வேர்ட்ப்ரெஸ் நீட்சிகள்

நான் பயன்படுத்தும் வேர்ட்ப்ரெஸ் நீட்சிகள் பட்டியல்

நான் பயன்படுத்தும் வேர்ட்ப்ரெஸ் நீட்சிகள்:

1.  Akismet – எரிதத் தடுப்புக்கு.

2.  Subscribe to Comments – வாசகர்கள் தங்கள் விருப்ப இடுகைகளின் மறுமொழிகளை மின்மடலில் பெற்றுக் கொள்ள.

3.  Automattic stats – WordPress.comல் கிடைப்பது போலே நம் தனித்தளத்தில் நிறுவப்பட்ட WordPressக்கும் அருமையான புள்ளிவிவரங்கள் பெற.

4.  All in one SEO pack, Google (XML) sitemaps generator – தேடுபொறிகளுக்கு உகந்ததாகத் தளத்தை மாற்ற.

5.  WordPress dashboard editor – கட்டுப்பாட்டகத்தில் உள்ள தேவையற்ற தகவல்களை நீக்க, புதிய வசதிகளைச் சேர்த்துக் கொள்ள.

6.  Exec-PHP – இடுகைப்பக்கங்களில் PHP கட்டளைகளை எழுத.

7.  Smart archives – தொகுப்புப் பக்கங்களை உருவாக்க.

8.  Simple Tags – குறிச்சொல் மேலாண்மை.

9.  Page links to – பக்கங்களை வேறு தளங்களுக்கு வழிமாற்ற.

10.  Search Everything

11.  Google Analytics for WordPress

12. Feedburner Feedsmith

11 thoughts on “வேர்ட்ப்ரெஸ் நீட்சிகள்”

 1. இடுகையை இப்ப இற்றைப்படுத்தி இருக்கேன், மயூரேசன்.

 2. அப்படியே நீங்க பயன்படுத்தும் ஃபையர்ஃபாக்ஸ் நீட்சிகள் பத்தியும் கொஞ்சம் சொல்லுங்களேன் ..

 3. மிக்க நன்றி ரவி. வாழ்க்கை எப்படி போய்க்கிட்டு இருக்கு. இன்னும் லெய்டன்ல தான் இருக்கீங்களா ? சமீபத்தில் படித்த பதிவுகளின் மூலம் தெரிஞ்சுக்கிட்டேன், தமிழ் வலைப்பதிவுலகில் மிக்க முக்கியமான ஆளாக நீங்கள் இருக்கீங்க. கலக்குங்க. மிக்க மகிழ்ச்சி.

 4. சந்தோஷ், போகப் போக பூமி விரிகிறதேன்னு போகுது வாழ்க்கை 🙂 லைடனில் தான் இருக்கிறேன்.

  //தமிழ் வலைப்பதிவுலகில் மிக்க முக்கியமான ஆளாக நீங்கள் இருக்கீங்க//

  அப்படி எல்லாம் இல்லீங்க…

 5. sticky?

  (Also in your home page, can you enable a way to get to your ‘Older Posts’ at the end of the display?)

 6. balaji – உங்களுக்கு stickyஆவா தெரியுது? நான் அப்படி எதுவும் செய்யலியே? என் வார்ப்புருவில் உள்ள கோளாறு காரணமா பக்கப்பட்டைல கூடுதல் பகுதிகள் சேர்க்க இயலலை. இப்போதைக்கு தொகுப்புகள் பக்கம் மூலமா என் பழைய இடுகைகளைப் பார்க்க வேண்டுகிறேன்.

 7. இந்தப்பதிவினை இப்போதிருக்கும் கோலத்திற்கேற்ப மீள்பதிவாக தரலாமே!!!

  1. நினைவூட்டியதற்கு நன்றி, subash. இடுகையை இற்றைப்படுத்தி இருக்கிறேன்.

Comments are closed.