Category: தமிழ்
-
தாய்மொழியை மறப்பது எப்படி?
– தாய்மொழியை மறக்கடித்து தேசிய மொழியைப் படிப்பது எப்படி ? தமிழார்வம், மொழியார்வம் உள்ளோர் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.
-
RSS Feed, Channel, Reader, inbox – தமிழில் என்ன?
—
in தமிழ்அண்மையில் தமிழ் விக்சனரி குழுமத்தில் RSS Feedக்குத் தமிழில் என்ன என்று சங்கர் கணேஷ் கேட்டிருந்தார். Feedக்குத் தமிழில் ஓடை என்ற சொல்லை வெகு நாட்களாகப் பயன்படுத்தி வருகிறோம். News feed = செய்தியோடை; web feed = இணைய / வலையோடை; blog feed = பதிவோடை. இது இடுகுறிப்பெயரோ என்று மயூரன் சொன்னார். ஆனால், எனக்கு இடுகுறிப் பெயராகத் தோன்றவில்லை. Feedஐ நேரடியாக மொழிபெயர்க்காமல் தமிழ் மரபுக்கு ஏற்ப இட்ட பெயராக நினைக்கிறேன். தவிர,…
-
கணினியில் தமிழில் எழுதுவது எப்படி?
பார்க்க வேண்டிய பக்கங்கள்: 1. கணினியில் தமிழ் எழுத்துக்கள் தெரிய வைப்பது எப்படி? 2. தமிழில் எழுத மென்பொருள்கள் 3. கணிச்சுவடி 4. தமிழ்த் தட்டச்சுப் பயிற்சிப் பாடம் நான் பரிந்துரைக்கும் முறை: 1. NHM writer பதிவிறக்கி, தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்துங்கள். NHM writer பயன்படுத்த NHM Writer Manual உதவும். வேறு எந்த விசைப்பலகை வடிவத்தையும் நான் பரிந்துரைப்பதில்லை. பார்க்க – சிறந்த தமிழ் விசைப்பலகை எது? கீழே இருக்கிறது தான் தமிழ்…
-
வலைப்பூவா வலைப்பதிவா ?
—
வலைப்பூ, வலைப்பதிவு – இரண்டுமே blog என்பதற்கு ஈடான சொற்களாகப் புழங்குகின்றன. எது நல்ல சொல்? இந்த இரண்டு சொற்களின் இளகுத் தன்மையையும் பார்ப்போம். வலைப்பதிவு weblog – வலைப்பதிவு blogger – வலைப்பதிவர் blogging – வலைப்பதிதல் blog (வினை) – வலைப்பதி. blogger circle – பதிவர் வட்டம். blog world / blogdom – பதிவுலகம் videoblog – நிகழ்படப்பதிவு / ஒளிதப் பதிவு audioblog – ஒலிதப்பதிவு. வலைப்பூ weblog –…
-
தமிழ்99
—
in தமிழ்தமிழ்99 விசைப்பலகை தான் உலகிலேயே சிறந்த தமிழ் விசைப்பலகை. மேலே இருப்பது தான் அந்த விசைப்பலகை ! இதில் என்ன சிறப்பா? 1. விசையழுத்தங்கள் மிகவும் குறைவு. இது தான் முதன்மையான பயன். அடுத்து வரும் சிறப்புகளுக்கும் இது தான் காரணம். கிரந்த எழுத்துக்கள், புழக்கத்தில் இல்லாத சிறப்பு எழுத்துக்கள் தவிர எல்லா தமிழ் எழுத்துக்களையும் SHIFT, CTRL விசை இல்லாம அழுத்த முடியும். உயிர் எழுத்து, அகர உயிர்மெய்கள் இரண்டையும் ஒரே விசையில் அழுத்த முடியும்.…
-
தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுமம்
—
in தமிழ்ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் அறிய, உருவாக்க ஒரு கலைச்சொல்லாக்கக் குழுமம் உருவாக்கி இருக்கிறோம். குழும முகவரி: http://groups.google.com/group/tamil_wiktionary இக்குழுமத்தின் நோக்கம்: ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கலைச்சொற்களை அறிவது, தேவைப்பட்டால் மேம்படுத்துவது, புதிய கலைச்சொற்களை உருவாக்குவது. இக்குழுமம் கட்டற்ற தமிழ் அகரமுதலியான விக்சனரிக்குத் துணையாகவும் இயங்குகிறது. இக்குழுமத்தில் அலசி ஆராயப்பட்டு ஓரளவு கருத்தொத்ததாக வரும் சொற்கள் தமிழ் விக்சனரியில் பரிந்துரைகளாகச் சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம் இவை பொதுப் பயன்பாட்டு வர ஏதுவாகிறது. இந்தக் குழுமம் மூலம் சொற்களை ஆக்குபவர்கள்…
-
விக்சனரி (பன்மொழி – தமிழ் இணைய அகரமுதலி)
—
in தமிழ்கட்டற்ற பன்மொழி – தமிழ் – பன்மொழி அகரமுதலி ஒன்றை உருவாக்கும் முயற்சியாக 2004 முதல் தமிழ் விக்சனரி தளம் செயல்படுகிறது. டிசம்பர் 2008 நிலவரப்படி ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான சொற்களுக்கு பொருள் சேர்த்துள்ளோம். ஒரு சொல் பெயர்ச்சொல்லா வினைச்சொல்லா என்பது முதலிய குறிப்புகள், ஒரு சொல்லை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு எடுத்துக்காட்டுச் சொற்றொடர்கள், பலுக்கல் ஒலிக்கோப்புகள், பொருத்தமான படங்கள், அச்சொல்லுக்கான பிற மொழி விக்சனரி இணைப்புகள் ஆகியவை தரப்படுகின்றன. நீங்கள் அறிய விரும்பும் சொல்லை Googleல் இருந்தே…