Category: தமிழ்
-
தமிழில் பெயர்ப் பலகைகள்
பொருளகம், தங்கும் விடுதி, பெரு அங்காடி, காலணியகம், இனிப்பகம், உணவகம், மின்னணுப் பொருளம், எழுது பொருளகம், கணினி பயிற்சி மையம்.. இப்படிச் சென்னையின் சில கடைகளில் புதிய தமிழ்ப் பெயர்ப் பலகைகள் தென்படுகின்றன. என்னடா, இது தமிழ்நாடு தானா இல்லை இலங்கை, சிங்கப்பூரா என்று குழப்பமாகப் போய் விட்டது 🙂 தமிழில் பெயர் எழுத வேண்டும் என்று முன்பே அரசு உத்தரவு இருந்தாலும், இப்போது செம்மொழி மாநாட்டை முன்னிட்டு அந்த உத்தரவைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துகிறார்களாம். நல்ல மாற்றம்.…
-
நவம்பர் 7 – கோவையில் தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு
—
in தமிழ்கோவையில், நவம்பர் 7, 2009 சனிக்கிழமை அன்று தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு நடைபெறுகிறது. குமரகுரு பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த முனைவர். முத்துக்குமார் இந்த ஒன்று கூடலை ஏற்பாடு செய்திருக்கிறார். உத்தமம் அமைப்பின் செயலாளார் திரு. வா. மு. செ. கவியரசன் அவர்கள் தலைமையேற்று உத்தமத்தின் செயல்பாடுகளை விளக்குவார். அடுத்து விக்கிப்பீடியா, தமிழ் இணையம், வலைப்பதிவுகள், தமிழ்மணம் முதலிய திரட்டிகள் பற்றி நண்பர்கள் விளக்குவோம். மற்ற கல்லூரிகளில் இருந்தும் தமிழார்வல மாணவர்கள், ஆசிரியர்கள்…
-
நோக்கியா செல்பேசியில் தமிழில் எழுதுவது எப்படி?
—
in தமிழ்நோக்கியாவின் அடிப்படை செல்பேசி வகைகள் சிலவற்றில் தமிழில் எழுதலாம். தமிழ் விசைப்பலகையை முடுக்க குறுஞ்செய்தி எழுதும் பெட்டித் தெரிவுகளில் writing language – > தமிழ் என்று தெரிவு செய்யுங்கள். பல செல்பேசிகளில் தமிழ் எழுத்துகள் அச்சிடப்படாமல் இருக்கலாம். எனவே, விசை எண் மற்றும் விசையில் உள்ள எழுத்து வரிசைகளைக் கீழே காணலாம். 1 – புள்ளி, ஆய்தம். 2 – அ, ஆ, இ, ஈ, உ, ஊ (உயிரெழுத்துகள் முதல் பகுதி) 3 –…
-
தமிழ்நாட்டில் ஆங்கிலம் தெரியாதவர்கள்
—
in தமிழ்ஆங்கிலம் தெரிந்தாலும் தமிழை விரும்பிப் பேசும், ஆங்கிலம் தெரியாமலேயே வாழ்க்கையில் வெற்றி பெற்ற எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஓரிருவரையாவது நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தால் உரையாடல் நன்றாக இருந்திருக்கும். ஆங்கிலம் தெரிந்து கொள்வது தான் வெற்றிக்கு வழி என்பது போல ஒருவர் தட்டுத்தடுமாறி அழுது கொண்டே ஆங்கிலம் பேசுகிறார். அவரை எல்லாரும் கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். நிகழ்ச்சி முடிந்தது. ம்.
-
தமிழ் செல்பேசி
—
in தமிழ்நோக்கியா 5130 செல்பேசி வாங்கி இருக்கேன். தமிழ் விசைப்பலகை, இடைமுகப்பு, பயனர் வழிகாட்டி, தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருக்கிறது. உங்கள் செல்பேசியிலும் தமிழ் ஆதரவு பெற, அருகில் உள்ள Nokia Care கடைக்குச் சென்று கேளுங்கள். உங்கள் தொலைப்பேசி வகையில் தமிழ் ஆதரவு தர இயலும் என்றால், இலவசமாகவே செய்து தருவார்கள். தமிழ் எழுதும் முறை தமிழ்99 முறையை ஒத்திருப்பது மகிழ்ச்சி. க+ஆ=கா என்று எழுத வேண்டும். செல்பேசியில் இப்படி தமிழ் எழுதிப் பழகும் மக்கள்…
-
ஊடகத் தமிழ்
—
in தமிழ்“தமிழ் வெகுமக்கள் ஊடக நிறுவனங்கள் பெருமளவு தமிங்கிலத்தில் எழுதுகின்றன. தமிழ் இலக்கண முறைகளை மதிப்பதில்லை. ஆனால், இந்நிறுவனங்களின் தொலைக்காட்சிகள், இதழ்கள், திரைப்படங்கள் நன்றாக “விற்று” வெற்றி பெறுகின்றன. எனவே, இது இவ்வூடகங்கள் முன்னிறுத்தும் “தற்காலத் தமிழுக்கு” மக்கள் தரும் ஆதரவு ஆகும். NewYork Times, Washington Post போன்றவற்றின் எழுத்து நடையை யாரும் விமர்சிப்பது இல்லை. மக்கள் ஊடகங்களான வலைப்பதிவுகள் கூட, வெகுமக்கள் ஊடக நடையிலேயே உள்ளன. எனவே, தமிழ் ஊடகங்களின் எழுத்து நடையை விமர்சிப்பது தவறு.…
-
அடுத்த தனித்தமிழ் இயக்கம்
—
in தமிழ்தமிழ் ஆர்வலர் ஒருவருடன் பேசிய போது தனித்தமிழ் இயக்கம் பற்றி பேச்சு வந்தது. திரும்பவும் ஒரு தனித்தமிழ் இயக்கம் வர வாய்ப்புகள் குறைவு என்றார். அதற்கு அவர் சொன்ன காரணங்கள்: * பெருஞ்சித்திரனார், மறைமலை அடிகள், தேவநேயப்பாவாணர் போல் ஒரு இயக்கத்தை முன்னெடுக்கக்கூடிய தமிழ் அறிஞர்கள், தலைவர்கள் இப்போது இல்லை. * சென்ற தனித்தமிழ் இயக்கம் வந்த 20ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் இருந்த உலக கருத்துச் சூழல் இப்போது இல்லை. உலகமே இப்போது பொருள்முதல்வாதமாகவும் வலது சாரி…
-
தமிழ் ஒலிப்புச் சீர்மை
—
in தமிழ்பாகு – paagu பாகி – paagi என்றால் பாகிசுத்தான் ஐ paakkisuththaan என்று ஒலிப்பது தவறல்லவா? பாக்கிசுத்தான் என்று எழுதலாமே? இதா – idhaa னிதா – nidhaa என்றால் அனிதா என்பதை aniththaa என்று ஒலிப்பது தவறல்லவா? அனித்தா என்று எழுதலாமே? ஆடா – aadaa வாடா – vaadaa என்றால் டாடா என்பதை taattaa என்று ஒலிப்பது தவறல்லவா? டாட்டா என்று எழுதலாமே? தேவையான எழுத்துகளை விடுத்து எழுதுவது ஆங்கில வழக்கம். முத்து…
-
எல்லா துறையினருக்கும் ஆங்கிலம் தான் சோறு போடுகிறதா?
—
in தமிழ்தமிழ் நலம் சார்ந்து ஒரு அறிவியல் பேராசிரியர், பொறியாளர், மென்பொருளாளர் என்று யார் பேசினாலும், “ஆங்கில அறிவை வைத்து சோறு திண்பவர்களுக்கு ஏன் தமிங்கிலம் பற்றி இவ்வளவு வெறுப்பு, ஏன் இந்த போலித்தனம்?” என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. எல்லா துறைகளிலும் தொடர்பாடல் மொழியாக ஆங்கிலம் தேவைப்படுகிறது தான். ஆனால், அதற்காக “ஆங்கிலம் தான் சோறு போடுகிறது, அது இல்லாம பிழைப்பியா” என்பதெல்லாம் ரொம்ப… இது ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தமிழை வக்கற்ற மொழியாகச் உருவகப்படுத்தும் நோக்கமுடையது…
-
தமிழ் மொழிக் கல்வி
—
in தமிழ்“ஆங்கில வழியத்தில் பயிலும் குழந்தைகள், வெளிநாடுகளில் வளரும் தமிழ்க் குழந்தைகள் தமிழ் கற்றுக் கொள்ளச் சிரமப்படுகின்றன. தமிழ் எழுத்து முறை இலகுவாக்கினால், தமிழ் படிப்பதை இலகுவாக்கலாம்” எனச் சிலர் கருதுகின்றனர். குழந்தைகள் தமிழ் கற்கச் சிரம்பபடுவதற்கான காரணங்கள்: * பாடச் சுமை. ஒன்றாம் வகுப்புப் பிள்ளைக்குத் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று மூன்று மொழிகளைக் கற்பித்தால் குழம்பாதா? * ஆர்வமூட்டாத தமிழ் மொழிப் பாடத்திட்டம். அலுப்படிக்கும் பயிற்சி முறைகள். திறம் குறைந்த பள்ளிகள். ஆசிரியர்கள். * தமிழ்…