Category: தமிழ்
-
பிற மொழியாளர் கண்டுபிடிப்புகளுக்குத் தமிழ்ப் பெயர் தரலாமா?
—
in தமிழ்“பிற மொழியாளர் கண்டுபிடிப்புகளுக்கு அவர்கள் இட்ட பெயரே தர வேண்டும். அதுவே அவர்களுக்குத் தரும் மதிப்பு. தமிழில் பெயர் தருவது அவர்கள் அறிவைத் திருடுவது போல. கண்டுபிடிக்க வக்கில்லாத நாம் ஏன் பெயரை மட்டும் தமிழில் வைக்க வேண்டும்” என்பது போன்ற சிந்தனைகளைச் சில இடங்களில் கண்டேன். இச்சிந்தனை தவறு. * கண்டுபிடிப்பின் பெயரில் கண்டுபிடித்தவர் பெயர், வணிக உரிமை பெற்ற பெயர் இருந்தால் மட்டுமே தமிழாக்கக்கூடாது. எடுத்துக்காட்டுக்கு, Diesel எல்லா மொழிகளிலும் Diesel தான். ஏனெனில்,…
-
ஆன்
—
in தமிழ்counter, filter, reader போன்று -er இல் முடியும் ஆங்கிலச் சொற்களையும் இன்ன பல சொற்களையும் எண்ணுவான், வடிகட்டுவான், படிப்பான் என்று -ஆன் விகுதி போட்டு தமிழாக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இதைத் தவிர்க்கலாம். இத்தகையை சொற்களுக்கு -இ விகுதி உதவலாம். சுருக்கமாகவும் மேற்கண்ட குறைகள் இல்லாமலும் இருக்கும். எ.கா: Counter – எண்ணி, Washer – துவைப்பி, கழுவி.
-
கிரந்தம்
—
in தமிழ்பல நாடுகள், சமயங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றியது. பல நாட்டினரும் பல சமயத்தினரும் தமிழ் பேசுகின்றனர். ஒரே பிறப்பில் நாட்டையும் சமயத்தையும் ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், தாய்மொழியை மாற்றிக் கொள்ள இயலாது. எனவே, நாடுகள், சமயங்களைக் காட்டிலும் மொழி பெரிது என்று கருதாவிட்டாலும், அவற்றுக்குத் தருவதற்கு ஈடான மதிப்பை மொழிக்கும் தர வேண்டும்.
-
தலை எழுத்து
—
in தமிழ்ஒவ்வொருவர் அறியாமை, அரசியல், கொள்கைக்கு ஏற்பவும் மொழியைப் பயன்படுத்துகிறார்கள். அதிகாரப்பூர்வம் என்று ஒன்று தெளிவாக வரையறுக்கப்படுவதில்லை. அத்தகைய அதிகாரம் ஒன்று இருந்தாலும் நம்முடைய கொள்கைகளைப் புறந்தள்ளி அதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.
-
கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுவது எப்படி?
—
in தமிழ்கிரந்தம் தவிர்த்துத் தமிழில் எழுதுவது தற்போதும் பெரு ஊடகங்களிலும் வழக்கில் உள்ளதே. சில சொற்களைக் கிரந்தம் தவிர்த்தும் சிலவற்றில் கிரந்தம் தவிர்க்காமலும் எழுதுவதற்கு போதிய தமிழாக்க முயற்சிகளும் பழக்கமும் இல்லாததே காரணம். எனவே, கிரந்தம் தவிர்த்து எழுதுவதை ஏதோ புதிய நடைமுறையாகக் கருதத் தேவை இல்லை.
-
தனித்தமிழ் விசைப்பலகைகள்
—
in தமிழ்ஒருங்குறியில் அமைந்த பாமினி, அஞ்சல், தமிழ்99 விசைப்பலகைகளுக்கு NHM Writer ல் பயன்படுத்தக்கூடிய தனித்தமிழ் xml கோப்புகள் செய்து பார்த்தேன்.
-
இந்தி மொழிக் கல்வி
இந்தி ஒரு தேசிய மொழி இல்லை. இந்தியாவுக்குத் தேசிய மொழி என்று ஏதும் இல்லை. ஒருவர் இந்தி கற்று தான் இந்தியன் என்று நிரூபிக்க வேண்டுமா? ஒழுங்காக வரிகள் கட்டி, சட்டத்தை மதித்து நடந்தால் போதாதா? தமிழ்நாட்டில் இருந்து இந்தி தெரியாத இளைஞர்கள் இந்தியப் படைகளில் சேர்ந்து நாட்டுக்குப் பங்களிப்பதில்லையா?
-
கூகுள் X கூகுல்
—
in தமிழ்ஆங்கில L ஐத் தமிழில் எழுதும் போது ல.ள எழுத்துகளில் எதை எங்கு பயன்படுத்துவது என்பதற்கு சு.சீனிவாசன் வழிகாட்டுகிறார். a, e, i, o, u அடுத்து வரும் L க்கு லகரமும் பிற இடங்களில் ளகரமும் பயன்படுத்த வேண்டும். அப்படி என்றால். கூகுள் சரி. கூகுல் தவறு 🙂 பி.கு – சீனிவாசனின் சில பரிந்துரைகளுடன் வேறுபடுகிறேன். எனவே, லகர, ளகரப் பயன்பாடு குறித்த உசாத்துணைக்கு மட்டுமே அவரது கட்டுரையை மேற்கோளாகக் காட்டுகிறேன் என்பதை நினைவில்…
-
வட்டார வழக்குத் தமிழ்
—
in தமிழ்தலைமுறை மாற்றம், நகர்ப்புறம் நோக்கிய இடப்பெயர்வுகள், கல்வியறிவு, செயற்கைத் தமிழைத் திணிக்கும் ஊடக வளர்ச்சி எல்லாம் சேர்ந்து தன் சிறு வயதில் வளர்ந்த ஊரில் பேசிய தமிழை மதிப்புக் குறைவாக எண்ண வைக்கும் போக்கு பெருகுவது கவலைப்பட வைக்கிறது 🙁 இந்தத் தாழ்வு மனப்பான்மை படிப்படியாக எண்ணற்ற நல்ல தமிழ்ச் சொற்கள் புழங்குவதை குறைத்து வழக்கொழியச் செய்கின்றது.
-
ஸ்ரீ X சிறீ X சிரீ
—
in தமிழ்திரு என்னும் சொல்லை ஸ்ரீ என்னும் சொல்லுக்கான மொழிபெயர்ப்பாக மட்டுமே அனைத்து இடங்களிலும் கருதி விட இயலாது. ஸ்ரீ என்னும் சொல் மற்றும் எழுத்துப் பயன்பாடு தமிழ்ச்சூழலில் புகும் முன்னரே திரு என்னும் பெயரைத் தாங்கிய ஊர்ப்பெயர்கள் தமிழ்நாட்டில் இருந்திருப்பதை அறியலாம்