முனைவதாலேயே இந்தப் பிரச்சினை வருகிறது. தவிர, ஆங்கிலத்தில் நம் விசையழுத்த வரிசைகளைக் கொண்டு பொருத்தமான சொற்களைப் பரிந்துரைக்கும் அகராதிகள் இருப்பது போல் தமிழுக்குத் தற்போது இல்லை.
தமிழுக்கே இவ்வளவு சிக்கல் என்றால் ஆயிரக்கணக்கான எழுத்துக்கள் உடைய சீனம் போன்ற மொழிகளில் இதை எவ்வாறு கையாளுகிறார்கள்?
இதையொட்டி வலையில் தேடுகையில், சீன செல்பேசி விசைப்பலகை வடிவமைப்புகான ஆய்வறிக்கை ஒன்று கண்ணில் பட்டது. இவ்வறிக்கையில் முக்கியமாக, 10 முதல்15 வரையான பக்கங்களைப் படித்துப் பாருங்கள்.
தமிழுக்கான செல்பேசி விசைப்பலகை ஒன்றை மனக்கணக்காகவே உருவாக்கலாம் என்று முன்னர் நினைத்திருந்தேன். ஆனால், இந்த ஆய்வறிக்கையைப் பார்த்த பின் கொஞ்சம் நிரல் எழுதி மெனக்கெட்டால், சிறந்தது என அறிவியல்பூர்வமாகவே நிறுவத்தக்க தமிழ் செல்பேசி விசைப்பலகையை உருவாக்கி விடலாம் என்று தோன்றுகிறது.
முயன்று பார்க்கிறேன் !!
Comments
3 responses to “தமிழ் செல்பேசி விசைப்பலகை வடிவமைப்புக்கான தேவை”
நிறைய விசயங்கள் எழுதியிருக்கிறீர்கள். படிக்க சில நாட்களாகும்னு நினைக்கிறேன்.
மற்றபடி குறைவாக வலைபதியற்துங்கிற முடிவை கைவிட்டுட்டீங்க போலயிருக்கு. Just Kidding!
முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
[…] வருடங்களிற்கு முன்னமே தமிழிற்கு ஒரு செல்பேசி தளக்கோலம் தேவை என்று ரவி கூறியிருந்தார். அண்மையில் […]