ஒலிப்பதிவு இடுவது எப்படி?

உங்கள் குரலை மட்டும் பதிய:

1. Audacity, LAME MP3 encoder ஆகிய இரு மென்பொருளைப் பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.
2. Audacity மென்பொருளைக் கொண்டு ஒலிப்பதியுங்கள். பதிந்த பின், file->export as-> MP3 சென்று உங்கள் பதிவை MP3 கோப்பாக மாற்றிக் கொள்ளுங்கள்.
3. ijigg.com சென்று ஒரு பயனர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உங்கள் MP3 கோப்பைப் பதிவேற்றுங்கள். அங்கு கிடைக்கும் embed codeஐ உங்கள் பதிவில் படியெடுத்து ஒட்டுங்கள்.

உங்கள் நண்பருடனான இணைய வழி உரையாடலைப் பதிய:

1. Skype பயன்படுத்தி உரையாடுங்கள்.
2 Powergramo பயன்படுத்தி அந்த உரையாடலைப் பதியலாம். பின்னர் அந்தக் கோப்பை audacity கொண்டு தொகுத்து, mp3ஆக மாற்றி, ijiggல் பதிவேற்றிக் கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் ஒலிப்பதிவு நுட்பம்!

8 thoughts on “ஒலிப்பதிவு இடுவது எப்படி?”

  1. என்ன தலீவா.. இப்புடி சப்பென முடிச்சிட்டீக.. நாமெல்லாம் அது பெரிய இது என்ற மாதிரி ஒரு பில்டப்ப கொடுத்து வைச்சிருக்கிறோம். இப்புடி உடைச்சுப்புட்டியளே..

  2. சயந்தன், எங்க இந்த இடுகையைப் படிச்சு நீங்க இப்படி கலங்காம போயிடூவீங்களோன்னு பயந்தேன் 😉

  3. Audacity 1.3 Beta -வை தரவிறக்கி பாட்டையும் பதிஞ்சாச்சு. ஆனா.. அதை எம்.பி3-ஆக மாற்ற முடியவில்லை. Audacityல் மாற்ற முயன்றால்..dll என்று என்னோ சொல்லுகிறது.. அப்படியும் ஓகே.. சொன்னால்.. “போடா”ன்னு திட்டுது. 🙁

    விபரமா சொல்லுங்க சாமீ!

  4. இடுகையில் குறிப்பிட்டுள்ள LAME MP3 encoder நிறுவிட்டீங்களா?

  5. பல பதிவர்களுக்கு இன்னும் தெரியாத, 
    தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் 
    மேலும் தொடரட்டும்.

Comments are closed.