Tag: தமிழ் இணையம்
-
தமிழ் இணைய அறிமுகப் பட்டறை: தன்னார்வலர்கள் தேவை
—
சூன் 23-27, 2010 நடக்கும் உலகத் தமிழ் இணைய மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ்க் கணினி, இணைய நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெறுகிறது. இதில் தமிழ் இணையம் குறித்த அறிமுகம், பயிற்சி அளிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி, தமிழ் இணைய அறிமுகம், தமிழில் இணைய அறிமுகம், வலைப்பதிவுகள், விக்கிப்பீடியா, கட்டற்ற மென்பொருள் இயக்கம் போன்ற அடிப்படைக் கருக்களில் பயிற்சி அளிக்கலாம். தமிழ் இணையத்தில் பால் ஆர்வமுள்ள நண்பர்களாக இந்த நிகழ்ச்சியைக் கூடிச் செய்து கலைவோம்.…
-
தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களுக்கு பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்?
—
in இணையம்எட்டு கோடித் தமிழர் இருக்கிற போது ஏன் இந்த ஒற்றைப் படை நிலை? முதலில் ஒன்றை அறிவோம். இந்தக் குறைவான எண்ணிக்கை தமிழ் இணையத் திட்டங்களுக்கு மட்டும் உள்ள நிலை இல்லை. மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால், சமூகத்தில் நிகழ்வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் பல கூட்டு முயற்சி, தன்னார்வல, இலாபநோக்கற்ற திட்டங்களுக்கும் கூடப் பங்களிப்பு குறைவே. ஆக, நிகழ் உலகத்தில் பங்களிப்புக் குறைவுக்கு காரணமாக இருக்கும் பணமின்மை, நேரமின்மை, மனமின்மை, திறனின்மை போன்ற அத்தனைக் காரணங்களும் இணையத்துக்கும் பொருந்தும்.
-
ரவி மன்றம்
—
in இணையம்தமிழ் இணையத்தில் மட்டுமல்லாது பொதுவாகவே மன்றங்கள் பக்கம் நான் எட்டிப் பார்ப்பது இல்லை. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லாத மன்ற இடைமுகப்புகள். வேர்ட்பிரெஸ் நிறுவனத்தில் இருந்து வரும் bbPress மென்பொருள் மன்றங்களில் உரையாடுவதை எளிதாக்குகிறது. இதன் பயன்கள்: * எளிமையான இடைமுகப்பு * எளிமையான பயனர் கணக்கு உருவாக்கம். 10 நொடிகள் கூட ஆகாது. * உரையாடல் தலைப்புகளைக் குறிச்சொற்கள் கொண்டு தொகுக்கலாம். * ஒவ்வொரு உரையாடல் தலைப்புக்கும் தனித்தனி ஓடை வசதி.…
-
விக்சனரியின் முக்கியத்துவம்
—
in தமிழ்தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து இணையத்தில் உள்ள பிற தமிழ் அகரமுதலிகளையும் விக்சனரியில் சேர்க்கும் முயற்சியில் இருக்கிறோம். இது குறித்து உதவுமாறு உத்தமம் மடற்குழுவில் கேட்டிருந்தோம். அதை ஒட்டி நிகழ்ந்த உரையாடலில் விக்சனரியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டி வந்ததால் இங்கு ஆவணப்படுத்தி வைக்கிறேன்.
-
தமிழ் விக்கிப்பீடியர்கள்
—
in இணையம்2005 மார்ச் முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களிக்கத் தொடங்கினேன். அதற்குப் பிறகு தமிழ் இணையத்தில் பல இடங்களில் சுற்றி வந்துவிட்டாலும், இன்று வரை 100% மன நிறைவு அளிக்கும் ஒரே திட்டம் தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் மட்டும் தான். தணியாத தமிழார்வத்துக்கு களமாக இருப்பது ஒரு காரணம். இன்னொரு முக்கியக் காரணம், தன்னலமற்ற, ஒத்த கருத்துடைய, தோழமை உணர்வு மிகுந்த, பண்பில் சிறந்த, நேர்மையான நண்பர்களுடன் பணியாற்றுவதே தனி இன்பம் தான். இவர்களில் சிலர் தமிழ்…
-
தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்துவது எப்படி?
—
in தமிழ்தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்த தமிழ் வலைப்பதிவுகளில் இருந்தோ அவற்றைத் திரட்டிக் காட்டும் தளங்களில் இருந்தோ தான் தொடங்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லையே? உண்மையில், தமிழ் இணையத்தில் தமிழ் வலைப்பதிவுகள், அவற்றின் வாசகர்கள் ஒரு சிறு பகுதி தான். வலைப்பதிவுகளைப் பற்றி அறியாமல் இயங்குவோரும், அறிந்தும் ஒன்றாமல் இயங்குவோரும் பலர். எனவே, தமிழ் வலைப்பதிவுகளின் நிலையை எண்ணி, தமிழ் இணையம் குறித்த அறிமுகத்தைத் தள்ளிப் போட வேண்டாம்.
-
தமிழ்நாட்டுப் பள்ளிப் பாடநூல்கள் இணையத்தில் கிடைக்கின்றன
—
in தமிழ்ஏப்ரல் 2007ல் இணையத்தமிழ் உள்ளடக்க உருவாக்கத்துக்கு தமிழக அரசு செய்ய வேண்டியது குறித்து எழுதி இருந்தேன். அதை யாரும் பார்த்தார்களா தெரியாது 🙂 நேற்று கூட இதன் தேவை குறித்து தமிழ் விக்கிபீடியாவில் உரையாடினோம். நேற்று இரவே, தமிழ்நாட்டுப் பள்ளிப் பாடத்திட்ட நூல்கள் pdf வடிவில் இணையத்தில் கிடைக்கத் தொடங்கி இருப்பதை கண்டு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. http://www.textbooksonline.tn.nic.in/ என்ற முகவரியில் 1 முதல் 12 வகுப்பு வரைக்குமான பாடநூல்கள் தமிழ், ஆங்கிலம் இரு வழியிலும்…
-
சென்னை வலைப்பதிவர் பட்டறை திட்டமிடப்பட்டது எப்படி?
—
in வலைப்பதிவு989 மடல்கள். இரண்டு மாத உழைப்பு, திட்டமிடல். நூற்றுக்கணக்கில் தொலைபேசி உரையாடல்கள். ஒவ்வொரு வாரமும் பட்டறை குறித்த திட்டமிடலுக்கான நேரடி சந்திப்புகள். அரங்கத்தை இறுதி செய்வது, குறுந்தகடு, நூல் அச்சிடல் வேலை என்று இவற்றுக்காக குறைந்தது 15 மனித உழைப்பு நாட்களாவது செலவு இடப்பட்டிருக்கும். இவற்றின் விளைவாகத் தான் பதிவர் பட்டறை சாத்தியமானது.
-
தமிழ்க் கணிமை ஆர்வலர்கள்
—
in தமிழ்நான் அறிந்த சில இணையத் தமிழ் நுட்ப ஆர்வலர்கள் பெயரைப் பதிந்து வைக்கிறேன். (எந்த வரிசையிலும் இல்லை) 1. முகுந்த் – தமிழா! அமைப்பின் முனைப்பான பங்களிப்பாளர்களில் ஒருவர். இவர் உருவாக்கிய எ-கலப்பை பல தமிழர்கள் கணினியில் எளிதாகத் தமிழ் எழுத உதவுகிறது. 2. மாகிர் – தமிழூற்று – தமிழர்களின் அறிவுச் சுரங்கம் என்ற பெயரில் தமிழிணையம் சார்ந்து பல நுட்பப் பணிகள் ஆற்றி வருகிறார். தமிழ் இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், விக்கி இயக்கங்கள் தொடர்பில் பயனுள்ள…