என்னுடைய BSNL இணைய இணைப்பின் மூலம் தளங்களைத் திறப்பது மெதுவாக இருந்தது. சில வேளை பெரிய தளங்கள் மட்டும் வரும். பல சின்ன, புதிய தளங்கள் திறக்காமல், “Cannot found” பிழை வரும். இது நச்சுநிரல் வேலையோ என்று எண்ணி விண்டோசைத் தூக்கி விட்டு உபுண்டுவை மட்டும் மீள நிறுவினேன். பிரச்சினை தீரவில்லை. அப்போது தான் நண்பர் logic, “இது இணையச் சேவை வழங்கும் நிறுவனத்தின் தளப் பெயர் வழங்கியில் உள்ள குறைபாடாக இருக்கலாம். OpenDNS முயன்று பாருங்கள்” என்றார். OpenDNSக்கு மாறிய பிறகு, பிரச்சினை தீர்ந்தது ! தளங்கள் திறக்கும் வேகமும் கூடி உள்ளது. வாழ்க OpenDNS !
தொடர்புடைய இடுகைகள்:
* OpenDNSக்கு மாறுவது எப்படி?
* OpenDNS அறிமுகம்.
* இணையத்தள வழங்கி இடத்தை மாற்றிய பின் உதவும் OpenDNS
Comments
2 responses to “OpenDNS”
தூக்கி விட்ட விண்டோசை மீள்கொணராமல் உபுண்டுவிலேயே ரவி தொடருவரானால், வாழ்க ரவி ;>)
(நான் அலுவலக கணினியிலிருந்து பதிவதால்தான் இதை விண்டோசிலிருந்து பதிகிறேன் -ஹி ஹி…)
~சேது
🙂
உபுண்டுவின் வேகம், எளிமை, பாதுகாப்பு பார்த்த பிறகு, வீட்டில் உள்ளவர்களுக்கு கூட மீண்டும் விண்டோசுக்கு செல்லும் எண்ணமில்லை. தொழில் காரணங்களுக்காக ஒப்புக்குச் சப்பாணியாய் இன்னொரு கணினியில் விண்டோசு இருக்கிறது. திறந்த நாளாச்சு.