Tag: தமிழிணையம்
-
தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களுக்கு பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்?
—
in இணையம்எட்டு கோடித் தமிழர் இருக்கிற போது ஏன் இந்த ஒற்றைப் படை நிலை? முதலில் ஒன்றை அறிவோம். இந்தக் குறைவான எண்ணிக்கை தமிழ் இணையத் திட்டங்களுக்கு மட்டும் உள்ள நிலை இல்லை. மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால், சமூகத்தில் நிகழ்வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் பல கூட்டு முயற்சி, தன்னார்வல, இலாபநோக்கற்ற திட்டங்களுக்கும் கூடப் பங்களிப்பு குறைவே. ஆக, நிகழ் உலகத்தில் பங்களிப்புக் குறைவுக்கு காரணமாக இருக்கும் பணமின்மை, நேரமின்மை, மனமின்மை, திறனின்மை போன்ற அத்தனைக் காரணங்களும் இணையத்துக்கும் பொருந்தும்.
-
தமிழ்க் கணிமை ஆர்வலர்கள்
—
in தமிழ்நான் அறிந்த சில இணையத் தமிழ் நுட்ப ஆர்வலர்கள் பெயரைப் பதிந்து வைக்கிறேன். (எந்த வரிசையிலும் இல்லை) 1. முகுந்த் – தமிழா! அமைப்பின் முனைப்பான பங்களிப்பாளர்களில் ஒருவர். இவர் உருவாக்கிய எ-கலப்பை பல தமிழர்கள் கணினியில் எளிதாகத் தமிழ் எழுத உதவுகிறது. 2. மாகிர் – தமிழூற்று – தமிழர்களின் அறிவுச் சுரங்கம் என்ற பெயரில் தமிழிணையம் சார்ந்து பல நுட்பப் பணிகள் ஆற்றி வருகிறார். தமிழ் இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், விக்கி இயக்கங்கள் தொடர்பில் பயனுள்ள…
-
இணையத் தமிழ் உள்ளடக்க உருவாக்கம் – தமிழ்நாடு அரசு கவனிக்குமா?
—
in தமிழ்என்றாவது, தமிழ் வளர்ச்சித் துறை தொடர்புடைய தமிழக அரசு அமைச்சர் / அதிகாரி கண்ணில் படலாம் என்ற பேராசையில், தமிழக அரசுக்கு சில வேண்டுகோள்கள். * தமிழ்நாடு அரசு இணையத்தளத்தின் அனைத்துத் தகவல்களையும் முழுக்கத் தமிழில் தாருங்கள். TSCII வடிவில் இருந்தாலும், கூடவே ஒருங்குறித் தமிழிலும் ஒரு பதிப்பு தாருங்கள். இதன் மூலம் தமிழக அரசுத் தகவல்களை கூகுள் போன்ற தேடுபொறிகளின் மூலம் தேட இயலும். * தமிழ்நாடு அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி பாட நூல்கள்…
-
தமிழ் செய்தித் தளங்கள்
கூகுள் செய்திகளின் இந்திப் பதிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. விரைவில் பிற இந்திய மொழிப் பதிப்புகளும் வரும் என்கிறார்கள். இந்தியில் ஒருங்குறி அல்லாத பிற எழுத்துருக்களில் அமைந்திருந்த தளங்களின் தகவல்களையும் ஒருங்குறிக்கு மாற்றி வெளியிடும் பொறுப்பை கூகுளே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் தினமலர், தினகரன், விகடன் போன்ற தளங்கள் ஒருங்குறியில் செய்தி வெளியிடுவதற்கான அறிகுறிகளை காணாதிருக்கையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. குறைந்தபட்சம் செய்தியோடைகளையாவது வழங்க இது போன்ற முன்னணி செய்தித் தளங்கள் முன்வரவேண்டும். தற்போது MSN தமிழ், Yahoo தமிழ்,…
-
தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுமம்
—
in தமிழ்ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் அறிய, உருவாக்க ஒரு கலைச்சொல்லாக்கக் குழுமம் உருவாக்கி இருக்கிறோம். குழும முகவரி: http://groups.google.com/group/tamil_wiktionary இக்குழுமத்தின் நோக்கம்: ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கலைச்சொற்களை அறிவது, தேவைப்பட்டால் மேம்படுத்துவது, புதிய கலைச்சொற்களை உருவாக்குவது. இக்குழுமம் கட்டற்ற தமிழ் அகரமுதலியான விக்சனரிக்குத் துணையாகவும் இயங்குகிறது. இக்குழுமத்தில் அலசி ஆராயப்பட்டு ஓரளவு கருத்தொத்ததாக வரும் சொற்கள் தமிழ் விக்சனரியில் பரிந்துரைகளாகச் சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம் இவை பொதுப் பயன்பாட்டு வர ஏதுவாகிறது. இந்தக் குழுமம் மூலம் சொற்களை ஆக்குபவர்கள்…
-
விக்சனரி (பன்மொழி – தமிழ் இணைய அகரமுதலி)
—
in தமிழ்கட்டற்ற பன்மொழி – தமிழ் – பன்மொழி அகரமுதலி ஒன்றை உருவாக்கும் முயற்சியாக 2004 முதல் தமிழ் விக்சனரி தளம் செயல்படுகிறது. டிசம்பர் 2008 நிலவரப்படி ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான சொற்களுக்கு பொருள் சேர்த்துள்ளோம். ஒரு சொல் பெயர்ச்சொல்லா வினைச்சொல்லா என்பது முதலிய குறிப்புகள், ஒரு சொல்லை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு எடுத்துக்காட்டுச் சொற்றொடர்கள், பலுக்கல் ஒலிக்கோப்புகள், பொருத்தமான படங்கள், அச்சொல்லுக்கான பிற மொழி விக்சனரி இணைப்புகள் ஆகியவை தரப்படுகின்றன. நீங்கள் அறிய விரும்பும் சொல்லை Googleல் இருந்தே…