கட்டற்ற பன்மொழி – தமிழ் – பன்மொழி அகரமுதலி ஒன்றை உருவாக்கும் முயற்சியாக 2004 முதல் தமிழ் விக்சனரி தளம் செயல்படுகிறது. டிசம்பர் 2008 நிலவரப்படி ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான சொற்களுக்கு பொருள் சேர்த்துள்ளோம்.
ஒரு சொல் பெயர்ச்சொல்லா வினைச்சொல்லா என்பது முதலிய குறிப்புகள், ஒரு சொல்லை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு எடுத்துக்காட்டுச் சொற்றொடர்கள், பலுக்கல் ஒலிக்கோப்புகள், பொருத்தமான படங்கள், அச்சொல்லுக்கான பிற மொழி விக்சனரி இணைப்புகள் ஆகியவை தரப்படுகின்றன.
நீங்கள் அறிய விரும்பும் சொல்லை Googleல் இருந்தே தேடலாம். எடுத்துக்காட்டாக, mosquito ஆங்கிலம் என்று தேடினால் கூகுளில் முதல் பக்கத்திலேயே விக்சனரிக்கான தொடுப்பு இருக்கும். தேடிய சொல் கிடைக்காவிட்டால், அதைச் சேர்க்குமாறு தளத்தில் தெரிவிக்கலாம்.
ஏற்கனவே உள்ள பக்கங்களில் திருத்தங்கள் செய்யலாம். புதிதாக சொற்களைச் சேர்க்கலாம். ஒரு சொல்லின் பொருள் குறித்த ஐயம், ஆலோசனை இருந்தால் கலந்துரையாடலாம். பல பங்களிப்பாளர்களும் தொடர்ந்து தளத்தைக் கவனித்து வருவதால் பிழையான பங்களிப்புகள் உடனடியாக சரி செய்யப்படுவது உறுதி. எவரும் அவர் விரும்பிய வண்ணம் கட்டுப்பாடின்றி பங்களித்துப் பயன்படுத்துவதே விக்சனரியின் சிறப்பு.
சொற்களுக்கான பொருளை நல்ல தமிழில் விளக்குவதால், தமிழில் கலந்துள்ள பிற மொழிச்சொற்களை இனங்காணலாம். கலைச்சொல்லாக்க முயற்சிகளுக்கான களமாகவும் விக்சனரி திகழும். தற்பொழுது ஆங்கிலம் – தமிழ் அகரமுதலியையே கவனிக்கிறோம் என்றாலும், பங்களிப்பாளர் திறன், அறிவைப் பொருத்து தமிழ் உள்ளிட்ட எம்மொழிச் சொல்லுக்கும் தமிழில் பொருள் தரலாம்.
இந்த நிரல்துண்டினை வெட்டி, உங்கள் தளத்தின் ஒரத்தில் இட்டு, விக்சனரி பற்றி விளம்ப வேண்டுகிறேன்.
Comments
16 responses to “விக்சனரி (பன்மொழி – தமிழ் இணைய அகரமுதலி)”
ரவிசங்கர்,
தகவலுக்கு மிக்க நன்றி.
//இவ்வனைத்து குறைகளையும் தீர்க்கும் வண்ணம், கட்டற்ற பன்மொழி – தமிழ் – பன்மொழி அகரமுதலி ஒன்றை உருவாக்கும் முயற்சியாக கடந்த ஈராண்டுகளாக தமிழ் விக்சனரி தளம் செயல்பட்டு வருகிறது.//
தமிழ் விக்சனரி அன்பர்களுக்கு என் வாந்த்துக்கள், நன்றிகள் மற்றும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த பதிவை தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி.
http://www.desipundit.com/2006/09/07/wiktionary/
அந்தத் தகவலுக்கு நன்றிகள். நேரம் கிடைக்கும் போது பங்களிப்புச் செய்வேன்.
தகவலுக்கு நன்றி…
வெற்றி, கனக்ஸ், மாஹிர் – உற்சாகமூட்டியதற்கு நன்றி. பதிவுக்கு இன்னும் வெளிச்சம் தேடித்தந்ததுக்கு டுபுக்குக்கும் ஒரு சிறப்பு நன்றி. இப்ப எல்லாம் தமிழ்மணத்துல கூட்டம் அதிகம் ஆயிடுச்சு..இந்த பதிவின் நன்னோக்கத்தை கருத்தில் கொண்டாவது ஒன்றிரண்டு சொற்கள் பின்னூட்டமும் நட்சத்திரக் குறியும் இட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால், கூடுதல் பயனர்கள் இப்பதிவை இனங்காண வசதியாய் இருக்கும்
எனது வலைப்பதிவில் விக்சனரி சின்னம் நிமிர்ந்து நிற்கின்றது!!!!
ரவி,
நானும் தொடுப்பு கொடுத்துவிட்டேன்.
நல்ல அறிமுகக் கட்டுரை. நிறைய நண்பர்களுக்கு தொடுப்பு அனுப்பியிருக்கிறேன்.
விக்கிசனரி கொஞ்சம் பழகியதும் அங்கே சந்திக்கிறேன் என்ன? 😉
தகவலுக்கு நன்றி
பாராட்டத்தக்க முயற்சி. எனது பக்கத்தில் விக்சனரியை இணைத்துவிட்டேன்.
word verification is not needed if comment moderation is enabled.
பதிவிற்கு நன்றி..
ரவி,
நானும் தமிழ் விக்சனரியை என் தளத்தில் இணைத்துவிட்டேன்.
Great Job. Keep it up.
ரவி, நல்ல கட்டுரை. இணைப்பு பரப்புரைக்கு நல்ல கருவி. பாராட்டுக்கள்.
நற்கீரன், பொடிச்சி, சந்திரவதனா, குறும்பன், anonymous, மயூரன் – உங்கள் வருகைக்கும் ஊக்க மொழிகளுக்கும் நன்றி. விக்சனரித் தொடுப்பை இணைத்துக் கொண்டவர்களுக்கும் என் நன்றிகள். இயன்றவரை இதை பரப்பினால் தமிழ் விக்கிபீடியாவுக்கு கிடைத்தது போல் கூடுதல் வெளிச்சம் இதற்கும் கிடைக்கும்.
ரவி அவர்களுக்கு
என் பதிவில் தமிழ் விக்சனரி இணைத்துள்ளேன்.
நன்றி.
நன்றி இளங்கோவன்.