தொடுப்புகள் – மே 27, 2010

1.  Project Tamils – உங்களுக்குத் தெரிந்த தமிழ், தமிழர் தொடர்புடைய இலாப நோக்கற்ற திட்டங்கள் பற்றிய தகவலைச் சேர்த்து உதவலாம்.

2. சேகரம் – நூறு ஆண்டு பழமை மிக்க தமிழ் நூல்களின் அரிய தொகுப்பு.

3. பேயோன் – இவர் தற்காலத் தமிழ் எழுத்தாளர்கள், அறிவுப் போக்குகளைக் கிண்டல் செய்து எழுதுகிறார். தங்களை எழுத்தாளர்கள் என்றுச் சொல்லிக் கொள்பவர்களை விட இவரது எழுத்து மிகச் சுவையாக உள்ளது. தனது முதல் ஆயிரம் டுவீட்டுகளை ஒரு புத்தகமாகவே வெளியிட்டிருப்பது தான் இவரது உச்சக்கட்டப் பகடி 🙂

4. அகராதி – அண்ணா பல்கலை ஆய்வாளர்கள் முயற்சியில் வந்துள்ள ஒரு தமிழ் அகரமுதலி. வழமையான அகரமுதலிகளை விட சற்றுக் கூடுதலான நுட்ப வசதிகள், உசாத்துணைகளுடன் உள்ளது. ஆங்கிலம் – தமிழ் அகரமுதலிகளின் விரிவான பட்டியலையும் காணலாம்.

5. Change This – மாறத் தூண்டும் சிந்தனைகள் கொண்ட குறுநூல்கள் தளம்.

6. நான் வாசித்த புத்தகங்கள்

7. நான் பார்த்த திரைப்படங்கள்


Comments

3 responses to “தொடுப்புகள் – மே 27, 2010”

  1. தொடுப்புகள் நல்ல முயற்சி.

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      நன்றி சாய்ராம். Weblog என்பதே இணையத்தளங்களுக்குத் தொடுப்புகள் தரும் ஒரு கருத்துருவாக்கமே (logging the web).. ஆனால், காலப்போக்கில் இந்த ஊடகத்தைப் பல்வேறு நோக்கங்களுக்கும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம்…

  2. நன்றி கலந்த வாழ்த்துக்கள்.