Category: இணையம்

  • தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களுக்கு பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்?

    எட்டு கோடித் தமிழர் இருக்கிற போது ஏன் இந்த ஒற்றைப் படை நிலை? முதலில் ஒன்றை அறிவோம். இந்தக் குறைவான எண்ணிக்கை தமிழ் இணையத் திட்டங்களுக்கு மட்டும் உள்ள நிலை இல்லை. மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால், சமூகத்தில் நிகழ்வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் பல கூட்டு முயற்சி, தன்னார்வல, இலாபநோக்கற்ற திட்டங்களுக்கும் கூடப் பங்களிப்பு குறைவே. ஆக, நிகழ் உலகத்தில் பங்களிப்புக் குறைவுக்கு காரணமாக இருக்கும் பணமின்மை, நேரமின்மை, மனமின்மை, திறனின்மை போன்ற அத்தனைக் காரணங்களும் இணையத்துக்கும் பொருந்தும்.

  • ரவி மன்றம்

    தமிழ் இணையத்தில் மட்டுமல்லாது பொதுவாகவே மன்றங்கள் பக்கம் நான் எட்டிப் பார்ப்பது இல்லை. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லாத மன்ற இடைமுகப்புகள். வேர்ட்பிரெஸ் நிறுவனத்தில் இருந்து வரும் bbPress மென்பொருள் மன்றங்களில் உரையாடுவதை எளிதாக்குகிறது. இதன் பயன்கள்: * எளிமையான இடைமுகப்பு * எளிமையான பயனர் கணக்கு உருவாக்கம். 10 நொடிகள் கூட ஆகாது. * உரையாடல் தலைப்புகளைக் குறிச்சொற்கள் கொண்டு தொகுக்கலாம். * ஒவ்வொரு உரையாடல் தலைப்புக்கும் தனித்தனி ஓடை வசதி.…

  • தேடுபொறிகளுக்கு உகந்ததாகத் தளத்தை மாற்றுவது எப்படி?

    தேடுபொறிகளில் முதல் சில முடிவுகளில் எப்படி வருவது? இவை அனைத்தும் 100% நான் முயன்று பார்த்து உறுதிப்படுத்திக் கொண்ட அடிப்படையான விசயங்கள்:

  • தமிழ் விக்கிப்பீடியர்கள்

    2005 மார்ச் முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களிக்கத் தொடங்கினேன். அதற்குப் பிறகு தமிழ் இணையத்தில் பல இடங்களில் சுற்றி வந்துவிட்டாலும், இன்று வரை 100% மன நிறைவு அளிக்கும் ஒரே திட்டம் தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் மட்டும் தான். தணியாத தமிழார்வத்துக்கு களமாக இருப்பது ஒரு காரணம். இன்னொரு முக்கியக் காரணம், தன்னலமற்ற, ஒத்த கருத்துடைய, தோழமை உணர்வு மிகுந்த, பண்பில் சிறந்த, நேர்மையான நண்பர்களுடன் பணியாற்றுவதே தனி இன்பம் தான். இவர்களில் சிலர் தமிழ்…

  • கூகுள் தமிழ் எழுதி பயன்படுத்தாதீர் !

    தட்டச்சு என்பது ஒரு மனப்பழக்கம். இந்த கூகுள் தமிழ் எழுதியில் எழுதிப் பழகி விட்டால், பிற எழுதிகளைப் பயன்படுத்த உங்களுக்கு கை வராது. ஆர்க்குட், ப்ளாகர் தவிர்த்த பிற தளங்களில் தமிழில் எழுதுவது உங்களுக்குச் சிரமமாகும். அதன் விளைவாக, கூகுள் தமிழ் எழுதி பக்கத்தை நாடத் தொடங்குவீர்கள். நேரடியாக எல்லா தளங்களிலும் இலகுவாகத் தமிழில் எழுதுவதை விடுத்து வீணே கூகுள் தமிழில் எழுதியில் இருந்து வெட்டி ஒட்டத் தொடங்குவீர்கள். இதனால், கூடுதல் கூகுள் சார்பு நிலையை அடைவீர்கள்.…

  • சற்றுமுன்

    சற்றுமுன்… செய்திச் சேவை வரும் பிப்ரவரி 15 அன்று முதல் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. வாழ்த்துகள் !

  • தொடுப்புகள் – 8 பெப்ரவரி 2008

    பல ஆங்கிலப் பதிவுகளில் Links for this week, Links for today என்று தொடுப்பு கொடுப்பதையே வேலையாக வைத்திருக்கிறார்கள். தொடுப்புப் பதிவுகள் என்று பதிவு வகையே இருக்கிறது. நாளைக்குப் பல பக்கங்களை பயர்பாக்ஸ் உலாவியில் சேர்த்து வைக்கிறேன். எல்லாவற்றையும் Del.icio.us போன்ற தளங்களில் ஏற்றிப் பகிர பொறுமையும் தேவையும் இருப்பதில்லை. எனவே, எனக்குப் பயன்பட்ட சுவையான, பயனுள்ள தகவல்களைத் தரும் தொடுப்புகளை அவ்வப்போது இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  • தமிழில் உரைத்துணை

    dotSUB தளம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் உரைத்துணை வழங்கும் நுட்பத்தை இலகுவாக்கி இருக்கிறது. சோதனைக்காக, நான் தமிழில் உரைத்துணை சேர்த்துப் பார்த்த நிகழ்படம் ஒன்று.. ஒரு விக்கி தளத்தைத் தொகுப்பது போல் இந்தத் தளத்தில் உரைத் துணையைச் சேர்ப்பதும் மிக இலகுவாக இருக்கிறது. தற்போது இந்தத் தளத்தில் முறையான காப்புரிமம், பொது உரிமம் உள்ள படைப்புகளைத் தான் சேர்க்க முடியும் போல் இருக்கிறது. ஆனால், இந்த நுட்பம் Youtube போன்ற தளங்களுக்கு வரும் எனில் எண்ணற்றை…

  • திரட்டி செய்வது எப்படி?

    Yahoo! Pipes, Google Reader இரண்டுமே தன் விருப்பத் திரட்டிகள் செய்ய உதவுகின்றன. முதலில், திறம் வாய்ந்த Yahoo! Pipes கொண்டு நான் உருவாக்கிய திரட்டிகள் சில: 1. தமிழ்மணத்தில் எனக்குப் பிடித்த நான்கு துணை ஓடைகளை ஒன்றிணைக்கும் திரட்டி. இதே முறையில் தமிழ்மண ஓடைகளுக்குப் பதில் நம் விருப்பப் பதிவுகளின் ஓடைகள் அல்லது நம் பல்வேறு பதிவுகளின் ஓடைகளை ஓன்றிணைத்துக் கொள்ள முடியும். 2. துறை வகைகள் போக, நாம் விரும்பாத பதிவுகள், விரும்பாத பதிவர்கள்…

  • மாற்று! எப்படி மாற்று?

    மாற்று! தளத்தைப் பார்வையிட்ட நண்பர்கள் பலரும் கேட்ட கேள்வி, இத்தளம் எப்படி ஒரு மாற்றாக விளங்கும் என்பது தான். திரட்டிகள் என்ற அளவில் தமிழ்மணம், தேன்கூடு, TamilBlogs தளங்கள் இருப்பதும் பரிந்துரைத் தளங்களாக கில்லி, DesiPundit போன்ற தளங்கள் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. மேம்போக்காகப் பார்க்கையில், மாற்று! இன்னுமொரு தமிழ்த் தளமாகத் தெரியலாம் என்றாலும், இதன் தோற்றம், செயல்பாடு, நிர்வாகம், ஒருங்கிணைப்பு, தள வடிவமைப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் உண்டு. வாசகருக்கான நன்மைகள் * முழுக்கத் தமிழ் உள்ளடக்கம்…