Category: விக்கிப்பீடியா

  • செப்டம்பர் 29, சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் கொண்டாட்டம்

    தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவு அடைவதை ஒட்டி, செப்டம்பர் 29 அன்று சென்னையில் கொண்டாட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அனைவரும் வருக. உலகெங்கும் இருந்து இந்நிகழ்வுக்கு வரும் தமிழ் விக்கிப்பீடியர்களைக் காணவும், விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கக் கற்றுக் கொள்ளவும், தமிழ் இணையத்தின் அடுத்த கட்டம் குறித்து உரையாடவும் இது ஒரு நல்ல வாய்ப்பு.

  • கூகுள் தானியங்கித் தமிழாக்கக் கருவி

    பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து பிற மொழிகளுக்கும் தானியக்கமாய் மொழிபெயர்க்கும் கருவி ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது. தமிழ்க் கணிமையைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய சாதனை என்பதில் ஐயம் இல்லை. அதிலும் ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளுக்கு மட்டுமல்லாமால் பல மொழிகளுக்கும் இடையே இரு வழியாக மொழிபெயர்க்கலாம் என்பது சிறப்பு. செருமன், நெதர்லாந்து மொழிகளைச் சோதித்துப் பார்த்தேன். கூடவே தமிழ்ச் சொற்களை உச்சரித்துக் காட்டும் கருவி, தமிழ் உரையை உரோம எழுத்துகளில் எழுதிக் காட்டும்…

  • விக்கிப்பீடியா

    (12 நவம்பர் 2009 புதிய தலைமுறை இதழில் வெளிவந்த விக்கிப்பீடியா அறிமுகம். என் நேரமின்மை காரணமாக, வெளிவந்த கட்டுரையின் இறுதிப்பகுதியை ஆசிரியர் குழு எழுதியது. இதழ் நடைக்கு ஏற்ப சில சிறிய மாற்றங்களும் உண்டு) புதுக்கோட்டை மாவட்டம் மாங்குடி அரசு நடுநிலைப் பள்ளி. காவிரி ஆற்றைப் பற்றி ஒரு கட்டுரைப் போட்டி. மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியா ( http://ta.wikipedia.org ) என்ற இணையத்தளத்துக்குச் செல்கிறார்கள். காவிரி ஆற்றுடன் நிற்காமல் அதனுடன் தொடர்புடைய குடகு, மேற்குத் தொடர்ச்சி மலை,…

  • தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம்

    1. தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம் கொண்டு எழுதலாமா கூடாதா? எழுதலாம். கிரந்தம் தவிர்த்து தான் எழுத வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த மாட்டார்கள். 2. தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம் பயன்பாட்டில் உள்ளதா? தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்த எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள் பட்டியலைக் கீழே காணலாம். இவை தவிர, கட்டுரை உரைகளில் ஆயிரக்கணக்கான இடங்களில் கிரந்த எழுத்துகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் நீக்கி தமிழ் எழுத்துகளுக்கு மாற்றும் திட்டம் ஏதும் இல்லை. அதற்குத் தேவையும் இல்லை. சாத்தியமும் இல்லை.…

  • தமிழ் விக்கிப்பீடியா மீதான விமர்சனங்களும் பதில்களும்

    1. தமிழ் விக்கிபீடியாவில் இலங்கைத் தமிழ் நடை கூடுதலாகத் தென்படுகிறதே? தமிழ் விக்கிப்பீடியா தொடக்கம் முதல் பெருமளவு ஈழத்தமிழர்கள் ஆர்வத்துடன் பங்களித்து வருகிறார்கள். அவர்கள் நடையிலேயே அவர்கள் எழுதுவது இயல்பான ஒன்று. நாமும் கட்டுரை எழுதாமல், எழுதுவோரையும் எங்கள் நாட்டுத் தமிழ் நடையில் எழுதுங்கள் என்று கோருவது பண்பாடன்று.  எனினும், பன்னாட்டுத் தமிழருக்கும் புரிய வேண்டும் என்ற நோக்கில் அவர்களும் பெருமளவு பொதுவான சொற்களைப் பயன்படுத்தியே எழுத முயல்கிறார்கள். சில கலைச்சொற்கள், ஈழம் சார் சொற்களுக்கு மாற்றுச்…