Tag: தமிழர்
-
தமிழ் மோதிரம்
—
in தமிழ்சென்னை. புகழ் பெற்ற நகைக் கடை ஒன்று. பெயர் பொறித்து ஒரு மோதிரம் வாங்கலாம் எனச் சென்று இருந்தோம். முன்கூட்டியே சில குறிப்பிட்ட வடிவங்களில் பெயர் எழுதி வைத்திருந்த மாதிரிகளைக் காட்டினார்கள். ஒன்றில் கூட தமிழ் எழுத்தில்லை. “தமிழ்ல பேரு எழுதித் தருவீங்களா?” “இல்லீங்க. தமிழ்ல செய்ய முடியாது”. “ஓ.. சரி, எந்தக் கடைல தமிழ்ல எழுதித் தருவாங்கன்னு சொல்லுங்க. அங்க போறோம்.” “இல்லீங்க.. இப்பல்லாம் தமிழ்ல வர்றது இல்லீங்க. தமிழ்ல design பண்ணுறதுல சிக்கல் இருக்குங்க”…
-
எல்லா துறையினருக்கும் ஆங்கிலம் தான் சோறு போடுகிறதா?
—
in தமிழ்தமிழ் நலம் சார்ந்து ஒரு அறிவியல் பேராசிரியர், பொறியாளர், மென்பொருளாளர் என்று யார் பேசினாலும், “ஆங்கில அறிவை வைத்து சோறு திண்பவர்களுக்கு ஏன் தமிங்கிலம் பற்றி இவ்வளவு வெறுப்பு, ஏன் இந்த போலித்தனம்?” என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. எல்லா துறைகளிலும் தொடர்பாடல் மொழியாக ஆங்கிலம் தேவைப்படுகிறது தான். ஆனால், அதற்காக “ஆங்கிலம் தான் சோறு போடுகிறது, அது இல்லாம பிழைப்பியா” என்பதெல்லாம் ரொம்ப… இது ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தமிழை வக்கற்ற மொழியாகச் உருவகப்படுத்தும் நோக்கமுடையது…
-
தமிழர் பெயர்கள்
—
in தமிழ்05.12.2008 தினமலர் கோவை பதிப்பில் பிறந்த நாள் வாழ்த்து பெற்ற குழந்தைகள் பெயர்கள்: ஹிர்த்திக் ராஜ், பிரசன்னவர்மா, ராகுல், சம்யுக்தா, கிருத்திகாவர்ஷா, நவீன்கோபி, தாரிகா, ஹரிகிருஷ்ணன், யோகேஷ்குமார், கார்த்திகா, விஜயபாரதி, தருண், நவீன், ஹிரன்விகாஷ், சர்வேஸ்,ஸ்ரீஇமி, கார்த்திகா, நித்திலன், ரித்விக், மதன், கவுதம், வினுதர்ஷினி, முகிலா, பரத்ராம், சுமையா, பிரநீஷ், பிரகாஷ், ரஞ்சித், அமிர்வர்சினி, ரணீட்டா, உமயாள்தர்சினி, அகிலேஷ், சுவேதா, வசுந்தரா, சுபஸ்ரீ, கீர்த்தனா, ரித்திக், யோகேஸ்வரி, விகாஸ், கவின், முஹமதுஷைத், தனகவுரி, கார்த்திகாதேவி, பிரணதி, தனுஷா,…
-
வாழ்த்துகள்
—
in தமிழ்இன்னைக்கு அக்கா கிட்ட இருந்து “காலை வணக்கம்” என்று “தமிழில்” மடல் வந்தது. இப்படி காலை வணக்கம், மதிய வணக்கம்னு சொல்றது சரியா? ஏன்னா அது good morning என்பதன் நேரடித் தமிழாக்கமே தவிர, நம் பண்பாட்டில் இப்படி நேரத்தோடு சேர்த்து வணக்கம் சொல்வது இல்லையே? நெருங்கிய உறவுகளுக்குள் வணக்கம் சொல்லும் வழக்கமும் இல்லை. தவிர, good morning என்ற வாழ்த்து தரும் பொருளும் வணக்கம் என்ற சொல் தரும் பொருளும் வேறு வேறு அல்லவா?
-
கட்டாயத் தமிழ் மொழிக் கல்வி
—
in தமிழ்தாய்மொழியைக் கட்டாயமாகக் கற்பிக்கலாமா என்று உரையாடிக் கொண்டிருக்கும் உலகின் ஒரே கேடு கெட்ட சமூகம் தமிழ்ச் சமூகமாகத் தான் இருக்க வேண்டும்.
-
பேச்சுத் தமிழ்
—
in தமிழ்நேத்து கல்லூரி நண்பன் ஒருத்தன் கிட்ட பேசினேன். என்னோட பதிவுகளைப் படிச்சு பிடிச்சுப் போய், “ரவிசங்கர், இனி நாம் தூய தமிழிலேயே பேசுவோம், சரியா?” அப்படின்னு சொல்லி கொஞ்ச நேரம் “தூய” தமிழில் பேசப் பார்த்தான். அதைத் “தூய” தமிழ்னு சொல்லுறத விட உரைநடைத் தமிழ் / மேடைப் பேச்சுத் தமிழ் / மேடை நாடகத் தமிழ் / பழங்காலத் திரைப்படத் தமிழ் – னு சொல்லலாம். அவன் கிட்ட நான் பகிர்ந்துகிட்ட கருத்துக்களும் அதுக்கு அப்புறம்…
-
உனக்கு English தெரியாதா?
—
in தமிழ்ஐரோப்பியப் பெரு நகரங்களில் ஆங்கிலத்திலும் உரையாடி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று யாரும் அதிகாரம் செய்ய முடியாது. “தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுவீர்களா” என்று பணிவுடன் தான் கேட்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர் தான் வேறு ஆங்கிலம் பேசக்கூடிய கடைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இல்லை, அத்தகையை கடைகளைத் தேடி ஓய்ந்து கடைசியில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார். ஆங்கிலம் என்பது சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்தலாம். ஒரே…
-
ஏன் ஒரு ஆங்கிலச் சொல்லை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தமிழாக்கக்கூடாது?
—
in தமிழ்ஆங்கிலத்தில் இருந்து பெயர்க்கும் போது மட்டும் பல சூழல்களில் இருக்கும் ஒரு சொல்லின் மூலத்தை ஆய்ந்து பார்த்து எல்லா இடங்களிலும் ஏன் அதைப் பிடித்துத் தொங்க வேண்டும்? என்னைக் கேட்டால் இதுவும் ஒரு வகை ஆங்கில அடிமைச் சிந்தனை தான். ஆங்கிலேயன் என்ன சொல் பயன்படுத்தினான், எதற்குப் பயன்படுத்தினான் என்பதை அச்சு பிசகாமல் மதிப்பளித்துப் பின்பற்றித் தமிழாக்குவது போல் இருக்கிறது. ஏன் இந்தத் தமிழ்ச் சொல் என்று யாராவது வினவினால், குறிப்பிட்ட ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிட்டு விளக்காமல் நம்…