தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுமம்

ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் அறிய, உருவாக்க ஒரு கலைச்சொல்லாக்கக் குழுமம் உருவாக்கி இருக்கிறோம்.

குழும முகவரி: http://groups.google.com/group/tamil_wiktionary

இக்குழுமத்தின் நோக்கம்: ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கலைச்சொற்களை அறிவது, தேவைப்பட்டால் மேம்படுத்துவது,  புதிய கலைச்சொற்களை உருவாக்குவது. 

இக்குழுமம் கட்டற்ற தமிழ் அகரமுதலியான விக்சனரிக்குத் துணையாகவும் இயங்குகிறது.  இக்குழுமத்தில் அலசி ஆராயப்பட்டு ஓரளவு கருத்தொத்ததாக வரும் சொற்கள் தமிழ் விக்சனரியில் பரிந்துரைகளாகச் சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம் இவை பொதுப் பயன்பாட்டு வர ஏதுவாகிறது.

இந்தக் குழுமம் மூலம் சொற்களை ஆக்குபவர்கள் – சொற்களைப் பயன்படுத்துபவர்கள் – சொற்களைத் தேடுபவர்களை ஒரே புள்ளியில் இணைத்து, உலகம் முழுமைக்குமான ஒரு தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுமமாக வளர்த்தெடுக்க விரும்புகிறோம்.

13 thoughts on “தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுமம்”

 1. எமது குழுமத்துக்கு மிக நல்ல அறிமுகம் ரவி.
  நன்றி.

  கலைச்சொல்லாக்கத்தின் தேவை உணர்ந்தவர்கள், கலைச்சொற்களை கேட்டு தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் இந்தக்குழுவில் இணைந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். என் பங்குக்கு நானும் அவர்களை வரவேற்கிறேன்.

 2. இரவி. தங்களின் இந்தப் பதிவைப் படித்துவிட்டு குழுமத்தில் நானும் சேர்ந்துவிட்டேன். மிக்க நன்றி.

 3. நான் இணைந்து வெகு நாட்களாகின்றன. ஆயினும் சில்லாக்கம் பரிந்துரை செய்யப்படும் முறை, அவை ஏற்றுக்கொள்ளப்பட்டத? இல்லையா? என்னும் இறுதி முடிவிகள் அறியக் கிடைக்கவில்லை. இக்குறையைக் களையவேண்டும். நடைமுறை விதிமுறைகள் வரையறுக்கப்படல்வேண்டும்.

 4. மயூரன் கூட சொல்லியிருந்தார்.
  நல்ல முயற்சி.சேர்ந்துவிடுகிறேன்.

 5. தமிழ் விக்சனரி குழுமத்துக்கு வாழ்த்துக்கள். நிகரான தமிழ்ச்சொற்கள் பலவற்றுக்கும்
  இங்கேயும் செல்லலாம்.

 6. மயூரன், குமரன், செல்லா, ஓகை, வடுவூர் குமார், சந்தோஷ், சேதுக்கரசி – உங்கள் வருகைக்கும் ஊக்க மொழிகளுக்கும் நன்றி.

  ஞானவெட்டியான் – மாதம் ஒரு முறை குழுவில் ஒத்த கருத்தில் அடையாளம் காணப்படும் சொற்கள் ஒரு சொற்பட்டியலாக வெளியிடப்படுகின்றன. இந்தக் குழுமம் இயங்கும் முறை விக்கிபீடியாவுக்கு வெளியில் உள்ளவர்களுக்கு தொடக்கத்தில் கொஞ்சம் புதிராகத் தான் இருக்கும். ஏனென்றால் இங்கு தலைவர், காலக்கெடு, இறுதி முடிவு கிடையாது. ஒத்த கருத்து, இணக்க முடிவு ஆகியவையே வழிகாட்டுகின்றன. குழுமத் தளத்தில் குழுமம் செயல்படும் முறை என்று ஒரு பக்கம் உள்ளது. தயவு செய்து அதைப் படித்து மேம்படுத்தல்கள் தேவை என்றால் சொல்லுங்கள். நன்றி

 7. இரவிசங்கர்,
  நல்ல முயற்சி. எனக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

  /*எந்தக் கலந்துரையாடல்களிலும் பங்கு கொள்ளாமல் வெறுமனே உரையாடல்களை கவனித்துக் கொண்டே கூட இருக்கலாம். */

  குழுமத்தில் இணைந்து நீங்கள் மேலே சொன்னதைச் செய்யவுள்ளேன்.
  மிக்க நன்றி.

  பணிவன்புடன்
  வெற்றி

 8. ரவி!
  நல்ல முயற்சி!!இதில் நானும் இணைகிறேன். தெரிந்ததைக் கூறுவேன்.கூடுதலானவரை இதைப் பயன்படுத்துபவனாகத் தான் ,இருப்பேன்.
  யோகன் பாரிஸ்

 9. நல்ல முயற்சி; வாழ்த்துகள்.

  ரிங் டோனுக்கு அழைப்போசை என்பதைவிட அழைப்பிசை பொருத்தமாக இருக்கும். பெரும்பாலும் அவை இசையாகவே இருக்கின்றன. விதிவிலக்காகச் சிலர் குழந்தையின் அழுகுரல், விருப்பமானவர்களின் குரல் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். அந்த வகையினர் மட்டும், அழைப்போசை அல்லது அழைப்பொலி என்பதைப் பயன்படுத்தலாம்.

 10. யோகன், வெற்றி – உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி.

  அண்ணாகண்ணன் – உங்களை போன்ற ஊடகக்காரர்களுடன் இணைந்து பங்காற்றுவது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. கலைச்சொல்லாக்கத்தில் நிகழும் நல்ல மாற்றங்களை நீங்கள் உடனுக்குடன் மக்களுக்குச் சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தமிழ் சிஃபியில் அண்மைய காலங்களில் தமிழ் கொஞ்சி விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

Comments are closed.