வேர்ட்பிரெஸ் நிறுவுவது, இற்றைப்படுத்துவது எப்படி?

உங்கள் வேர்ட்பிரஸ் நிறுவலை இற்றைப்படுத்துவது எப்படி?

WordPress 2.7:

Tools–>Upgrade

WordPress 2.7க்கு முந்திய பதிப்புகள்:

எச்சரிக்கை: இது சோம்பேறிகளுக்கான குறுக்கு வழி 😉 . என் எல்லா பதிவுகளையும் இப்படியே இற்றைப்படுத்தினேன். ஒரு பிரச்சினையுமில்லை. தயங்குவோர் வேர்ட்பிரெஸ் வழிகாட்டியில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றலாம்.

1.  http://wordpress.org/latest.zip இல் இருந்து வேர்ட்பிரெஸ் மென்பொருளைத் தரவிறக்கி wordpress அடைவைப் பிரித்தெடுங்கள்.

2. உங்கள் கணினியில் உள்ள wordpress அடைவுக்குள் உள்ள wp-contents அடைவை நீக்கி விடுங்கள். இது மிகவும் முக்கியம். கவனிக்க – நீங்கள் தரவிறக்கிக் கணினியில் வைத்திருக்கும் அடைவில் உள்ள wp-contentsஐ நீக்க வேண்டும். வழங்கியில் உள்ள wp-contentsஐ அல்ல.

3.  இப்போது wordpress அடைவுக்குள் மீதம் உள்ள கோப்புகள், அடைவுகளை மொத்தமாகத் தெரிவு செய்து  Filezilla கொண்டு உங்கள் வழங்கியில் வலைப்பதிவு வைத்திருக்கும் அடைவுக்குள் பதிவேற்றுங்கள். கவனிக்க – wordpress அடைவுக்குள் இருக்கும் கோப்புகளை select all செய்து வழங்கியுள் உள்ள அடைவுக்குள் போகுமாறு பதிவேற்றுங்கள். மொத்த அடைவையே அப்படியே பதிவேற்றினால் வழங்கியில் உள்ள wp-content கோப்புகளை அழித்து விடும்.

4. /wp-admin/upgrade.php செல்லுங்கள். உங்கள் தரவுத்தளத்தைப் புதுப்பிக்கச் சொல்லி கேட்கும். அதற்கு ஒப்புதல் தந்தவுடன் உங்கள் வேர்ட்பிரெஸ் இற்றைப்படுத்தப்பட்டிருக்கும்.

***

புதிய பயனர்களுக்கான குறிப்புகள்:

வேர்ட்பிரெஸ் நிறுவுவது எப்படி?

பார்க்க – இது குறித்த விரிவான என் ஆங்கில வலைப்பதிவு இடுகை – How to install a self-hosted WordPress blog?

சுருக்கமான குறிப்புகள்:

* உங்கள் தளத்தில் /cpanel என்ற முகவரியில் control panel வசதி இருக்கிறதா? ஆம் என்றால், உங்களுக்கான குறிப்புகள்:

Control Panelன் கடைசியில் Fantastico deluxe என்று இருக்கும். அதைச் சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில் இடப்பக்கப்பட்டையில் blogs என்பதன் கீழ் WordPress இருக்கும். அதைச் சொடுக்கி New installation என்பதைத் தெரிவு செய்யுங்கள். அடுத்து வரும் பக்கத்தில் கேட்கப்படும் சிறு விவரங்களை நிரப்பி ஒரு நிமிடத்தில் வேர்ட்பிரெஸ் நிறுவிக்கொள்ளலாம்.

* Control Panel இல்லாதவர்களுக்காக குறிப்புகள்:

– உங்கள் வழங்கிக் கணக்கில் புதிய MySQL தரவுத்தளங்களை உருவாக்குவதற்கான பக்கத்தில் புதிய தரவுத் தளம் ஒன்றை உருவாக்குங்கள். தரவுத் தளப் பெயர், பயனர் பெயர், கடவுச் சொல் ஆகியவற்றைக் குறித்துக் கொள்ளுங்கள்.

– http://wordpress.org/latest.zip இல் இருந்து வேர்ட்பிரெஸ் மென்பொருளைத் தரவிறக்கி wordpress அடைவைப் பிரித்தெடுங்கள்.

– wp-config-sample.php என்ற கோப்பைத் திறந்து அங்கு உங்கள் தரவுத் தள விவரங்களை நிரப்பி அந்தக் கோப்பை wp-config.php என்ற பெயரில் சேமித்துக் கொள்ளுங்கள்.

– wordpress அடைவுக்குள் உள்ள கோப்புகள், அடைவுகளை மொத்தமாகத் தெரிவு செய்து Filezilla கொண்டு உங்கள் வழங்கியில் வலைப்பதிவு வைத்திருக்கும் அடைவுக்குள் பதிவேற்றுங்கள்.

– /wp-admin/install.php சென்று அங்கு கேட்கப்படும் சிறு விவரங்களை நிரப்பி 5 நிமிடத்துக்கள் உங்கள் பதிவை நிறுவிக் கொள்ளலாம்.


Comments

5 responses to “வேர்ட்பிரெஸ் நிறுவுவது, இற்றைப்படுத்துவது எப்படி?”

  1. மயூரேசன் Avatar
    மயூரேசன்

    இணையத்தில Demo எல்லாம் கிடைக்குதே என்ன அவசரம்??? ரிஷ்க் எடுக்க அவளவு ஆர்வமா? புல்லரிக்குது போங்க!
    http://mayuonline.com/eblog/wanna-play-with-wordpress-25/

  2. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    மயூ, எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறு தான். தவிர, முந்தைய நிறுவலில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வேறு இருந்தது. தரவுத் தளத்தை எல்லாம் சேமிச்சுவச்சிட்டு தான் செஞ்சேன். இருந்தாலும் கொஞ்சம் திக்கு திக்குன்னு தான் இருந்துச்சு 🙂

  3. தமிழ் வலைப்பதிவை இற்றைப் படுத்தி எல்லாம் கோல் மால் ஆகிவிட்டது.. ஆங்கில வலைப்பதிவு வேலைசெய்கின்றது.!!! 🙁

    பல வழிகளில் முயன்றுகொண்டிருக்கின்றேன் பார்ப்போம்!!!

  4. Upgrading to WordPress 2.5.1 | mayuonline.com

    […] release. Finally I manage to upgrade the WordPress manually for the first time. I followed the tips given by Ravi, as I was lazy enough to follow WordPress’s detail upgrading […]

  5. Nanbaragaley…! ennudaya wordress website tamilil eruka vendum ena aasai padukiren. enaku uthavungal..!

    epadiku,
    sridhar kalaibala