தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து இணையத்தில் உள்ள பிற தமிழ் அகரமுதலிகளையும் விக்சனரியில் சேர்க்கும் முயற்சியில் இருக்கிறோம். இது குறித்து உதவுமாறு உத்தமம் மடற்குழுவில் கேட்டிருந்தோம். அதை ஒட்டி நிகழ்ந்த உரையாடலில் விக்சனரியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டி வந்ததால் இங்கு ஆவணப்படுத்தி வைக்கிறேன். (நீளம் கருதி சில வரிகளை விடுத்துத் தொகுத்திருக்கிறேன்):
Please be aware that these e-versions were produced using funds received for a specific project and under certain licensing conditions by the Consortium of American Universities involved in the DSAL project. US Dept of Education partly funded the project.
Hence I doubt very much if they will give out the content for inclusion/amalgamation in aggregated online dictionaries such as Wiktionary.
For scholastic research usage, people would like to have the original author source tagged and this includes online dictionaries. Most of the dictionaries work in a complementary way. Rarely two dictionaries reproduce verbatim the same meaning or commentary – one of the distinguishing features.
So efforts like Wiktionary are appreciated well by the lay public but IMHO they will not be used by research community. With the aversion, it is difficult to see active collaboration from these two diametrically opposite approaches.
I am stating this upfront because, as an academic, I do see the different and distinct roles being played initiatives like Wikipedia or Wiktionary vs-a-vs. authoritative compilations put together through the work of a team of linguistic scholars as with Oxford Dictionary for example. Tamil researchers will be happy to use and quote meanings from Madras Univ Tamil Lexicon for example vs-a-vs. from Wiktionary.
ரவி:
நீங்கள் குறிப்பிட்டுள்ள காரணங்களால், இது குறித்து ஒப்புதல் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தாலும், முறையாக எழுதிக் கேட்டு விடுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில், இது போன்ற திட்டத்துக்கு அவர்கள் உதவாவிட்டாலும் வேறு எந்தெந்த வகையில் எல்லாம் அவர்களால் உதவ முடியும் என்று தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
விக்சனரி திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்களது தளத்தை இன்னும் பயன்பாடு மிக்கதாக மாற்றுவது குறித்து ஓர் உரையாடலைத் துவக்க இயலலாம்.
எடுத்துக்காட்டுக்கு,
1. அவர்கள் தளம் தரவுத் தள வினவல் அடிப்படையில் இருக்கிறது. இதனால் தேடுபொறிகளில் இருந்து அவர்களது தளத்தைச் சென்றடைவது சிரமமாக இருக்கலாம். சில சமயம் அவர்களது தள சொற் பொருள்களை கூகுளில் கண்ட நினைவு. ஆனால், பல சமயம் இப்படி ஒரு தளம் இருப்பது அறிந்தோர் மட்டுமே பயனடைய முடிகிறது, இப்படி ஒரு தளம் இருப்பது அறியாதோர் பலர். நம்மிடம் உள்ள ஆர்வலர்கள் அவர்களுடன் இணைந்து தளத்தைத் தேடு பொறிகளுக்கு உகந்ததாக்கலாம்.
2. அவர்கள் தளத்துக்கான API வெளியிடச் சொல்லிக் கேட்கலாம். இதனால், அவர்கள் உரிமத்தை மீறாமலேயே அவர்கள் தளத் தரவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மொழிபெயர்ப்புச் செயலிகள், தரவிறக்கிக் கொள்ளத் தக்க அகரமுதலிச் செயலிகள் செய்யலாம்.
வலை 1.0 என்பது மேலிருந்து யாரோ சிலர் தகவலை ஒரு இணையத்தளத்தில் பதிந்து வைப்பது. அவர்களைத் தவிர யாராலும் அதை மாற்ற இயலாது. – தமிழ் இணையப் பல்கலை அகரமுதலிகள், DSAL அகரமுதலிகள் இந்த வகையைச் சேரும்.
வலை 2.0 என்பது ஒரு சேவையைப் பயன்படுத்துவோரே சேர்ந்து உள்ளடக்கத்தை உருவாக்குவது. விக்கிபீடியா, யூடியூப் போன்றவை இந்த வகைகளில் அடங்கும். இதன் பெரிய நன்மை என்ன என்றால்,
வலை 1. 0 தளங்களையே கூட மேம்படுத்த முடியும். எடுத்துக்காட்டுக்கு, தமிழ் இணையப் பல்கலை அகரமுதலியில் ஏகப்பட்ட பிழைகள் காணப்படுகின்றன. இதை யாருக்கு எடுத்துச் சொல்வது, எப்போது திருத்துவார்கள் என்று தெரியாது. ஆனால், அதையே விக்சனரிக்கு இடம்பெயர்க்கும் போது, நாமே அந்தத் திருத்தத்தைச் செய்ய இயல்கிறது. அதிகாரப்பூர்வமாக பதிப்பிக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக காலத்துக்கும் தவறான தகவல்களைப் பயன்படுத்துவதை விட இது மேல். இதன் இன்னொரு நன்மை இத்தளங்களை உடனுக்குடன் இற்றைப்படுத்தலாம். இதனால் இணையம் போன்று வேகமாக வளரும் துறைகளில் நாளும் உருவாகும் புதுச் சொற்களைத் தமிழில் சேர்க்கலாம்.
வலை 3. 0 என்பதில் ஒரு முக்கியக் கூறு, தளங்கள் தனித்தனித் தீவுகளாக இல்லாமல் ஒன்றுக்கு ஒன்று தரவுகளைப் பரிமாறிக் கொள்வதாகும். API உருவாக்கம் போன்றவை இதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
Madras lexicon, TVU அகரமுதலி போன்றவற்றை எல்லாம் ஏன் புத்தக வடிவில் இருந்து இணையத்துக்கு கொண்டு வருகிறோம்? வெவ்வேறு நாட்டில் உள்ளோரும் புத்தகம் வாங்கத் தேவை இன்றி நினைத்த மாத்திரத்தில் இவற்றை அணுக வேண்டும் என்று தானே? இதே சிந்தனையைச் சற்று நீட்டிப் பார்த்தால், ஏன் இணைய அணுக்கம் உள்ளோர் மட்டும் அவற்றைப் பெற இயலுமாறு இருக்க வேண்டும்? தரவுகளை அனைவரும் பயன்படுத்தக் கொடுத்தால் அவற்றைக் கொண்டு இணைய இணைப்பு தேவையற்ற கணினி அடிப்படைச் செயலிகளை நாமே செய்து கொள்ளலாமே? செல்பேசி, கையட்டக்க மொழிபெயர்ப்புக் கருவிகளிலும் இவற்றைப் பயன்படுத்தலாமே? இத்தரவுகளைக் கொண்டிருக்கும் தளங்கள் மோசமாக வடிவமைக்கப்பட்டதாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, தேடுபொறிகள் செல்ல இயலாத, flashல் இயங்கும் த.இ.ப இணையத்தளம். ஏன் ஒரு பயனர் இத்தகையை மோசமாக வடிவமைக்கப்பட்ட தளங்களுக்குக் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்?
இணையம் புலிப்பாய்ச்சலில் செல்கையில் பல அரசு, பல்கலைத் தளங்கள் வலை 1.0 அடிப்படைச் செயல்பாட்டைக் கூட ஒழுங்காகச் செய்வதில்லை. 🙁
சரி, தற்போதைக்கு DSAL தளத்தை விட்டு விடுவோம்.
தமிழ் மக்களின் வரிப்பணத்தில் உருவான த.இ.ப போன்றவற்றின் தரவுகளையாவது யாவரும் அணுகும் வகையில் தரவிறக்கிக் கொள்ளத்தக்கதாக மாற்றச் சொல்லிக் கேட்கலாம். ciil-classicaltamil.org தளத்திலும் பல முக்கியமான திட்டங்கள் செயல்படுவதாக அறிகிறேன். அவர்களும் பொதுப்பணத்தில் இயங்கும் யாரும் தங்கள் திட்ட முடிவுகளைத் தரும் போது அது அவர்கள் தளத்தோடு பிணைந்ததாக அல்லாமல் பரவலான பயன்பாட்டுக்கு உதவும் வகையில் தரவுகளை GPL உரிமத்தின் வெளியிடுமாறு நாம் வலியுறுத்தலாம். இது போன்ற விசயங்களில் உத்தமம் முன்முயற்சி எடுப்பது வரவேற்கத்தக்கதாக இருக்கும்.
ஒரு நல்ல அரசின் கடமை ஊர் நடுவில் பெரிய குளம் வெட்டி அதில் தூய்மையான நீரைத் தேக்கித் தருவதாக இருக்காது. வீட்டுக்கு வீடு தண்ணீர் கிடைக்குமாறும் அவை அனைத்தும் தூய நீராக இருக்குமாறு உறுதிப்படுத்துமாறும் இருக்கும். அது போலவே தகவல் ஆதாரங்களை ஒரே இடத்தில் கட்டி வைக்காமல் இயன்ற வரையிலும் அவை பரவலான பயன்பாட்டுக்கு வருவது போல் செய்ய வேண்டும்.
இனி, DSAL தளத்துக்கு வருவோம். அதன் உரிமத்தை http://creativecommons.org/licenses/by-nc-nd/2.0/ முகவரியில் காண இயல்கிறது. அதன் எல்லா கட்டுப்பாடுகளையும் விக்சனரி தளம் நிறைவு செய்கிறது. No Derivative works என்பது கொஞ்சம் உதைக்கிறது. இருந்தாலும் நீங்கள் சொல்வது போல் amalgamation என்று இல்லாமல், இத்தளத் தரவுகளை ஒரு உசாத்துணையாகவே பயன்படுத்தப் போகிறோம். இன்னும் பல ஆதாரங்களில் இருந்து தகவல்களைப் பெற்றாலும் அவற்றில் தேவையான திருத்தங்களைச் செய்து இத்தரவுகளை உசாத்துணையாகத் தெரிவிப்போமே ஒழிய உள்ளடக்கத்துக்கு இத்தளங்களை பொறுப்பாக்க மாட்டோம். ஒவ்வொரு சொல் பக்கத்தில் இருந்தும் தொடர்புடைய DSAL சொல் பக்கத்துக்கு தொடுப்புகள் தருவோம். இவற்றை தகவலை உறுதிப்படுத்தும் நோக்கில் பயனர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
DSAL திட்டம் அமெரிக்க நிதியில் சில உரிமங்களுக்கு உட்பட்டு செய்யப்பட்டு இருந்தாலும் எந்த ஒரு நாட்டின் பொதுப்பணத்தில் செய்யப்பட்ட வேலைத்திட்டமும் பரவலான பயனர்களை இலகுவாக இலவசமாகச் சென்றடையச் செய்வது பல்கலைக்கழகங்களின் தார்மீகக் கடமையாகும். முறையாக இவற்றை எடுத்துச் சொல்லி அனுமதி கேட்டால் அவர்கள் இசைவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. விக்சனரியுடன் இணைந்து செயல்படுவதில் அவர்களுக்குச் சிரமம் இருந்தாலும் அவர்களுக்கு உடன்பாடான வேறு திட்டங்களை வகுக்கலாம். எங்களது நோக்கம் விக்சனரியை வளர்ப்பதல்ல. ஏற்கனவே இணையத்தில் இருக்கும் உள்ளடக்கங்களை எப்படி இன்னும் இலகுவாக கூடுதல் மக்களை அடையச்செய்யலாம் என்பதே.
அப்படியே அவர்களோ யாருமோ இசைவு தராவிட்டாலும் கூட, இணையத்தின் இயங்கு தன்மை குறித்து சில விசயங்களை நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. அனுமதி பெற்று இவ்விசயங்களைச் செய்வது முறையான, நல்லெண்ண அடிப்படையில் செய்ய வேண்டும் என்பதற்காகவே தவிர, எந்த ஒரு தளத்தின் தரவுகளைப் பெறுவதற்கும் ஏதாவது ஒரு குறுக்குவழி இருக்கத் தான் செய்கிறது. என்ன, கொஞ்சம் காதைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலையாக இருக்குமே தவிர இயலாததாக இருக்காது.
DSAL தெலுங்கு அகரமுதலிகளின் தரவுகளை ஏற்கனவே தெலுங்கு விக்சனரியில் பயன்படுத்துக்கிறார்கள். அதற்கு முறையான அனுமதி பெற்றார்களா என்று தெரியவில்லை. த.இ.ப தரவுகளைப் பெயர்ப்பதற்கும் அனுமதி ஏதும் தேவைப்படவில்லை. இணையமாக்கலுக்கு பல்வேறு உரிமங்களின் கீழ் அத்தளங்கள் செயல்பட்டிருந்தாலும், அத்தளங்கள் கொண்டிருக்கும் தரவுகள் பெரும்பாலும் பழமையானதும் பொது மக்கள் பயன்பாட்டுக்காக காப்புரிமை இன்றி கிடைப்பதுமாகவே இருக்கிறது. எனவே, இவற்றின் இடம்பெயர்ப்பை எந்த அளவுக்குச் சட்டப்பூர்வமாகத் தவறாக இருக்கும் என்று தெரியவில்லை.
மற்றபடி, கலைச்சொல்லாக்கம், கல்வித் துறை எதிர் விக்கி இயக்கங்கள் குறித்து சில கருத்துகள்:
விக்சனரியை விட சென்னைப் பல்கலை அகரமுதலி, தமிழ் இணையப் பல்கலை அகரமுதலிக்கே கூடுதல் மதிப்பு கிடைக்கும் என்பதை அறிவோம். நாங்களே கூட இந்த அகரமுதலிகளைத் தான் முதன்மைத் தகவல் ஆதாரமாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், தமிழ் இணையப் பல்கலை அகரமுதலி போன்றவற்றில் தவறான தமிழ்ச் சொற்கள் இருந்தால் என்ன செய்வது? அப்படியே பயன்படுத்த வேண்டியது தானா? மாற்றி இற்றைப்படுத்துவதற்கான வழி என்ன?
இது போன்ற முறையான நிறுவனப்படுத்தப்பட்ட தகவல் ஆதாரங்கள் எல்லாம் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் அணுக இயலாதவையாகவுவம் மிக மிக மெதுவாகவும் செயல்படுவனவாகவும் உள்ளன.
இந்த மாதிரி சூழல்களில் விக்சனரி போன்ற தகவல் ஆதாரங்கள் ஏற்கனவே உள்ள தகவல் ஆதாரங்களை மேம்படுத்திப் பயன்படுத்த உதவும்.
தமிழ் இணையப் பல்கலை அகரமுதலி என்று எழுதப்பட்டு எப்போது கடைசியாக இற்றைப்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை. DSAL அகரமுதலிகளிலோ பழங்காலத் தமிழ்ச் சொற்கள் தான் காணக் கிடைக்கின்றன.
நேற்று, அதற்கு முந்தின நாள் வெளியான நுட்பங்கள் குறித்து நாம் தமிழில் உரையாடுவதற்கான சொற்களை எந்த அகரமுதலி கொண்டிருக்கிறது? நிறுவனப்படுத்தப்பட்ட தர உறுதி நிறுவனங்கள் ஆணையங்கள் போட்டு இவற்றுக்கான சொற்களை உருவாக்க எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? அது வரை தகுந்த தமிழ்ச் சொற்களை நாம் உருவாக்காமல் காத்திருக்க இயலுமா? அதற்குள் அந்த நுட்பங்களே காலாவதியாகிப் போய் விடும். இந்தச் சூழல்களில் விக்சனரி போன்ற தளங்கள் உடனுக்குடன் இவை குறித்து உரையாடவும் தகுந்த சொற்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் உதவும்.
layman Vs academic குறித்து:
இதில் layman Vs academic என்ற பார்வையை விடுத்து பயனர் அடிப்படை பார்வையைக் கொண்டு வர வேண்டும். பல புலமைத் துறைகளில் உயர் கல்வி கற்றோர் மட்டுமே உழல்வதால் அது குறித்த கலைச்சொற்களை உருவாக்குகிறார்கள். இதில் அவர்கள் கல்வி கற்றதால் மட்டுமே அச்சொற்களை உருவாக்கத் தகுதி படைத்தவர்கள் என்பதை விடுத்து, அச்சொற்களைப் பயன்படுத்துவதற்கான உடனடித் தேவை அவர்களுக்கு இருக்கிறது என்ற அடிப்படையிலேயே அவர்கள் அதை உருவாக்குகிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆங்கிலத்திலும் எல்லா மொழியிலும் இது போல் பல புதுச் சொற்களை உருவாக்குகிறார்கள். ஆனால், அவர்கள் ஆங்கில மொழியியல் அறிஞர்களைக் கூட்டி கலந்தாய்வு செய்து இச்சொற்களை இறுதி செய்கிறார்களா தெரியவில்லை. பெரும்பாலும் முதலில் ஒரு கருத்தை முன்வைப்பவர் ஒரு jargonஐ முன்வைக்க நாளடைவில் அத்துறைக்கான terminology ஆக மாறுகிறது. எங்களை விட அனுபவத்திலும் கல்வித்துறையிலும் அனுபவம் வாய்ந்த அறிவியல் துறைகளில் ஆங்கிலத்தில் கலைச்சொற்கள் உருவாக்கப்படும் முறை குறித்து தங்கள் கருத்துக்களைப் பதிந்தால் உதவும்.
நான் சொல்ல வருவது என்னவென்றால், ஆங்கிலத்தில் உருவாகும் எல்லா சொற்களுக்கும் ஒரு ஆங்கில மொழியில் அறிஞர் குழாமை வைத்து பிற அறிவியல் அறிஞர்கள் அவர்களிடம் ஒப்புதல் பெறுவதில்லை. தங்கள் துறைக்குத் தேவையானதைத் தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். இச்சொற்களை உருவாக்க அம்மொழி குறித்த அவர்களுடைய அடிப்படை அறிவு போதுமானதாக இருக்கிறது. பல அடிப்படை அறிவியல் சொற்களும் ஆங்கிலத்தில் ஏற்கனவே இருப்பதால் புதுச் சொற்களை ஆக்குவதும் இலகுவாக இருக்கிறது. தமிழில் அடிப்படை அறிவியல் சொற்கள் குறைவாகவே புழக்கத்தில் இருப்பதால் ஆங்கில வழிய உயர் கல்வி பெற்று வருவோர்க்கு புதிய சொற்களை உருவாக்குவோர்க்கு தமிழ் அறிஞர்களின் உதவி தேவைப்படுகிறது. இல்லாவிடில், தமிழறிஞர் உதவியின்றி பல நல்ல சொற்களை இயற்றுவது இயல்பான ஒன்றாக இருந்திருக்கும்.
தமிழறிஞர்கள் மட்டும் உருவாக்கும் சொற்கள் அதன் பயன்பாட்டுச் சூழலை உணராமல் போகலாம். தமிழறிவு குறைந்த பயனர்கள் உருவாக்கும் சொற்கள் தமிழ்த் திறம் குறைந்த சொற்களை உருவாக்கலாம். தமிழ்ச் சூழலில் இந்தக் காரணத்தை ஒட்டியே தமிழறிஞர்களும் பயனர்களும் இணைந்து செயல்பட வேண்டி இருக்கிறது. அதனால், இந்தச் செயல்பாடுகளில் திறந்த அணுகுமுறையையும் வேகத்தையும் கொண்டு வருவதற்கான வழிவகைகளை ஆய வேண்டும்.
நான் உணரும் பெரும் குறை என்ன என்றால், கலைச்சொல்லாக்கத்தில் அறிவும் அனுபவமும் உள்ள மூத்த தலைமுறையினர் பலர் இது போன்ற முயற்சிகளில் இறங்கி தமிழில் எழுதும் ஆர்வமுடைய இளைஞர்களுடன் பங்களிப்பதில்லை. தங்களுக்கு உடன்பாடில்லாத முயற்சிகளில் ஈடுபட மூத்தவர்களை வற்புறுத்த இயலாது என்றாலும், இது போன்ற முயற்சிகளைப் புறக்கணிப்பதால் அவர்கள் எந்த வகையிலும் இவற்றை வலுவிலக்கச் செய்வதில்லை. மாறாக, அவர்கள் இணைந்து பங்களித்து சரியாகச் செதுக்கியிருக்ககூடிய சில வாய்ப்புகளை அறிந்தே விட்டு விடுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.
இந்தச் சூழலில் தமிழ் ஆர்வம் உடையோர், அறிவுடையோர், தமிழ்ச் சொற்கள் தேவைப்படும் பிற துறையினர் எந்தத் தடையும் இல்லாமல் இலகுவாக உரையாடும் ஒரு களத்தை விக்சனரி போன்ற முயற்சிகள் உருவாக்கித் தருகின்றன. இன்னொரு முக்கிய விசயம், முறைப்படுத்தப்பட்ட அகரமுதலி முயற்சிகள் வெறும் சொற்களை மட்டும் உருவாக்குகின்றன. ஒரு சொல் பயன்படும் எல்லா இடங்கள், அவற்றுக்கான எடுத்துக்காட்டுக் கட்டுரைகள், சொற்றொடர்கள் அவற்றின் பொருத்தங்களை அறிய வாய்ப்பு இல்லை. ஆனால், விக்சனரியில் கேள்வி எழுப்பப் படும் பல சொற்கள் ஏதோ ஒரு இடத்தில் அச்சொல்லின் தேவை உணர்ந்து கேட்கப்படுபவை. எனவே, அதன் பயன்பாட்டுப் பொருத்தமும் உடனடிப் பயன்பாடும் புழக்கமும் உறுதிப்படுத்தப்படுகிறது.
கற்றறிந்த தமிழறிஞர்களால் மட்டும் தான் சிறந்த சொற்களை உருவாக்க முடியும் என்று நான் நம்பவில்லை. சில சமயம் பாமரர், பள்ளி மாணவர்கள் கூட அருமையான சொற்களை உருவாக்குவதைக் கண்டிருக்கிறேன். ஏனெனில் அவர்கள் மொழி, இலக்கணம், புலமை போன்ற தளைகளில் கட்டுப்படுவதில்லை. எனவே, பயன்படுத்த இலகுவான சொற்களை அவர்களால் உருவாக்க இயலும்.
ஒரு மொழியின் சொற்கள் உருவாக்கத்தில் இரு வித அணுகுமுறைகள் இருக்கலாம். மேலிருந்து கீழ். கீழிருந்து மேல். அறிஞர்கள் கூடி விவாதித்துப் புதுச் சொற்களை அகரமுதலிகளில் இட்டுப் புழக்கத்துக்கு விடுவது மேலிருந்து கீழ். பாமர மக்கள் அன்றாடம் காணும் விசயங்களுக்கான சொற்களை உருவாக்கிப் புழக்கத்தில் விட்டு கீழிருந்து மேலாக அகரமுதலிகள் புகும் சொற்கள் கீழிருந்து மேல். இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.
இன்று பேச்சுத் தமிழில் எத்தனை இலட்சம் சொற்கள் இருக்கின்றன? இவற்றில் எத்தனை அறிஞர் குழாம் உருவாக்கிப் புழக்கத்தில் இட்டவை? ஒரு மொழியின் பரிணாம வளர்ச்சியில் அதைப் பேசும் மக்களே தேவையான சொற்களை உருவாக்குகிறார்கள் என்று நினைக்கிறேன். வட்டாரத்துக்கு வட்டாரம் வேறுபடும் சொற்கள், பொருள்களும் இவற்றைக் குறிக்கலாம். ஒரு பொருளுக்குப் பல சொற்கள் வந்து காலப்போக்கில் சில சொற்கள் நிலைக்கின்றன. அந்த வகையில் பல்வேறு குழுமங்களில் உருவாக்கப்படும் கலைச்சொற்களும் சில வகைகளில் நல்லது தான். ஒரு சொல்லை மூட்டை கட்டி முடிச்சுப் போட்டு வைக்காமல் அது குறித்த பல்வேறு சிந்தனைகளை, நோக்குகளை ஊக்குவிக்கிறது. நாளடைவில் ஏதேனும் ஒரு சொல் நிலைக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம்.
வலைப்பதிவு, செய்தியோடை போன்ற சொற்களை எல்லாம் ஏதும் அறிஞர் குழாம் உருவாக்கியதா தெரியவில்லை. இது போல் இன்னும் பல நல்ல தமிழ்ச் சொற்கள் தமிழ் இணையத்தில் புழங்குகின்றன. இணையம் குறித்த சிந்தனையும் செயற்பாடும் தமிழில் அமைந்ததால் அது குறித்த தேவையான சொற்கள் உடனுக்குடன் அதைப் பயன்படுத்துபவர்களாலேயே உருவாக்கப்படுகிறது. அது சரியா தவறா என்பது இரண்டாம் கட்டப் பிரச்சினை தான். சொல்லே இல்லாமல் இருப்பது தான் முதற்கட்டப் பிரச்சினை. இதற்கான சொற்களை யாரும் உருவாக்கித் தரப்படுத்துவார்கள் என்று காத்திருக்க முடியாது. இணையம் குறித்த சிந்தனைகள் தமிழில் எழுந்தது போல் இணையம் தந்த வாய்ப்பால் இன்று பலர் பல துறைகள் குறித்துத் தமிழில் எழுதத் தலைப்படுகிறார்கள். அப்படி எழுதும் போது தேவையான சொற்களை அவர்களே உருவாக்கத் தொடங்குவார்கள்.
அகரமுதலிகளில் இருந்து புழக்கத்துக்கு வந்த சொற்களைக் காட்டிலும் புழக்கத்தில் இருந்து அகரமுதலிகளுக்குப் புகும் சொற்கள் நிறைய என்று நினைக்கிறேன். நான் எங்கோ படித்த வரைவிலக்கணத்தின் படி, ஒரு அகரமுதலியின் பணியே கூட புழக்கத்தில் இருக்கும் சொற்களை ஆவணப்படுத்துவது தானே தவிர புதிய சொற்களை உருவாக்குவது அல்ல. அந்த வகையில் விக்சனரி போன்ற முயற்சிகள் அன்றாடம் வலையில் உருவாகும் புதுச் சொற்களை ஆவணப்படுத்த நல்ல வாய்ப்பு. அதிலும் மரபார்ந்த அகரமுதலிகளுக்கு உள்ள கட்டுப்பாடுகள் இதில் இல்லை என்பதால் பேச்சு வழக்கில் உள்ள கொச்சைச் சொற்கள் உட்பட நேற்று வந்த கலைச்சொற்களையும் ஆவணப்படுத்தி வைக்க முடியும். ஒரு சொல் சரியா தவறா என்று முடிவு செய்யும் முன் அச்சொல்லின் பொருள் அறிவது முக்கியமாக இருக்கிறது.
தஞ்சை பல்கலை கலைக்களஞ்சியங்கள் இருக்கின்றன. மணவை முஸ்தபா உருவாக்கிய பல கலைச்சொல் அகரமுதலிகள் இருக்கின்றன. ஆனால், இவை எல்லாம் எங்கு இருக்கின்றன? மக்களுக்கு அணுகத்தக்கதாக இருக்கின்றதா? இலவசமாக கிடைக்கின்றதா என்றால் இல்லை. இலவசமாகவும் உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் உடனடியாக அணுகத்தக்கதாகவும் ஆக்காத வரை இந்தத் தகவல் ஆதாரங்களால் என்ன பயன்? இத்தகவல் ஆதராங்கள் இணையத்துக்கு வரும் வரையில் அவ்விடைவெளியை இட்டு நிரப்பவும் அவை இணையத்துக்கு வந்த பிறகும் உள்வாங்கி அவற்றை மேம்படுத்தவும் விக்சனரி போன்ற முயற்சிகள் உதவும்.
விக்கிப்பீடியா நிறுவனர்களே கூட அதை ஆய்வுப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தச் சொல்லிப் பரிந்துரைப்பதில்லை. எங்கள் கவலையும் ஆய்வாளர்களைக் குறித்து அல்ல 🙂 பொது மக்களைக் குறித்துத் தான். ஆய்வாளர்களுக்குத் தேவையான ஆதாரங்களை ஏதோ ஒரு வகையில் பெற்றுக் கொள்கிறார்கள்.
Encyclopedia Britannica , Oxford அகரமுதிலகள் எல்லாம் தரம் உயர்ந்தவையாக இருக்கலாம். ஆனால், அவை ஒருக்காலும் இலவசமாக கிடைக்காது. கொஞ்சம் இலவசமாகக் கிடைப்பதும் தமிழில் இல்லை. அதுவும் நேற்று நடந்த நிகழ்வுகள், சொற்களை உள்வாங்கி ஆவணப்படுத்த எந்தத் தளமும் இல்லை.
கு. கல்யாணசுந்தரம்:
1. I agree with you that there is an evolution in the way information is placed on the net and also how various information channels interact with each other (web1, web2 and web3)
Counter-current to this evolution is the affliction of the aged to stick to die-hard practices and reluctance to move on with the transition. There are still many who do not use computers at all,
some happy with level 1 of information interchange while others are already making pioneering efforts at level 2. I must admit that I do have high admiration for all the efforts that
go to make up Wikipedia, Wiktionary and so on. Govt. institutions work largely at web 1 level and it may take a while before they are ready for 2.
2. On the errors in the glossaries of Tamil virtual Univ.
IMHO, when people do pick up errors or inconsistencies of the type you refer to, they should be conveyed to the concerned people. This way corrections can be made at the source itself.
Making a derivative work with the corrections, leaving the source still intact with errors, IMHO, is not the right approach.
3. On the search (and not browse) version of e-dictionaries at DSAL
I do not think that for voluminous works, it is practical to put up thousands of pages (though Wikipedia tries this in a brute force way) for browsing the content, particularly for works like dictionaries
or glossary collections. No one ever wants to browse through thousands of pages to find the information they need. Even the browse mode depends on index tables. Search is the way to go.
I do agree that Search engines do not index the content of sites where the whole content is not in public access. Majority of large size databases of Universities and professional societies are often with restricted access. Center for Research Libraries CRL for example is a huge effort of a consortium of American Universities and colleges that provides access to a wide variety of databases, but access restricted only to members of the member institutions of CRL. DSAL is part of this CRL group.
Nearly all professional journals have e-versions now online and they are accessible in the Net only through subscriptions.I do not think in the immediate future, all these major databases
and even professional journals are going to modify their information access/delivery mode so that search engines can index the content. What is the point of search engines indexing the content of a site which is not in public access?
In cases where a given e-database generated through public funds finds itself in such restrcited setups, arrangements can be made to host mirror sites with public access. I discussed this
with people in India who work closely with DSAL and they are receptive to this.
4. On the lay vs. academic
I would like to emphasize that at no time I try to minimize or undermine the importance and utility of public support efforts like Wikipedia or Wiktionary. All that I am saying is that efforts like
Wikipedia run in parallel to academic efforts serving totally different audience. Only in this context, it is a vicious thinking to expect parallel lines to meet sometime somewhere in the
near future 😉
As long as there is mutual trust, respect for the other and dialogue exist between these diverse efforts, each can benefit certainly from the other
(இந்த மறுமொழிக்கு அடுத்து உரையாடல் நிறைவுற்றது)