Category: தமிழ்
-
ஆங்கில எழுத்து முறை இலகுவானதா?
—
in தமிழ்“ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் மட்டுமே உள்ளது. தமிழில் 247 எழுத்துகள் இருப்பதால் குழந்தைகள் கற்றுக் கொள்ளச் சிரமப்படுகிறார்கள்” என்று சிலர் எழுதுகிறார்கள். ஆங்கில எழுத்துமுறை இலகுவானதா? இல்லை. ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகள் 26. இவற்றில் இருந்து மாறுபடும் சிறிய எழுத்து வடிவங்கள் 16. மொத்தம் 42 எழுத்துகள். எந்தெந்த இடங்களில் பெரிய எழுத்துகள் வரும், வராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். chalk என்பதில் ch ச ஒலி தரும். அதுவே, character என்பதில் ch க…
-
தமிழார்வலருக்கு உதவி தேவை
—
in தமிழ்நன்றி: நற்கீரன், மயூரேசன், மீ. கணேசன், மு. கார்த்திக், செ. இரா. செல்வக்குமார், கோபி, சுந்தர், சென்னை தமிழ் வலைப்பதிவர் பட்டறை 2007 ஆகிய 7 பேர் தந்தது + என் சிறு பங்களிப்பு : இந்திய ரூபாய் 28,750. இந்திய ரூபாய் 25,000 செலவில் Intel centrino dual core கணினி ஒன்றும், LG Flat 18 அங்குல கணினித் திரை ஒன்றும் தமிழார்வல நண்பருக்கு அளித்திருக்கிறோம். மீதி பணமும் இணைய இணைப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக…
-
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்
—
in தமிழ்எழுத்துச்சீர்மை பற்றிய பேரா. வா.செ.கு அவர்களின் உரையைக் கண்டேன். தமிழ் உயிர்மெய்யெழுத்துகளில் ஆ, ஐ, எ, ஏ, ஒ, ஓ, ஔ வரிசைகளை எழுத அந்தந்த மெய்யெழுத்துகளையும் அவற்றுக்கு முன்பும் பின்பும் சில குறியீடுகளையும் பயன்படுத்துகிறோம். இது போல், இ, ஈ, உ, ஊ வரிசைகளை எழுதுவதற்காகப் புதிய குறியீடுகளை அறிமுகப்படுத்துகிறார். இந்தச் சீர்திருத்தத்தை முன்வைப்பதற்கு முக்கிய காரணமாக தமிழகத்துக்கு வெளியே 15 இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றும் இச்சீர்திருத்தம் அவர்கள் இலகுவாகத் தமிழ் கற்க உதவும்…
-
தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம்
பார்க்க: Tamil Baby Names Websites நண்பர் கார்த்திக், தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம் ஒன்று உருவாக்கி உள்ளார். விரைவில் இன்னும் ஆயிரக்கணக்கான பெயர்களைச் சேர்ப்போம். உங்களுக்குத் தெரிந்த பெயர்களை இந்தப் படிவத்தில் தரலாம். நேரடியாகவும் Google Spreadsheetல் பெயர்களை உள்ளிடலாம். தற்போதைய தளம் ஒரு முன்னோட்டப் பதிப்பு மட்டுமே. அறியப்பட்ட வழு: * தற்போது தரவுத்தளத்தில் உள்ள தமிழல்லா பெயர்களை நீக்க வேண்டும்.
-
கையொப்பம்
—
in தமிழ்பத்தாம் வகுப்பு வரை படித்த உறவினர் ஒருவர். ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்டு வந்திருந்தார். “தமிழ்ல தான் கையெழுத்து போட்டேன். படிக்காத முட்டாள்னு நினைச்சிருப்பாங்க” என்றார். “படித்த அறிவாளிகளும்” தமிழில் கையொப்பம் இடத்தொடங்கினால் மற்றவர்களின் தாழ்வு மனப்பான்மை நீங்கும். என்ன செய்யலாம்? * (ஏற்கனவே உள்ள ஆங்கிலக் கையொப்பத்தை மாற்ற இயலாதோர்) பணம் /அதிகாரம் தொடர்பற்ற இடங்களிலாவது தமிழிலேயே கையொப்பமிடலாம். * நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில், நம்மைச் சுற்றியுள்ள சிறுவர்களை, தமிழில் கையொப்பமிட ஊக்குவிக்கலாம். “தமிழனே தமிழ்ல கையெழுத்து…
-
Mummy
—
in தமிழ்பக்கத்து வீட்டு அக்கா பையன் Mummyனு கூப்பிடுறத பார்த்து எரிச்சலா இருந்திச்சு. “அக்கா, தமிழ் அது இதும்பீங்க. பேர் எல்லாம் கூட இனியன்னு தமிழ்ல வைச்சீங்க. இப்ப ஏன் Mummyன்னு கூப்பிடப் பழக்கினீங்க?” “இல்லப்பா, சுதீசு சொல்றதைப் பார்த்து இவனும் பழகிட்டான்.” சுதீசு முதல் பையன். தத்துப் பிள்ளை. அக்காவின் நாத்தனாரும் அவர் கணவரும் தற்கொலை செஞ்சுக்கிட்டதால, இவங்க எடுத்து வளர்க்கிறாங்க. “சரி, சுதீசும் அம்மான்னு கூப்பிடுறது?” “அம்மான்னு சொன்னா அவங்க அம்மா நினைவு வந்து அழ…
-
தமிழில் சடங்குகள்
—
in தமிழ்திருமணம், புதுமனை புகுவிழா போன்ற வீட்டுச் சடங்குகள், கோயில் விழாக்களை முழுக்கத் தமிழ்ப்பண்கள் மட்டும் பாடி நடத்தித் தருவோர் குறித்த தரவுத் தளம் ஒன்றை உருவாக்க விரும்புகிறோம். உங்களுக்குத் தெரிந்தவர்கள் பற்றி மறுமொழிகளில் குறிப்பிட்டு உதவுங்கள். கீழ்க்காணும் இருவரை நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். சென்னை ந. ஒளியரசு. 16/25, குளக்கரைத் தெரு. சைதாப் பேட்டை செல்பேசி: +9198403 23811 — சிவத்திரு. சத்யவேல் முருகனார் செல்பேசி: +919444042770 தொலைப்பேசி: +914422442915 — திவாகரன், ஒளிதரு கயிலை, வளசரவாக்கம், செல்பேசி: 9840856050 —…
-
தமிழர் பெயர்கள்
—
in தமிழ்05.12.2008 தினமலர் கோவை பதிப்பில் பிறந்த நாள் வாழ்த்து பெற்ற குழந்தைகள் பெயர்கள்: ஹிர்த்திக் ராஜ், பிரசன்னவர்மா, ராகுல், சம்யுக்தா, கிருத்திகாவர்ஷா, நவீன்கோபி, தாரிகா, ஹரிகிருஷ்ணன், யோகேஷ்குமார், கார்த்திகா, விஜயபாரதி, தருண், நவீன், ஹிரன்விகாஷ், சர்வேஸ்,ஸ்ரீஇமி, கார்த்திகா, நித்திலன், ரித்விக், மதன், கவுதம், வினுதர்ஷினி, முகிலா, பரத்ராம், சுமையா, பிரநீஷ், பிரகாஷ், ரஞ்சித், அமிர்வர்சினி, ரணீட்டா, உமயாள்தர்சினி, அகிலேஷ், சுவேதா, வசுந்தரா, சுபஸ்ரீ, கீர்த்தனா, ரித்திக், யோகேஸ்வரி, விகாஸ், கவின், முஹமதுஷைத், தனகவுரி, கார்த்திகாதேவி, பிரணதி, தனுஷா,…
-
ஆனந்த விகடனும் தமிங்கிலமும்
—
in தமிழ்செப்டம்பர் 17, 2008 இதழில் ஆனந்த விகடன் எழுதிய சரோசா திரைப்பட விமர்சனத்தை NHM Lister கொண்டு ஆய்ந்ததில், தனித்துவமான மொத்த சொற்கள்: 346 தனித்துவமான மொத்த ஆங்கிலச் சொற்கள்: 69 ஆங்கிலக் கலப்பு விழுக்காடு: 19.94% (ஐந்தில் ஒரு சொல்!) கலந்துள்ள சொற்கள்: Underplay, out, acting, action, english, innings, editing, episode, over, factory, group, climx, commitment, colorful, comedy, comedian, good night, cool, chemical, successful, car, cinema,…
-
F
—
in தமிழ்தமிழர்கள் Form, Friend, Fan, Firefox, Frame, Fried rice, Figure, Photo, Phenol போன்ற எண்ணற்ற ஆங்கிலச் சொற்களை அன்றாட வாழ்வில் புழங்குகிறோம். ஆனால், மற்ற இந்திய, இலத்தீன-கிரேக்க-ஐரோப்பிய மொழிகளைப் போல் F ஒலியைத் தமிழில் எழுதிக் காட்ட இயலாதது பெரும் குறை. தொல்காப்பியம், நன்னூல் எழுதியோர் வெளிநாடு சென்ற கடவுச்சீட்டு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே, அக்காலத்தில் F அறிமுகம் ஆகாமல் இருந்திருக்கலாம். எனினும், காலம் காலமாக அடுப்பு, சுருட்டு பற்ற வைத்து நெருப்பை அணைக்கும்…