Tag: கலைச்சொல்லாக்கம்
-
ஏன் ஒரு ஆங்கிலச் சொல்லை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தமிழாக்கக்கூடாது?
—
in தமிழ்ஆங்கிலத்தில் இருந்து பெயர்க்கும் போது மட்டும் பல சூழல்களில் இருக்கும் ஒரு சொல்லின் மூலத்தை ஆய்ந்து பார்த்து எல்லா இடங்களிலும் ஏன் அதைப் பிடித்துத் தொங்க வேண்டும்? என்னைக் கேட்டால் இதுவும் ஒரு வகை ஆங்கில அடிமைச் சிந்தனை தான். ஆங்கிலேயன் என்ன சொல் பயன்படுத்தினான், எதற்குப் பயன்படுத்தினான் என்பதை அச்சு பிசகாமல் மதிப்பளித்துப் பின்பற்றித் தமிழாக்குவது போல் இருக்கிறது. ஏன் இந்தத் தமிழ்ச் சொல் என்று யாராவது வினவினால், குறிப்பிட்ட ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிட்டு விளக்காமல் நம்…
-
ஏன் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக ஏற்றுக் கொள்ளக்கூடாது?
—
in தமிழ்Video என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சலனப்படம், அசைபடம், நிகழ்படம், காணொளி, விழியம், ஒளியம் என்று எண்ணற்ற சொற்கள் தமிழ் இணையத்தில் புழங்கி வருகின்றன. இப்படிப் பட்ட சொற்களைப் பயன்படுத்தாது ஏன் வீடியோ என்பதையே தமிழ்ச் சொல்லாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று மயூரன் தமிழ் விக்சனரி குழுமத்தில் கேட்டிருந்தார். ஆங்கிலச் சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனைக்கு ஆதரவாக இருப்பவை: 1. இவை மக்கள் வாழ்வில் ஏற்கனவே புழங்கும் சொற்கள் என்பதால் மக்களால் எளிதாகப் புரிந்து கொள்ளப்படும்.…
-
ஒருங்குறி X Unicode X யுனித்தமிழ்
—
in தமிழ்ஒரு கூகுள் குழும நிருவாகியுடன் பேசிய போது… — நான்: உங்கள் குழுமத்தில் யுனித்தமிழ் என்ற சொல்லைக் கையாள்கிறீர்களே? யுனித்தமிழ் என்று சொன்னால், இசைத்தமிழ், நாடகத் தமிழ் போல் அதையும் ஒரு தமிழாகக் கருதிக் குழப்பிக் கொள்ள வாய்ப்பளிக்காதா? ஒருங்குறித் தமிழ் என்றால் இலகுவாகப் புரியுமே? குழும நிர்வாகி: சுந்தரத் தமிழில் பாட்டிசைத்து….. என்று திருவிளையாடலில் சிவாஜி பேசும் வசனம் ஞாபகம் வருகிறது. சுந்தரம் என்பது தமிழல்ல, அதனால் இது ஒன்றும் குறையாகியும் போகவில்லை. நான்: தமிழ்…
-
Puncture ஒட்டும் கடைக்குத் தமிழில் என்ன பேர்?
—
in தமிழ்இது சயந்தன் எனக்கு சொன்ன கதை ! 1990களில் தமிழீழத்தில் உள்ள கடைகளுக்கு எல்லாம் தமிழ்ப் பெயர் வைக்குமாறு விடுதலைப் புலிகள் வலியுறுத்திய காலமாம். bakery – வெதுப்பகம் ஆனது. bank – வைப்பகம் ஆனது. இந்த வரிசையில், tyreல் உள்ள துளை (puncture) ஒட்டும் கடைக்கு ஒருவர் தமிழ்ப் பெயர் எழுதி வைத்தாராம். அது என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சயந்தன் அந்தப் பெயரை சொன்ன போது விழுந்து விழுந்து சிரித்தேன் 🙂 அந்தப் பேர்..…
-
வலைப்பூவா வலைப்பதிவா ?
—
வலைப்பூ, வலைப்பதிவு – இரண்டுமே blog என்பதற்கு ஈடான சொற்களாகப் புழங்குகின்றன. எது நல்ல சொல்? இந்த இரண்டு சொற்களின் இளகுத் தன்மையையும் பார்ப்போம். வலைப்பதிவு weblog – வலைப்பதிவு blogger – வலைப்பதிவர் blogging – வலைப்பதிதல் blog (வினை) – வலைப்பதி. blogger circle – பதிவர் வட்டம். blog world / blogdom – பதிவுலகம் videoblog – நிகழ்படப்பதிவு / ஒளிதப் பதிவு audioblog – ஒலிதப்பதிவு. வலைப்பூ weblog –…
-
தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுமம்
—
in தமிழ்ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் அறிய, உருவாக்க ஒரு கலைச்சொல்லாக்கக் குழுமம் உருவாக்கி இருக்கிறோம். குழும முகவரி: http://groups.google.com/group/tamil_wiktionary இக்குழுமத்தின் நோக்கம்: ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கலைச்சொற்களை அறிவது, தேவைப்பட்டால் மேம்படுத்துவது, புதிய கலைச்சொற்களை உருவாக்குவது. இக்குழுமம் கட்டற்ற தமிழ் அகரமுதலியான விக்சனரிக்குத் துணையாகவும் இயங்குகிறது. இக்குழுமத்தில் அலசி ஆராயப்பட்டு ஓரளவு கருத்தொத்ததாக வரும் சொற்கள் தமிழ் விக்சனரியில் பரிந்துரைகளாகச் சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம் இவை பொதுப் பயன்பாட்டு வர ஏதுவாகிறது. இந்தக் குழுமம் மூலம் சொற்களை ஆக்குபவர்கள்…
-
விக்சனரி (பன்மொழி – தமிழ் இணைய அகரமுதலி)
—
in தமிழ்கட்டற்ற பன்மொழி – தமிழ் – பன்மொழி அகரமுதலி ஒன்றை உருவாக்கும் முயற்சியாக 2004 முதல் தமிழ் விக்சனரி தளம் செயல்படுகிறது. டிசம்பர் 2008 நிலவரப்படி ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான சொற்களுக்கு பொருள் சேர்த்துள்ளோம். ஒரு சொல் பெயர்ச்சொல்லா வினைச்சொல்லா என்பது முதலிய குறிப்புகள், ஒரு சொல்லை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு எடுத்துக்காட்டுச் சொற்றொடர்கள், பலுக்கல் ஒலிக்கோப்புகள், பொருத்தமான படங்கள், அச்சொல்லுக்கான பிற மொழி விக்சனரி இணைப்புகள் ஆகியவை தரப்படுகின்றன. நீங்கள் அறிய விரும்பும் சொல்லை Googleல் இருந்தே…