Category: கணினி

  • உபுண்டு – அறிமுகம்

    (10 திசம்பர் 2009 புதிய தலைமுறை இதழில் வெளிவந்த கட்டுரை. ஆசிரியர் குழுவின் சிற்சில மாற்றங்களுடன்) உபுண்டு – அ. ரவிசங்கர் உங்களுக்கு மோட்டார் பைக்குகள் பிடிக்குமா? பைக்குகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மாட்டத் தெரியுமா? ஆனால், மோட்டார் பைக் விற்கும் நிறுவனமோ “நீங்கள் பைக்குகளைப் பிரித்துப் பார்க்கக்கூடாது. ஏதாவது பிரச்சினை என்றால் எங்களிடம் தான் வர வேண்டும். பழைய பைக்குகளைச் சீர் செய்ய மாட்டோம். திரும்பத் திரும்ப புது பைக்குகள் வாங்கிக் கொண்டே…

  • தமிழ் TuxPaint

    குழந்தைகள் வரைவதற்கான TuxPaint மென்பொருளைத் தமிழாக்கி உள்ளோம். 2004ல் தமிழா குழுவினர் வெளியிட்ட தமிழாக்கம் TSCIIயில் இருந்தது. அதை ஒருங்குறிக்கு மாற்றி, கூடுதலாக இருந்த புதிய சரங்களைத் தமிழாக்கி உள்ளோம். 1. TuxPaint மென்பொருளைத் தரவிறக்கி நிறுவுங்கள். 2. நிறுவுகையில் configurationல் Languages என்பதில் தமிழைத் தெரிவு செய்யுங்கள். ஏற்கனவே நிறுவி இருந்தால், (விண்டோசு கணினியில்) C:\Program Files\TuxPaint போய் Tuxpaint-config என்பதைச் சொடுக்கி அமைப்பை மாற்றலாம். 3.  C:\Program Files\TuxPaint\locale\ta\LC_MESSAGES என்ற இடத்தில் உள்ள Tuxpaint.mo கோப்பை நீக்குங்கள். 4.…

  • கூகுள் தமிழ் எழுதி பயன்படுத்தாதீர் !

    தட்டச்சு என்பது ஒரு மனப்பழக்கம். இந்த கூகுள் தமிழ் எழுதியில் எழுதிப் பழகி விட்டால், பிற எழுதிகளைப் பயன்படுத்த உங்களுக்கு கை வராது. ஆர்க்குட், ப்ளாகர் தவிர்த்த பிற தளங்களில் தமிழில் எழுதுவது உங்களுக்குச் சிரமமாகும். அதன் விளைவாக, கூகுள் தமிழ் எழுதி பக்கத்தை நாடத் தொடங்குவீர்கள். நேரடியாக எல்லா தளங்களிலும் இலகுவாகத் தமிழில் எழுதுவதை விடுத்து வீணே கூகுள் தமிழில் எழுதியில் இருந்து வெட்டி ஒட்டத் தொடங்குவீர்கள். இதனால், கூடுதல் கூகுள் சார்பு நிலையை அடைவீர்கள்.…

  • தமிழ் உரைபேசி

    கோபி உருவாக்கும் ஔவை உரைபேசி மென்பொருளுக்கு தெளிவான தமிழ் ஒலிப்பும் நல்ல குரல் வளமும் உடைய தமிழ்நாட்டு, இலங்கை ஆண் / பெண் / குயில் / கிளி உடனடியாகத் தேவை.

  • தமிழ்99 செய்திகள்

    தமிழ்99 செய்திகள். எழுதுவது: ரவிசங்கர் 😉 * தமிழ்99 தளத்தை இன்று இற்றைப்படுத்தினேன். குறிப்பாக, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பகுதி பாருங்கள். தள மேம்பாடு குறித்த ஆலோசனைகளை வரவேற்கிறேன். தள பராமரப்பு, வடிவமைப்புப் பெருமைகள் அனைத்தும் சிந்தாநதியைச் சேரும். * இணையத்தில் ஒரு தமிழ்99 எழுதி இல்லாத குறையைப் போக்க W3Tamil எழுதி வந்திருக்கிறது. காணத்தக்க விசைப்பலகையாக இருப்பதுவும், பதிவிறக்கி இணைப்பறு நிலையிலும் பயன்படுத்த இயல்வதும் இதன் சிறப்பு. * வலைப்பதிவுகளில் தமிழ்99 எழுதியைப் பொதிந்து கொள்வதற்கான…

  • தமிழ் அடிப்படை ஆங்கிலத் தட்டச்சு மென்பொருள்

    தமிழ்99 விசைப்பலகை குறித்து நண்பர் ஒருவருடன் நடந்த மடல் உரையாடலில், ஆங்கிலத் தட்டச்சு அறியாமல் “முதலில் தமிழ்99 கற்றுக் கொள்ளக்கூடிய ஒருவர் ஏன் பிறகு ஆங்கிலத் தட்டச்சையும் தனியாகக் கற்க வேண்டும்? தமிழ்99 அடிப்படையிலேயே ஆங்கிலத்தையும் எழுதுவது போல் ஒரு மென்பொருள் செய்தால் என்ன?” என்று கேட்டார். முதலில் இது நல்ல யோசனை என்று தோன்றிய பிறகு இதில் உள்ள அபத்தத்தைக் கண்டு கொண்டேன். வாட் இஸ் யுவர் ஃப்ரெண்ட் நேம் என்று எழுத வேண்டுமானால் தமிழ்99…

  • ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும்?

    தமிழ்99 விசைப்பலகையின் அறிவியல், இலக்கண அடிப்படை நிறைகளை அறியும் முன் தமிங்கில விசைப்பலகையின் வடிவமைப்பு அடிப்படையின் போதைமையைப் பார்ப்போமா? தமிங்கில விசைப்பலகைக்கு அடிப்படையாக இருக்கும் asdf அல்லது qwerty விசைப்பலகையில் ஆங்கில எழுத்துக்கள் அமைந்திருக்கும் வரிசைக்கு காரணம் சொல்ல முடியுமா? தட்டச்சுப் பொறிகள் முதலில் உருவாக்கப்பட்ட காலத்தில் அவற்றில் வேகமாகத் தட்டச்சினால் அவை பழுதடைந்து விடுகின்றன என்ற காரணத்துக்காக, எழுத்துக்களைக் கலைத்துப் போட்டுத் தட்டச்சும் வேகத்தைக் குறைக்க உருவாக்கபட்டத்தே இப்போது உள்ள ஆங்கில விசைப்பலகை. ஆங்கில எழுத்து…

  • உபுண்டு

    உபுண்டு என்பது லினக்சை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரு கட்டற்ற இயக்குதளம். விண்டோஸ் மென்பொருளை காசு கொடுத்தோ திருட்டுத் தனமாகவோ விரும்பியோ வேறு வழியில்லாமலோ பயன்படுத்துபவர்கள் உபுண்டுவுக்கு மாறலாம் உபுண்டு முற்றிலும் இலவசம். இணையத்தில் பதிவிறக்கலாம். பைசா செலவின்றி நம் வீடு தேடியும் உபுண்டு இறுவட்டு வரும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை, உபுண்டு புதிய பதிப்புகளை வெளியிடுகிறது. இதனால், புதிய நுட்பங்களின் பலன்கள் நமக்கு உடனுக்குடன் கிடைக்கும். விண்டோசை வைத்திருப்பவர்களும் கூடுதலாக தனி வகிர்வில் உபுண்டு…

  • இலக்கண அடிப்படை தமிழ் சொற்திருத்திக்கான வரைவு

    Due to time constraints, I am posting the draft in English. This idea of a grammar based spell checker for Tamil was proposed by Mauran and drafted by me in Thamizha! group but yet to be materialised. I welcome all Tamil computing enthusiasts to help realise this project. — I see an immediate possibility to…

  • ஒருங்குறி, எ-கலப்பை, விசைப்பலகை – ஒரு குட்டிக் கதை

    பலரிடமும் நீங்கள் எந்த விசைப்பலகையில் கணினியில் தமிழில் எழுதுகிறீர்கள் என்று கேட்டால், “எ-கலப்பை” அல்லது “ஒருங்குறித் தமிழ்” என்று பதில் வருகிறது. குறியேற்றம் வேறு, மென்பொருள் வேறு, விசைப்பலகை வேறு என்ற புரிதல் வியக்கத்தக்க அளவில் மிகக் குறைவாகவே இருக்கிறது. இது குறித்து தெளிவாக, விரிவாகப் புரிந்து கொள்ள மயூரனின் கட்டுரையைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன். தற்போதைக்கு, இது குறித்து எளிமையாக விளக்க ஒரு குட்டிக் கதை / உவமை இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்துப் பார்த்தேன்…