05.12.2008 தினமலர் கோவை பதிப்பில் பிறந்த நாள் வாழ்த்து பெற்ற குழந்தைகள் பெயர்கள்:
ஹிர்த்திக் ராஜ், பிரசன்னவர்மா, ராகுல், சம்யுக்தா, கிருத்திகாவர்ஷா, நவீன்கோபி, தாரிகா, ஹரிகிருஷ்ணன், யோகேஷ்குமார், கார்த்திகா, விஜயபாரதி, தருண், நவீன், ஹிரன்விகாஷ், சர்வேஸ்,ஸ்ரீஇமி, கார்த்திகா, நித்திலன், ரித்விக், மதன், கவுதம், வினுதர்ஷினி, முகிலா, பரத்ராம், சுமையா, பிரநீஷ், பிரகாஷ், ரஞ்சித், அமிர்வர்சினி, ரணீட்டா, உமயாள்தர்சினி, அகிலேஷ், சுவேதா, வசுந்தரா, சுபஸ்ரீ, கீர்த்தனா, ரித்திக், யோகேஸ்வரி, விகாஸ், கவின், முஹமதுஷைத், தனகவுரி, கார்த்திகாதேவி, பிரணதி, தனுஷா, அக்ஷயா, அனுகிரஹா, கீர்த்திவாசன், சுஜேஸ் கார்த்திக், பிரனேஷ், ருத்ரேஷ்பாரதி, அப்ரீன், ஹேமா, மிருதுளா, ரக்ஷனா, அனுஷ், நித்யாஸ்ரீ, ஹரிஷ், திரிஷிதா, சுருதி, நிகிதாஸ்ரீ, அகிலேஷ், சுஜன்,
சத்தியநாராயணன், ரிதிகா, பிரக்னா, சாமுவேல்ராஜ், சிவவிஷ்வா, ஸ்ரீஹரிணி, வைஷ்ணவி, ஸ்ரீராம், ரித்திகா, இலக்கியா, முத்துவிஷால், அருண் ஆதித்யா, விக்வின், சந்தியா, சிவராஜ், கிரண்குமார், லாவண்யா, தர்ஷினிஸ்ரீ, பர்ஷன்பானு, திவ்யா, சூர்யபிரகாஷ், கோகுல்பிரசாத், அனு, ஹரிசுதன், ஹர்ஷவர்தன், சிபு, காயத்ரி, ஓம், இந்துபிரியா, சுபஹரிணி, ரோஹித், ஸ்ரீநிதிவருணா, மணிகண்டன், பரத், சங்கமித்திரை, நேத்ரா, பாலகிருத்திக், சஞ்ஜெய் பிரணவ், அவ்வீஸ், ஹர்ஷினி, யுவநிதர்ஷனா, சிவசங்கர், ரதேஷா, ஹரினிசூர்யா, ஷியாம், பர்ஜானா, கிருஷ்ணன், பில்ஜோபினோய், தேன்மலர், பிரியதர்ஷினி, ஹரிசுதன், ஹையகிரிவி, நேத்ரா, மானஷா, கேத்ரின் சஹானா, தீபன்ஸ்ரீ, விக்னேஷ், அப்ரோஸ், தனுஷ்ராகவ், ரோஸ்மால், ஆதிஷ், ஸ்ரீஜித்குமார், ஆதிஷ், கிறிஸ் ரையன்.
**
– பச்சை வண்ணத்தில் இருப்பவை, தமிழ்ப் பெயர்கள் என்று உறுதியாகச் சொல்லத் தக்கவை.
– சிகப்பு வண்ணத்தில் தமிழாகத் தான் இருக்குமோ என்று தோன்றுபவை.
– பிற பெயர்கள் தமிழ் இல்லை என்று உறுதியாகத் தெரிபவை.
குறிப்பிட்ட இதழ் வெளியான இடம், அவ்விதழை வாங்குவோரின் சமூகப் பின்னணியைப் பொருத்து தமிழகம் ஒட்டு மொத்தத்துக்கான தரவுகள் இதை ஒட்டியோ மாறியோ இருக்கலாம்.
தொடர்புடைய இடுகை: தமிழ்நாட்டில் குழந்தைகள் பெயர்கள்
Comments
83 responses to “தமிழர் பெயர்கள்”
சல்மா,ஸ்டாலின்,இக்பால்,ரெஜினா,பிரின்ஸி,ஷீலா,ஷேக், ஜெஸிலா,மும்தாஜ்,
புருனோ,சேவியர்,ஜான்,ஜேக்கப், சிந்தியா, ஹைதர்,இம்ரான்,டெய்சி-
இவையெல்லாம் தமிழர் பெயர்கள் என்றால்
ஹிர்த்திக் ராஜ், பிரசன்னவர்மா, ராகுல், சம்யுக்தா, கிருத்திகாவர்ஷா, நவீன்கோபி, தாரிகா, ஹரிகிருஷ்ணன், யோகேஷ்குமார்
போன்றவையும் தமிழர் பெயர்கள்தான்.
‘பிற பெயர்கள் தமிழ் இல்லை’ அதனால் என்ன பெயருள்ளவர்கள்
தமிழர்கள்தானே.
இஸ்லாமிய கிறித்தவ மதங்கள் தமிழகத்திற்கு வெளியில் இருந்து வந்தவை. இந்து மதமும் அப்படித்தானா ? அதே சமயம் இஸ்லாமிய கிறித்தவ மக்களும் தமிழில் பெயர் வைத்தால் என்ன என்பதை சிந்திக்க வேண்டும். எனக்குத் தெரிந்த சில நல்ல தமிழ்க் கிறித்தவப் பெயர்கள்
பேரின்பம்
அடைகலம்
அமலோற்பவம்
இஸ்லாமியப் பெயர்கள்
இளம் பிறை
அல்லாப் பிச்சை
ஆனால் இஸ்லாமியர்கள் தங்கள் வைத்துக் கொள்ளும் பெயர்கள் அரபுப் பெயர்களுக்கு இணையான பொருள் உள்ள தமிழ்ப் பெயர்களையோ , அன்பழகன் , தேன்மொழி போன்ற பெயர்களை ஏன் வைத்துக் கொள்வதில்லை என்பது அவர்களுக்கே வெளிச்சம்
un name ku meaning enna nu theriuma
Boo – means earth (Boomadevi – wife of Lord Vishnu)
Pathi – means owner
Boo Pathi means owner of Boomadevi @ earth
Like that Seethapathi, Umapathi etc are there.
So as a tamil, we should avoid this names. tamil is an unique community. they neither hindu nor other religious. once they converted or called as hindu’s by ariyans. So the name hindu is a cheating. For us it is not necessary to follow any religion.
We will create a tamil nation, there only one holiday will be there for pongal. It will be celebrated for at least a week. Rest all the festivals like Diwali, Ramzan and Chrismas etc will be celebrated within their homes and not in grand manner.
So it is good to name in tamil for those who are converted into Islam, Christianity and Hindu.
Just follow your mother tongue whatever it is, Not religions. I am a tamil, i do it. if you are an arabi/urdu you follow that, thats it. if you are telugu, tamil, kannada, bengali etc, then if you are keeping the name rahim means, you are cheating your mother tongue, like how Boopathi cheats tamil
ரவி, தமிழ் பெயர்கள் வைப்பது தமிழகத்தில் அரிதாகிக் கொண்டே வருகிறது. பாருங்கள், உங்களுக்கும் எனக்கும் கூட தமிழ் பெயர் வைக்கப்படவில்லை.
நீங்கள் குறிப்பிட்டுள்ள பெயர்களில் கூட ‘தேன்மலர்’ என்பதை தவிர மீது அனைத்துமே கொஞ்சம் ஸ்டைலாக இருப்பதால் தான் சூட்டப்பட்டிருக்கும்.
என் மகனுக்கு ‘பொழிலன்’ என்று பெயர். ஆனால் தமிழ் மக்கள் பலருக்குமே கூட அந்த பெயர் புரிபடவில்லை 🙁
மீண்டும் நல்ல தமிழ் பெயர்களை கண்டுபிடித்து மக்கள் சூட்ட ஆரம்பிக்க வேண்டும்
பெயர்,
உங்கள் கேள்வியில் இருந்து புரிந்து கொண்டது:
“இசுலாமியர், கிறித்தவர் தங்கள் மதம் / மதம் சார்ந்த நாடு / மொழிப் பெயர்கள் வைக்கும் போது இந்துகளும் அப்படி செய்யலாம் தானே?”
என் புரிதல்:
தமிழர்கள் இந்து சமயம் சார்ந்தும் பெயர் வைக்கும் வழக்கம் உண்டு தான். ஆனால், கந்தன், வடிவேல், சரவணன், முருகன், கலைவாணி, மீனாட்சி போன்ற தமிழ் இந்துப் பெயர்கள் கூட அருகி வருகின்றனவே?
எனக்குத் தெரிந்தவர்களில் செல்லம்மா என்பவரின் பேத்தியின் பெயர் தர்ஷினி. வெள்ளையம்மாள் என்பவரின் மகன் பெயர் ஹர்ஷத். இதை வெறும் நாகரிக மாற்றத்தின் விளைவு என்று ஒப்புக் கொள்ள இயலவில்லை. இது சரியா, தவறா என்பதை விட குறுகிய காலத்தில் இந்த மாற்றம் ஏன் என்பதே சிந்திக்கத்தக்கது.
//‘பிற பெயர்கள் தமிழ் இல்லை’ அதனால் என்ன பெயருள்ளவர்கள்
தமிழர்கள்தானே.//
வெளி இடத்தில் குடியேறி இன்னும் மூன்று தலைமுறைக்கு ஆங்கிலம் பேசினாலும் ஆசியன் / இந்தியன் / தமிழன் என்று தான் வகைப்படுத்துவார்கள். ஆனால், பெயரை வைத்துக் கொண்டு அடையாளங்களைத் தொலைத்து விடக்கூடாது அல்லவா?
பிரேம்குமார்,
தமிழ்ப் பெயர் வைக்கும் வழக்கம் மட்டும் அல்ல, தலைவர்கள் / புகழ் பெற்றவர்கள், குடும்பத்தில் முன்னோர்கள் பெயர் சூட்டும் வழக்கமும் அருகி வருகிறது. பேரன், பேத்தி என்று சொல்லே பெயரன் (தாத்தாவின் பெயரைக் கொண்டவன்), பெயர்த்தி என்பதால் வந்தது தானே !!
பிரித்தானிய பிரதமரின் பெயர் Brown. அமெரிக்க ஜனாதிபதியின் பெயர் Bush. இந்த சொற்களுக்கு ஆங்கில மொழியில் என்ன அர்த்தம் என்று எல்லோருக்கும் தெரியும். அவர்கள் மட்டுமல்ல, எந்த ஒரு ஆங்கிலேயனும் தங்களுக்கு அப்படிப்பட்ட விசித்திரமான பெயர் இருப்பதைக் குறித்து வெட்கப்படவில்லை. ஆனால் தமிழர்கள் மட்டும், வெள்ளையம்மா, கருப்பாயி என்று பெயர் இருந்தால் நாகரீகம் இல்லை என்று நினைக்கிறார்கள். நாகரிக மோகம் கருதி எந்த ஒரு ஆங்கிலேயரும் வாயில் நுழையாத பெயர் வைத்தாக நான் அறியவில்லை. ஒரு சிலர் பிரெஞ்சு மொழிப் பெயர்களை தமது பிள்ளைகளுக்கு சூட்டுவதுண்டு. ஆனால் அதெல்லாம் நம்மவர்கள் தமிழ் பெயர் சூட்டுவதைப் போல, அர்த்தமுள்ள பெயர் வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்வது. மற்றும்படி பெரும்பான்மை ஆங்கிலேயர்கள், இப்போதும் 500 வருடங்கள் பழமை வாய்ந்த பெயர்களை தான் சூட்டுகின்றனர். ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து இனங்களும் அப்படி தான் செய்கின்றன. 2000 வருடங்கள் பழமையான கிரேக்க பெயர்களை கொண்டவர்களை, இப்போதும் நீங்கள் கிரீசில் பார்க்கலாம். ஆனால் தமிழருக்கு மட்டும் தான் நாகரீகமான பெயர் வேண்டுமாம். இதெல்லாம் தாழ்வு மனப்பான்மையால் ஏற்படும் கோளாறு. தமிழர்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரும் இந்த மனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோர்வேயிலும் பல விசித்திரமான பெயர்கள் உண்டு. ஊரின் பெயர்களே ஆட்களின் பெயர்களாயும் இருப்பது சர்வ சாதாரணம். அது மட்டுமில்லை, கரடி (Bjørn) என்று கூடப் பெயர் வைக்கிறார்கள்.
என் மகனின் பெயர் சேந்தன். இது தமிழ்ப்பெயர் தான் என்றும் யாருடைய பெயர் என்றும் தெரிந்த ஒருவரையும் இது வரை நான் சந்திக்கவில்லை. பதிவுலகில் சிலருக்கு இந்தப் பெயர் தெரிந்திருக்கிறது. அதே போன்ற எதிர்வினையைத் தான் ‘பொழிலன்’ என்ற பெயரும் சந்தித்திருக்கும் என்று நினைக்கிறேன்.
உடையில் மாற்றம், உணவில் மாற்றம், தோற்றத்தில் மாற்றம் வரும் போது பெயரில் மாறுதல் வருவது கண்டு ஏன் மிரள வேண்டும். தாத்தாகள் கம்பங் கஞ்சி காலையில்
குடித்தால், பேரன்கள் ஹார்லிக்ஸ்
சாப்பிடுகிற காலம் இது.
‘எனக்குத் தெரிந்தவர்களில் செல்லம்மா என்பவரின் பேத்தியின் பெயர் தர்ஷினி. வெள்ளையம்மாள் என்பவரின் மகன் பெயர் ஹர்ஷத்’
பாட்டி/தாத்தா பெயர்களை வைக்க
வேண்டும் என்ற பழக்கம் மாறி வருகிறது.பெண்கள் ஜீன்ஸ், டிஷர்ட் போடு, தலையை பாப் பண்ணிக்
கொண்டிருக்கிற காலத்தில்
பெயர் மட்டும் வெள்ளையம்மாள்
என்று இருப்பது முரண் என்று
நினைக்கலாம் :). அடையாளம்
பெயரில் மட்டுமா இருக்கிறது.
ஜீன்ஸ் போட்டு, ஸ்லீவ்லெஸ்
டி ஷர்ட் போட்டுக் கொண்டு,
தலையை பாப் செய்து
கொண்டு ஸ்டைலாக
போகும் பெண் என் பெயர்
வெள்ளையம்மாள் என்று
சொன்னால் எப்படி உணர்வீர்கள்.
பெயருக்கேற்ற உடையா, உடைக்கேற்ற பெயரா?-
எது வேண்டும் :).
ரவி,
நல்ல சிந்தனை.
என்னுடைய அத்தான் பையன் பெயரும் கவின் தான். இது தமிழ் பெயர் என்று இப்போது தான் தெரிகிறது. என்ன அர்த்தமோ?
மக்கள் வித்தியாசமான மற்றும் புதுமையான பெயராக இருக்க வேண்டுமென்று தான் வடமொழியை நாடுகிறார்கள்.
நித்திலன், முகிலா, கவின், இலக்கியா, தேன்மலர் – இது மாதிரி புதுமையான பெயர்களை கொண்ட ஒரு database-ஐ நாம் ஏன் உருவாக்க கூடாது? பெரும்பாலான மக்கள் தற்போது இணையத்திலிருந்து தான் பெயர் தேர்வு செய்கிறார்கள்.
இந்த முயற்சிக்கு இது மாதிரி அஜாக்ஸ் தேடல் வசதியை நான் செய்து தருகிறேன்.
நல்ல முயற்சி !!
தூய தமிழ் பெயர்களுக்கு கீழ்கண்டவைகளையும் இணைத்துக்கொள்ளுங்கள்
http://web.archive.org/web/20080109115919/www.nithiththurai.com/name/index1.html
http://babynames.looktamil.com/show_baby.php?gender=F&cat=2
http://www.thamizhagam.net/thamizhnames.html
nirosha endra peyarukana artham enna?
After all, what is there in a NAME ? It is just an Identity…
தமிழ்ப்பெயர் சூட்டி தமிழை வளர்க்க முடியாது. அதற்கு வேறு எவ்வளவோ வழிகள் உள்ளன. முதலில் தமிழ் கற்றலை ஊக்குவிக்க வேண்டும்.
கார்த்திக்: கவின் என்றால் அழகு என்று பொருள், எழில் என்பதைப்போல.
அண்மையில் என் நண்பர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முகிலன், நித்திலா என்று பெயரிட்டுள்ளனர். இது போன்ற பெயர்கள் ஒய்யாரமாகப் பார்க்கப்படும் நிலையில் தமிழ்ப் பெயர்கள் மீண்டும் பெருக வாய்ப்புண்டு. நாங்கள் எதிர்சோக்கியுள்ள எங்கள் குழந்தைக்குத் தமிழ்ப்பெயர்தான் வைக்க வேண்டுமென்று உறுதியாக உள்ளோம். கார்த்திக் தெரிவித்துள்ளதுபோல் நல்ல தமிழ்ப்பெயர்களைத் தொகுத்து இணையத்தில் வெளியிட்டால் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.
ஒன்றை மறந்துவிட்டேன். Cavincare என்ற வணிகப்பெயரை கவின் என்ற சொல்லில் இருந்தே பெற்றதாகக் கேள்விப்பட்டுள்ளேன். உண்மையா எனத் தெரியவில்லை.
கார்த்திக்,
கவின் என்பதற்கு Beauty, grace, fairness, comeliness என்று சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி பொருள் தருகிறது.
திருச்சி கவின் கலை கல்லூரி ( Fine arts college) போன்ற பெயர்களை நினைவூட்டிப் பார்க்கலாம்.
தற்கால நுட்பங்கள் கூடிய, தமிழ்ப் பெயர்கள் கொண்ட தரவுத் தளம் அமைப்பது நல்ல யோசனை. கண்டிப்பாகச் செய்வோம். TamilNation போன்று தமிழ்ப் பெயர்கள் கிடைக்கும் தளங்களைப் பயன்படுத்தலாம்.
இத்தரவுத்தளத்தில் தமிழ்ப் பெயர்கள் என்று உறுதிப்படுத்தட்டவை மட்டும் இருக்க வேண்டும். கூடவே அதன் பொருளும் தேடல் வசதியும் தமிழிலும் இடம் பெற வேண்டும்.
சுந்தர், Cavin care பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையாகத் தான் இருக்க வேண்டும். நீங்கள் எதிர்நோக்கி இருக்கும் அழகிய தமிழ் மகவுக்கு என் வாழ்த்துகள் !
அன்புடன் பாலா,
//After all, what is there in a NAME ? It is just an Identity…//
அந்த identity என்ன என்பது தானே கேள்வி 🙂
ஈழத்தில் உள்ள தமிழ் ஊர்களை ஆக்கிரமிக்கும் சிங்களவர் ஏன் சிங்களப் பெயர்களை இட்டுக் கொள்கின்றனர்? அதுவும் சும்மா ஊர்ப் பேர் தானே என்று விட்டு விடலாம் தானே 🙂
//தமிழ்ப்பெயர் சூட்டி தமிழை வளர்க்க முடியாது. அதற்கு வேறு எவ்வளவோ வழிகள் உள்ளன. முதலில் தமிழ் கற்றலை ஊக்குவிக்க வேண்டும்.//
ஒரு மொழியைப் பரப்ப, கற்பிக்க முனையும் முன் அம்மொழியின் மீதான மதிப்பு முக்கியம்.
தமிழ் மீதான தாழ்வு மனப்பான்மையின் விளைவே இந்த பெயரிடும் போக்கு.
நன்கு படித்து, பொருளீட்டலில் முன்னேறியவர்களும் தமிழ்ப் பெயர்கள் வைத்தால், அதற்கு அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு இத்தாழ்வு மனப்பான்மை குறையும்.
வாழ்த்துகளுக்கு நன்றி ரவி. 🙂
பெயர்,
//உடையில் மாற்றம், உணவில் மாற்றம், தோற்றத்தில் மாற்றம் வரும் போது பெயரில் மாறுதல் வருவது கண்டு ஏன் மிரள வேண்டும். தாத்தாகள் கம்பங் கஞ்சி காலையில்
குடித்தால், பேரன்கள் ஹார்லிக்ஸ்
சாப்பிடுகிற காலம் இது.//
நுகர்வு முறையாலும் பண்பாடு மாற்றத்துக்குள்ளாவது உண்மை தான். ஆனால், அதுவும் ஒரு காரணமே தவிர நியாயமாகாது.
//பெயருக்கேற்ற உடையா, உடைக்கேற்ற பெயரா?-
எது வேண்டும்//
இந்தப் பெயரை வைத்தவன் இப்படித் தான் இருப்பான்; இப்படித் தான் இருக்கவேண்டும் என்ற ஒடுக்குமுறை அரசியலின் மன வெளிப்பாடு தான் மேலே உள்ள கூற்று.
குப்பத்தில் இருக்க வெள்ளையம்மாள் எல்லாம் நம்மைப் போல் முன்னேறி நல்ல உடை போட விட்டுறலாமா என்ற சிந்தனையின் அடுத்த படியே, நல்ல உடை போடுபவர்கள் போயும் போயும் வெள்ளையம்மாள்னா பெயர் வைக்கலாமா என நினைப்பது. வெள்ளையம்மாள் என்ற குறைவான பெயர் ஒரு தமிழ்ப் பெயர் என்பதால் தொடர்ந்து எல்லா தமிழ்ப் பெயர்களையும் குறைவுடையதாக நினைத்துக் கொள்வது…
அழகு, இனிமை, கம்பீரம், எளிமை, பொருள் கூடிய எத்தனையோ தமிழ்ப் பெயர்கள் உள்ளன. இவற்றில் ஒன்றை வைப்பதால் நிச்சயம் “நாகரிகம்” குறைந்து விடாது.
எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும். அஞ்சலி தமிழ்ப் பெயரா, இல்லையா?
இல்லை . வடமொழி .
இல்லைங்க
எத்தனையோ அழகான தமிழ்ப்பெயர்கள்
உள்ளன.
பெயர் கூறுகிறார்:
//உடையில் மாற்றம், உணவில் மாற்றம், தோற்றத்தில் மாற்றம் வரும் போது பெயரில் மாறுதல் வருவது கண்டு ஏன் மிரள வேண்டும். தாத்தாகள் கம்பங் கஞ்சி காலையில்
குடித்தால், பேரன்கள் ஹார்லிக்ஸ்
சாப்பிடுகிற காலம் இது.//
எத்தனையோ “வெள்ளைக்காரர்கள்” விரும்பி சீன உணவை உட்கொள்ளுகிறார்கள், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் இப்படியா தங்கள் பெயரை சுங், சிங், சாய், சூ என்று வைத்துக்கொள்கிறார்கள்? இல்லையே! ஒரு புதுச்சாய்வு, ஒரு புதுப்போக்கு, ஒரு புது ஒய்யாரம், புது மிளிர்வு, புது மிடுக்கு, புது சொக்கு, புது ஒளிர்வு இருக்க வேண்டும் என்னும் துடிப்பு இருப்பது இயற்கை, ஆனால் வடிகட்டின தாழ்வுமனப்பான்மையை, பொய் உயர்ச்சி மயக்கத்தை ” ˘ச்டைல் ” என்னும் பூச்சு கொடுத்துப் புகழ்வது வேடிக்கை. கம்பங் கஞ்சியின் (உடல்நலம்தரும்) அருமை ‘ஆர்லிக்˘சுக்கு வராது என்பது வேறு செய்தி. பசும்பால் என்னும் பெயரால் மேற்குலகில் நாங்கள் குடிக்கும் பாலில் கலந்துள்ள எதிர்நுண்ணுயிரி மருந்துகளின் எண்ணிக்கை 80-100 ஐக் கடக்கும். இது ஊட்டும் கெடுதிகளை இன்னும் 20-300 ஆண்டுகள் கழித்து, பணத்தை ஈட்டிய பிறகு, அவற்றை நீக்க புதிய முறைகளை விற்று இன்னும் பணம் பண்ணுவார்கள். இன்னும் எத்தனையோ கண்ணறாவிகள் உள்ளன அந்த வெள்ளை நீர்மத்தில்! அறிவு என்பது தேர்ந்து, கொள்வது. அறியாமை என்பது கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்பது.
நல்ல பதிவு ரவி!
நீங்கள் கொடுத்துள்ள ஏறத்தாழ 160 -க்கும் கூடுதலான பெயர்களில், ஏறத்தாழ 10 பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் என்பது ஒருபுறம் இருக்க ஏறத்தாழ 71 பெயர்கள் கிரந்த எழுத்துகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. க்ஷ, ஹ, ஷ, ஸ்ரீ சரளமாக வந்துள்ளன. இதுக்கும் ‘ஆர்லிக்˘சுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமா என்று தெரியவில்லை. சிரீதரா என்று ஆழ்வார்கள் எழுதினார்கள். சீனிவாசன் என்று எழுதி வந்தோம். பிறகு சிரீனிவாசன் என்று எழுதாமலலே நேரடியாக ஸ்ரீனிவாசன் என்று சிலர் எழுத முனைந்தனர், பின்னர் ஸ்ரீநிவாசன் என்று சிலர், இன்னும் சிலர் ஸ்ரீநிவாஸன். அடுத்த கட்டமாக ஸ்ரீநிவாஸந் என்று எழுதிவிட்டால் ஒருவழியாக அமைதிகொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
கலை:
//எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும். அஞ்சலி தமிழ்ப் பெயரா, இல்லையா?//
ஒரு சொல் தமிழ்ச்சொல்லா என்று அறிய தொடர்புடைய பல சொற்களை எண்ணிப்பார்க்க வேண்டும்.
சமசுகிருதத்திலும் அஞ்சலி என்று ஒரு சொல் உண்டு, தமிழிலும் அஞ்சலி என்று ஒரு சொல் உண்டு!
சமசுகிருதத்தில் அஞ்சலி என்பது இருகை கூப்பி வணங்குதலுக்குப் பெயர். ஆனால் அஞ்சலி என்னும் சொல் கையோ செவியோ (காதோ) குவிந்து, உயர்ந்தோ நீட்டியோ இருப்பதற்கு வழங்கும் சொல்.
சமசுகிருதத்தில் கர்ணாஞ்சலி என்றால் மான், நாய் போன்ற விலங்குகள் காதை உயர்த்துமே அதைப்போல் காதை உயர்த்துதல். மற்ற இடங்களில் பூர்ணாஞ்சலி, ஏகாஞ்சலி என்றால் இருகைநிறைய, ஒருகைநிறைய என்று பொருள். உடாஞ்சலி என்றால் உள்ளங்கையை குவித்து நீட்டி ஏந்துதல். உடக்காஞ்சலி என்றால் உள்ளங்கை கொள்ளும் நீர். இப்படி மேலுல் சில சொற்கள் உள்ளன. சமசுகிருதத்தின் அஞ்சலி என்னும் இச்சொல் எவ்வாறு இப்பொருள் பெற்றது, தொடர்புடைய இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பங்களில் என்னென்ன சொற்கள் உள்ளன என்று பார்க்கவேண்டும். இந்த சமசுகிருதச் சொல் தமிழில் இருந்து பெற்றிருக்கலாம் என்பது என் நிறுவப்படாத கருத்து. அங்கை (உள்ளங்கை, அகம்+கை = அங்கை), அங்ங்ஐ, அஞ்ஞை + அளி அஞ்சலி. என்பதே என் நினைப்பு. இதெல்லாம் ஏதும் நிறுவப்பட்ட உண்மை அல்ல.
இப்பொழுது தமிழ்ச்சொல்லாகிய அஞ்சலிக்கு வருவோம். தமிழில் அஞ்சு என்றால் அச்சம் கொள் என்று பொருள். அச்சம், அஞ்சு இரண்டும் ஒரே வேரில் இருந்து வருவது. அஞ்சு + அல்+இ என்பது அஞ்சலி ஆகும். அஞ்சாதவள் என்று பொருள் கொள்ளலாம். அஞ்சலர் என்பது அஞ்சாதவர் என்னும் பொருளடியில் பகைவர் என்று தமிழில் பொருள் வளர்ச்சி கொண்டுள்ளது. அஞ்சலளித்தல் என்றால் அஞ்சாமல் இருக்க காப்பு அளித்தல் என்று பொருள். இது தவிர அஞ்சலி என்பதற்கு கழகத் தமிழ் அகராதி, காட்டுப்பலா, மாவிலிங்கம் (ஒரு மரம், இந்திய மருத்துவத்தில், ஆயிர்வேதத்தில் பயன்படுவது)),
வௌவால் என்னும் பொருட்கள் தந்துள்ளார்கள். இப்பொருட்கள் சமசுகிருதத்தில் இல்லை என்று நம்புகிறேன். இச்சொற்களை விரித்து எழுதலாம்.
அஞ்சல் என்னும் சொல்லுக்கு அஞ்சுதல் என்னும்வழி தோல்வி என்றும் ஒரு பொருள் உண்டு. ஆனால், நிறுத்துதல், தடுத்தல் என்னும் பொருள் இதற்கு உண்டு. அஞ்சல் என்றால் நிறுத்துமிடம் என்று கழக அகராதி பொருள் கூறுகின்றது. அஞ்சல் என்றால் சோம்புதல் என்று திவாகரம் பொருள் கூறுகிறது. நின்று நின்று போவதாலோ, ஓரிடத்தில் இருந்து ஓரிடம் போய் நிற்பதாலோ அஞ்சல் என்பது தபால் என்னும் பொருள் பெற்றது. அஞ்சல் கொண்டு செல்லும் ஒட்டகத்திற்கு அஞ்சலொட்டகம் என்று பெயராம் (சென்னை பல்கலைக்கழக அகராதி தரும் பொருள்).
ஆகவே, அஞ்சலி என்றால் அஞ்சாதவள், சோம்பல் இல்லாதவள் என்னும் பொருள் கொள்ளலாம் என நினைக்கின்றேன். காப்பு தருபவள் என்னும் பொருளும் கொள்ளும். வடமொழிவழி வணக்கம் என்னும் பொருள்தரும். எனவே வணங்குபவள் என்னும் பொருள் வருமா, வணங்கத்தக்கவள் என்னும் பொருள் வருமா என அறியேன். அதிகம் குழப்பியிருந்தால் மன்னிக்கவும். சென்னை பல்கலைக்கழக அகராதியை இணையவழி பார்க்கலாம்:
http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
அஞ்சலி என்பதைப் பிரித்து வேண்டுமாறு பொருள் கொண்டால் தமிழ்ச் சொல்லாகக் கூடும். ஆயினும் அது வட்மொழியே
பூபதி
🙁
அன்பு பூபதி,
த்மிழில் ஒன்று என்பது, ஆங்கிலத்தில் ‘ஒன்'(one)என்றிருப்பதை எண்ணிப் பாருங்கள்.ஒரே பொருளைக் குறிக்கும் தனித்தனி வேர்ச்சொல்.
ஒரு மொழியில் ஒரு சொல்லுக்கு வேர்ச்சொல் இருந்தால் அது அந்த மொழிச் சொல்லே. ஒலிவடிவில் ஒத்திருக்கிறது.அவ்வளவே.சொந்தம்
கொண்டாடுதலை மொழிவல்லுநர் மறுப்பர்.
செல்வா,
அஞ்சலி குறித்த அருமையான விளக்கத்துக்கு நன்றி.
//ஏறத்தாழ 71 பெயர்கள் கிரந்த எழுத்துகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன.//
தற்காலத் தமிழர்களுக்கு ஏனோ தங்கள் பெயர்களில் கிரந்த ஒலிகள் வரவேண்டும் என்ற தீராத மயக்கம். இன்ன எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்று சொல்லும் சோதிடர்கள், எண் ராசிக்காரர்கள் மேல் மக்களுக்கு கூடி வரும் நம்பிக்கைக்கு இதில் பெரும் பங்கு உண்டு.
//இது ஊட்டும் கெடுதிகளை இன்னும் 20-300 ஆண்டுகள் கழித்து//
இது ஊட்டும் கெடுதிகளை இன்னும் 20-30 ஆண்டுகள் கழித்து என்று படிக்கவும்.
நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவை காண்பதில் மகிழ்ச்சி.நான் அடிக்கடி தங்களது பக்க முகவரியை கண்டு ஏமாந்தேன்.
அகராதியை பதிர்ந்ததற்கு நன்றி செல்வா.
இந்த மாதிரி ஒரு Tamil – English அகராதியைத் தான், ரொம்ப நாளா நான் தேடிட்டிருந்தேன். நம்மள மாதிரி தமிழ்ல யோசிச்சு ஆங்கிலத்தில பேசுரவங்களுக்கு இது ரொம்ப உதவியா இருக்கும்.
உங்கள் நீண்ட அருமையான விளக்கத்துக்கும், அகராதிக்கும் மிகவும் நன்றிகள் செல்வா.
நீங்கள் எதையும் குழப்பவில்லை. நல்ல விளக்கம்தான்.
முதலில் அஞ்சலி தமிழ்ப் பெயர்தான் என்பதில் மகிழ்ச்சி. தமிழில் அந்த பெயரின் அர்த்தம் அஞ்சாதவள், சோம்பல் இல்லாதவள் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
மகளிடம் சொல்லி பெருமைப்படுத்த வேண்டும். 🙂
கணேஷ்,
//தமிழ் பெயர் இல்லை//
என் பெயரும் தான் தமிழ்ப் பெயர் இல்லை என்று நினைக்கிறேன் 🙁
நீங்கள் தொடர்ந்து என் பதிவைப் படிப்பதில் மகிழ்ச்சி. சில காரணங்களால் அடிக்கடி எழுத முடியவில்லை. நீங்கள் http://reader.google.com சென்று add subscription என்ற பெட்டியில் http://blog.ravidreams.net என்று சேர்த்துக் கொண்டால் நான் புதிதாக எழுதும் போது உங்களுக்கு வந்து சேரும். Google readerல் இது போல் நீங்கள் அடிக்கடி போகும் தளங்கள், பதிவுகளைச் சேர்த்து ஒரே இடத்தில் படிக்கலாம்.
http://ularal.com/author/ravidreams என்ற முகவரியிலும் அவ்வப்போது பதிந்து வருகிறேன்.
குறிப்புக்கு நன்றி!!
ரவி,
இந்த தருணத்தில் இதை சொல்வது பொருத்தம் என்று நினைக்கிறேன்.எனது அலுவலகத்தில் உள்ள Outlook மூலம் பல வெள்ளையர்களது பெயரை காணும் போது ஆச்சர்யம் பின்னும்…கீழ் வருவன அவர்தம் முன் அல்லது பின் (விந்தையான) பெயர்கள் அல்லது பெயரில் ஒரு பகுதி
Dove —
Tiger — புலிப்பாண்டி
Bear
Wolfgang
Hill — மலைச்சாமி
Mount –கிரி
Apple — கனி போல
Peacock — மயில்சாமி
CROW — காக்கை பாடினியர்
Temple –கோயில் :)) (என் நண்பனது தம்பியின் செல்லபெயர் )
Green – பச்சையப்பன்
Small — சின்னசாமி
Black — கருப்பு
Orange — பழம்
Apple — கனி
Ice — தண் (மதி)
Waterman –
Drummer — ???
Coffee —
Innocent — குழந்தை சாமி
Arrowwood – அம்புகம்புன்னு ஒரு பேர் வச்சுருக்காங்கே
Love — அன்பு
FireFly –கங்கு கந்தசாமி 🙂
Landsman — பண்ணையார்
Music — ராக சுதா
Light — நம்ம ஊர் தீபன் போல
இன்னும் பல. அதை சல்லடை போட நேரம் போதவில்லை
நன்றிகளுடன்,
கணேஷ்
ganesh, உங்கள் தமிழாக்கங்கள் கலக்கல் 🙂 ஐரோப்பிய மொழிகளிலும் இது போன்ற பெயர்களைக் காணலாம்.
அருமையான விளக்கம் செல்வா
நன்றிகள்
கார்த்திக், கலை, ரவி, திகழ்மிளிர் உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. வலைப்பதிவுப் பெயர்களில். மிக அழகாக எழுச்சி ஊட்டும் பெயர்கள் பல உண்டு ஆனால் அவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தவற்றுள் ஒன்று திகழ்மிளிர்! எத்தனை மிடுக்கான, எழுச்சி ஊட்டிக் கலக்குற பெயர் !பெயர் சூட்டிய நீங்கள் வாழ்க!
திகழ்மிளிர் வலைப்பதிவில் படிப்பவர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்வது எவ்வாறு?
இந்த முகவரியில் திகழ்மிளிரின் வலைப்பதிவு இடுகைகளில் ஒன்றில் மறுமொழி இடலாம்.
கார்த்தி சொன்ன யோசனையின் படி, தமிழ்ப் பெயர்கள் கொண்ட தரவுத்தளம் அமைக்க முயன்று வருகிறோம். உங்களுக்குத் தெரிந்த பெயர்களை இந்தப் படிவத்தில் தரலாம். நேரடியாக Google Spreadsheetல் பெயர்களை உள்ளிட்டு பங்களிக்க விரும்பினால், உங்கள் கூகுள் முகவரியை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு அனுப்பி உதவவும். நன்றி
தூய தமிழ்ப் பெயர்கள் இங்கே.
தொடுப்புக்கு நன்றி, மொழிவளன் (என்ன அருமையான பெயர்!) விதைகள் தளத்தில் பெண்கள் பெயர்களும் விரைவில் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.
வணக்கம்………..
உங்கள் http://ravidreams.net/library/ உள்ள சில டெமொ (வலைப்பதிவு பற்றிய)vidoeக்களை பதிவர் சந்திப்பில் பயன்படுத்த உங்கள் அனுமதி தேவை…..
உங்கள் email முகவரி கிடைத்தால் முளுமையான விவரத்தை அனுப்பி வைக்கிறேன்…
[email protected]
Dr. Sintok,
அந்த படங்கள் உங்களுக்குப் பயன்படுவதில் மகிழ்ச்சியே. தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.
மிக்க நன்றி…………
நீயா-நானா? “குழந்தைகளுக்கு ரசித்துப் பெயர்கள் வைப்பது ஆண்களா? பெண்களா?” “…’இலக்கியா’, ‘தமிழரசி’…” பேரெல்லாம் ரொம்ப பழசா இருந்துச்சு! அதுதான் தேவதர்ஷினினு வெச்சோம்!” 🙂
ஏற்கனவே கேட்ட பேர், தமிழ்ப் பெயர் எல்லாம் பழசு என்ற மனப்பாங்கு சின்ன ஊர்கள் வரை பரவி இருக்கு 🙁 இப்படியே போனா அடுத்த தலைமுறைக்கு சீனத்தில் தான் பேர் வைக்கணும் !
உறவினர் மூலம் அறிந்தது:
90 ரூபாய் கொடுத்தால் கணினி மூலம் நொடியில் சாதகம் அச்சடிக்கிறார்கள். அதில் குழந்தையின் பெயர் என்னென்ன எழுத்துகளில் தொடங்கலாம், எண் ராசி படி கூட்டுத் தொகை எவ்வளவு இருக்க வேண்டும் என்று சொல்லி பொருந்தி வரும் பெயர்கள் சிலவற்றையும் பரிந்துரைக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலான பெயர்கள் வட மொழி, வேற்று மொழிப் பெயர்கள். சில ராசிகளுக்கு கட்டாயம் கிரந்த எழுத்தில் தான் பெயர் தொடங்க வேண்டும் என்ற விதி வேறு. மேலும் குழந்தைக்கு ஒரே பெயர் மட்டும் வைத்து, அதை முழுமையாக எப்போதும் அழைத்தால் தான் “சக்தி” கிடைக்குமாம் !
பல கடைகளின் பெயர்களை ஏன் ஆங்கிலத்தில் எழுதித் தொலைக்கிறார்கள் என்று குழம்பிக் கொண்டிருந்தேன். கடை உரிமையாளர்களின் எண் ராசிப் பெயர் மீதான நம்பிக்கை தான் காரணமோ என்று இப்போது தோன்றுகிறது. ஆங்கிலத்தில் வைத்த பெயரைத் தமிழில் மொழிபெயர்த்தால் “சக்தி” போய் விடுமல்லவா?
எண் ராசிக் கணக்கீட்டை ஆங்கிலத்தில் தான் செய்ய இயலுமா? தமிழ் எழுத்துகளைக் கொண்டு கணக்கிட்டாலாவது தேவலை!!
சக்தி- தூய தமிழ் வார்த்தை அல்ல ,
திறன், பலம், வலிமை ஆகியவைகளே பொருத்தமான தமிழ் சொற்கள்.
I am really sorry, i dont have a software in this computer to type in Thamizh (this is office computer) and i am not a computer savvy to have a good knowledge about free Thamizh softwares available in the internet.
I named my twin sons as Kavin Gankadhar and Keertan Sakthish.
Gankadhar is my father’s name who expired 9 years ago and Sakthish is my elder brother’s name who expired in a bike accident 4 years back.
I was desperately trying for Thamizh names for both of them. I believe in astrology as science & due to that i had some limitations with their stars. Their name should start with the letter K or G and their total should be 6.
i spoke to a lot of Thamizh linguists and searched the internet for a suitable Thamizh name for my younger son. But i couldn’t. So i compromised myself with the Sanskrit name Keertan.
I read the comments on this page and would like to share my thoughts with you all.
First of all we Thamizh people aren’t encouraging the Thamizh names now a days….! I dont agree to this whole heartedly. Because Chozha king Raja Raja Chozhan’s name itself is not a Thamizh name! Raja is a Sanskrit word!
Naming the child according to the growing cultural changes (cultural changes there by brings changes in the language also!) is not new. As ‘Anbudan Bala’ said, we cant “grow” Thamizh with just naming the kids in Thamizh. We should feed our children with proper Thamizh knowledge. But as an individual, everyone of us is having the responsibility of naming the future generations with proper Thamizh names.
Although i named my younger son as Keertan, even now i am feeling guilty for not naming him with a Thamizh name. I am searching for a proper Thamizh name for him even now. If anyone of you can help me with a Thamizh name starting with the Thamizh letters ka, Kee Ku, Koo please do send the names to me through an email. My email id is kbsugumar (at) gmail (dot) com.
Thanks.
Dear Sugumar,
Am happy that you are still looking for a good tamil name for your kids though you have named them already 🙂
I respect you for naming them after your father’s and brother’s name.
Had a small thought after reading through your comments.
I felt, if you have strong liking and belief in Tamil than your belief in Astrology, nameology and numerology then there wouldnt be a second thought or compromisation in keeping a sanskrit name (based on astrology). You would have only ended up with a tamil name of your choice regardless of the starting letters / numbers.
Hence, lets not try to put the ball in the court of Astrology / nameology / numerology for not naming your kids in tamil. If you want to name your kids in Tamil, then go ahead and name them.
I would say, in the name of Astrology we are trying to pose a
“NONDI SAKKU”.
sorry for using English. I fully agree with Kalaiyarasan Dec 10 5:35Pm.
My new born daughter name ‘Potramarai’.
வணக்கம் சிவக்குமார். உங்கள் மகள் பெயரைக் கேட்டு மகிழ்ந்தேன்.
i want some names for my child
தமிழ் பெயர்கள் தரவு தளம் பற்றிய பதிவு
http://blog.ravidreams.net/தமிழ்க்-குழந்தைகள்-பெயர்
Beta version is available at,
http://peyar.yemkay.com
You can contribute to this database, by adding new Tamil names in this spreadsheet, http://spreadsheets.google.com/ccc?key=p-PPzFBEYxfoUPPkH6O9lYA&hl=en (requires Google login)
I would like to put my opinion, while christining Tamil names, even thinking of names sounding mordern or like sanskrit is also a mental block. Trying to over come that is what really appreciable.
@priya பார்க்க: Tamil Baby Names Websites
@ Sivakumar வழிமொழிகிறேன்.
சூரிய நாராயண சாஃத்திரி தமிழ் மீது கொண்ட காதலால் பருதிமாற் கலைஞன் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டானே.அவன் அல்லவா தமிழன். தமிழ் பேசுவதால் மட்டும் தமிழனாகிவிடமுடியாது.தமிழ்நாட்டில்
பிறப்பதால் மட்டும் தமிழனாகிவிடமுடியாது.தமிழ் வாழையடிவாழையால் (Heritage)மட்டும் தமிழனாகிவிடமுடியாது. தமிழ்க்காதல் வேண்டும்,பற்றுவேண்டும்,தமிழ்த்தாகம் வேண்டும்.அவனே தமிழன்.
அன்புடன்,
மீ.க.
i join ur team
oru nalla name pu la erukkanum
valaratum ungal purachi ……….
Pls visit http://www.peyar.in
Lot of good tamil names are there
நன்றி, ஏழுமலை. அது நண்பர் உருவாக்கி வந்த தளம் தான். தற்போது இணைப்பு கொடுத்துள்ளேன்.
அருமை. வாழ்த்துகள்.
கார்த்திக் என்பது தமிழ் பெயரா?
அது தமிழ் கடவுள் முருகனின் பெயாராக இருந்தாலும், வடமொழி என்று என் நண்பன் கூறினான்.
please forward thamizhl girl baby name.
Hi,
I feel happy to see a lot of websites listing tamil names. But what I do not understand is that NONE of the websites who give pure tamil names list, provide meanings of the names. WHY?
Do you think all tamil people know the meaning of every tamil word?? Consider Menaka Gandhi’s Hindu Names book, she gives Names, origin, pronunciation, meanings with even some descriptions too.
Why tamil people are always incomplete?
I am searching for a short and sweet tamil name, but I always end up finding the meaning of it in google which I never find.
I think this is one big reason why tamilians do not choose tamil names as they can always find the meanings of north indian languages. If we provide the name list with meanings, a lot more attention from tamil people would be there.
Thanks,
Ravi
பொதுவாக தமிழ் பெயர்கள் பொருள் கொண்டவையாகவும், ஏதேனும் ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டவையாகவும் முன் வைக்கப்பட்டுள்ளதாக அறிந்திருக்கின்றேன் அந்த வகையில் எனது பெயரான சம்யுக்தா என்பதன் பொருளையும் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் பொருள் தெரிந்தவர்கள் எனக்கு தெரியப்படுத்துங்கள்
Hi All,
Sorry for typing in English. Very impressed by this post. Great 🙂
I too searching for a impressive Tamil name for my daughter.
SUPER @TOPER
Sorry for typing in English. Very impressed by this post. Great
TAMIL NAME FOR MY SON@daughter.
what’s the meaning …..of the name of suba or shuba.
மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டு அங்கு
எண்ணமெரன்று எண்ணயிருககும். எழை மனிசர்காள்
கண்ணுககினிய கருமுகில் வண்ணன் நாமமே
நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம்புகாள்
மிருதுளா பெயர் விளக்கம் என்ன
“மிருதுளா ” தமிழில் இருந்து வட மொழிக்கு சென்ற மெது என்ற வார்த்தையின் திரிபே, மென்மையானவள் என்று பொருள்
வியன்? நன்றாக உள்ளது இதன் பொருள் என்ன?
திவ்யா இந்த பெயருக்கு அர்தம் கூறுக.,
pls urgent Seekiram sollunga mean of divya illa theriyalaya
திவ்யா என்பது வடமொழிப் பெயர். தமிழ் அன்று. திவ்யா என்றால் இறைமையைச் சுட்டும். Divya is an Indian name derived from a sanskrit word. It means divine or divine brilliance and is used to signify a powerful divine force. https://en.wikipedia.org/wiki/Divya_%28name%29
தூய தமிழ் பெயர் தான். வியன் என்றால் வியப்புக்குரியவன், சிறப்பானவன், பெருமைக்குரியவன் என்றவாறு பொருள் வரும்.