தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம்

பார்க்க: Tamil Baby Names Websites

நண்பர் கார்த்திக், தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம் ஒன்று உருவாக்கி உள்ளார். விரைவில் இன்னும் ஆயிரக்கணக்கான பெயர்களைச் சேர்ப்போம். உங்களுக்குத் தெரிந்த பெயர்களை இந்தப் படிவத்தில் தரலாம். நேரடியாகவும் Google Spreadsheetல் பெயர்களை உள்ளிடலாம். 

தற்போதைய தளம் ஒரு முன்னோட்டப் பதிப்பு மட்டுமே. அறியப்பட்ட வழு:

* தற்போது தரவுத்தளத்தில் உள்ள தமிழல்லா பெயர்களை நீக்க வேண்டும்.

Google Adsense

கூகுள் ஆட்சென்சு மூலம் விளம்பரங்கள் தந்ததில் இது வரை கற்றவை:

* கூகுள் தமிழ் வலைப்பதிவுளுக்கு விளம்பரம் தருவதில்லை. ஒரு ஆங்கில வலைப்பதிவைக் காட்டி ஒப்புதல் வாங்கி, அதே ஆட்சென்சு நிரலைத் தமிழ் வலைப்பதிவிலும் இட்டு விளம்பரங்கள் காட்டலாம்.

* வலைப்பதிவு முழுக்க தமிழ்ச் சொற்களே இருந்தால் பொருத்தமான விளம்பரங்கள் வருவதில்லை. இடுகையின் பெயர், முகவரி, குறிச்சொற்கள், உள்ளடக்கத்தில் பொருத்தமான ஆங்கிலச் சொற்களைத் தந்தால் விளம்பரங்களின் தரம் கூடுகிறது.

* தளப் பெயர் ரொம்ப முக்கியம். என் தளப் பெயரில் dreams இருப்பதால், வேறு பொருத்தமான சொற்கள் இல்லா இடங்களில் dreams தொடர்பான விளம்பரங்கள் காட்டிக் கொல்கிறது 🙁

* விளம்பரங்களை ஒழுங்குபடுத்த Adsense manager நீட்சி உதவுகிறது.

* http://ravidreams.net/forum

* http://ravidreams.net

தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி

சனவரி 18, 2009 அன்று சென்னையில் கிருபாவின் அலுவலகத்தில் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி வகுப்பு நடந்தது.

நிகழ்ச்சி பற்றி விக்கி பயனர்களின் கருத்துகள்

மா. சிவக்குமாரின் கருத்து

* வடபழனி பகுதி உள்ளூர் அச்சு இதழில் வெளிவந்த செய்தியைப் பார்த்தே பலர் வந்திருந்தார்கள். அடுத்தடுத்த வலைப்பதிவு, விக்கி, இணையப் பட்டறைகளுக்கும் அச்சு, ஒளி, ஒலி ஊடகங்கள் மூலம் கூடுதலாக விளம்பரப்படுத்த வேண்டும்.

* கிருபா, விடுமுறை நாளில் மூடிக் கிடக்கும் தன்னுடைய அலுவலக இடம், கணினிகளையே இதற்குப் பயன்படுத்தினார். இது போல் தமிழ், கணினி, இணைய ஆர்வம் உடைய இன்னும் பலர் முன்வர வேண்டும். பல இடங்களில் சிறிய அளவில் இது போன்று செய்வது ஒருங்கிணைக்க இலகு. செலவற்றது. கூடுதல் விளைவுகளைத் தரும்.

* பிப்ரவரி 1, 2009 அன்று பெங்களூருவில் இதே போன்ற விக்கி பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

தொடுப்புகள் – August 24, 2008

1. தமிழில் கூகுள் செய்திகள் – தினத்தந்தி, மாலைமலர் போன்ற ஒருங்குறியில் இல்லாத தமிழ்த் தளங்களில் இருந்தும் செய்திகளைத் திரட்டித் தானியக்கமாகத் தொகுத்துத் தருகிறது. சில புதிய தமிழ்ச் செய்தித் தளங்களும் தென்படுகின்றன.

2. RSS Meme – வலையில் யார் எதை விரும்பிப் படித்துப் பகிர்கிறார்கள் என்று அறியலாம். இத்தளத்தின் This Week பகுதியில் உண்மையிலேயே நல்ல தொடுப்புகளைக் கண்டு கொள்ளலாம்.

3. Down For Everyone or Just me – ஏதாவது தளம் படுத்துவிட்டால் உங்களுக்கு மட்டும் தானா இல்லை எல்லாருக்குமா என்று அறியலாம்.

4. PhD Comics – ஐயோ பாவம் ஆராய்ச்சி மாணவர்கள் குறித்த துறை சார் நகைச்சுவைத் தளம் 🙂

5. xkcd – புகழ்பெற்ற வலை நகைச்சித்திரத் தளம். அண்மையில் வெளிவந்த கீழே உள்ள நகைச்சித்திரம் பெரிதும் பேசப்பட்டது. நம்ம நிறைய பேருக்குப் பொருந்துமோ?

கடமை அழைக்கிறது !
கடமை அழைக்கிறது !

6. டுவிட்டர் தேடல் – செய்திகள் நிகழ நிகழ சுருக்கமாக உடனுக்குடன் அறிய டுவிட்டர் தேடல் உதவும். இப்ப நிறைய தமிழ்ப் பதிவர்கள் கூட டுவிட்டரில் இருக்கிறார்கள்.

7. Flickr தளத்தில் நிறைய அழகான படங்கள் இருக்கும். ஆனால், முழு அளவு இல்லாமலோ தரவிறக்கவே முடியாமலோ இருக்கும். Flickrல் முழுப் படத்தையும் உருவுவதற்கு ஒரு குறுக்குவழி.

விளம்பரங்கள் 🙂

8. உளறல் – தமிழ் டுவிட்டர் போல் ஒரு முயற்சி.

கடைசியா ஒரு கேள்வி !

ஒரு தொடுப்பு இடுகையில் குறைந்தது / கூடுதல் எத்தனை தொடுப்புகள் இருந்தால் நன்றாக இருக்கும்?

tamil X thamil X thamiz X thamizh X tamiz X tamizh

தமிழ்123.com , தமிழ்abc.com , தமிழ்அனக்கோண்டா.me என்றெல்லாம் தளப் பெயர் வைப்பவர்கள் தமிழை thamiz, thamil, tamizh, thamizh, tamiz என்றெல்லாம் விதம் விதமாக எழுதாமல் tamil என்றே எழுதுவது நலம்.

* tamil என்று எழுதுவது சுருக்கமாக, நினைவு வைக்க இலகுவாக, குழப்பமின்றி இருக்கிறது. தளங்களுக்குப் பெயரிடுவதில் இது முக்கியம்.

* தளப் பெயரை எழுத்தில் பார்க்காதவர்கள் தன்னிச்சையாக tamil என்று தொடங்கும் முகவரிக்கே செல்வர். அத்தளம் செயல்பாட்டில் இல்லாவிட்டால் வெற்றுப் பக்கத்தைப் பார்ப்பார்கள். உங்கள் தளம் பிரபலமானால், கண்டிப்பாக tamil என்று தொடங்கும் முகவரியையும் போட்டிக்காரர்கள் வாங்கிப் போட முயல்வர். தொடர்பில்லாத உள்ளடக்கங்களைத் தந்து உங்களுக்கு கெட்ட பெயரும் வருமான இழப்பும் பெற்றுத் தரலாம்.

* tamil என்ற எழுத்துக்கூட்டல் மட்டுமே தமிழர் அல்லாதவர்களுக்கும் புரியும்.

* ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டலுக்கும் உச்சரிப்புக்கும் தொடர்பு இருப்பதில்லை. எனவே, தமிழை சரியாக உச்சரிக்கிறோம் என உணர்ச்சிவசப்பட்டு ஆங்கில எழுத்துக்கூட்டலை மாற்ற வேண்டாம்.