உங்கள் வலைப்பதிவில் பாடல்கள் ஒலிபரப்புவது எப்படி?

நான் அண்மையில் விரும்பிக் கேட்ட பாடல்களை கீழே ஒலிபரப்புகிறேன். நீங்களும் இதுபோல் எளிதாக செய்யலாம்.


Get Your Own Hindi Songs Player at Music Plugin

மேலே உள்ள பாடல் பட்டியல் – உன்னைக் கண்டேனே (பாரிஜாதம்), உன்னாலே உன்னாலே (உன்னாலே உன்னாலே), காற்றின் மொழியே (மொழி).

இது போல் நீங்களும் பாடல்களை ஒலிபரப்ப,

1. http://www.musicplug.in செல்லுங்கள்.
2. ஒரு பயனர் கணக்கு உருவாக்குங்கள்.
3. நீங்கள் விரும்பும் பாடல்களுக்கு அருகில் உள்ள + குறியை அழுத்தி, ஒரு albumல் சேருங்கள்.
4. இப்பொழுது அந்த albumஐத் திறந்து பாட விடுங்கள்.
5. கீழ் வருவது போல் உங்கள் இயக்கியில் உள்ள embed code அருகில் உள்ள copy to clipboard என்ற பொத்தானை அழுத்தி, நிரலை பிளாக்கரில் ஒட்டி விடுங்கள்.

அவ்வளவு தான்..உங்கள் சொந்த juke box, radio mirchy, சூரியன் FM எல்லாம் தயார் 🙂

இந்த Musicplug.in தளத்தை அண்மையில் தான் கண்டுபிடித்தேன். இதன் சிறப்பியல்புகள்:

1. Raaga.comக்கு இணையான பாடல்களின் ஒலிப்புத் தரம்.
2. Raaga.comஐ மிஞ்சும் கவர்ச்சியான தள வடிவமைப்பு.
3. நண்பர்களுக்கு மின்மடலில் பாடல் அனுப்ப, இணைப்புகளை பகிர, இப்படி உங்கள் தளத்தில் இருந்து ஒலிபரப்ப என்று ஏகப்பட்ட வசதிகள்.
4. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, பஞ்சாபி பாடல்கள்.
5. முக்கியமாக உயிரை வாங்கும் விளம்பரங்கள் இல்லை. Raagaவில் “ஊட்டுக்கு பணம் அனுப்புறியா, அனுப்புறியா”-னு ஒரு மேரி அக்கா கூவிக்கிட்டே இருக்கும் 🙂
6. பாடல்கள், பாடல் பட்டியல் தானாக திரும்பத் திரும்ப பாடும் வசதி.
7. புதிய, பழைய பாடல்கள் என்று நிறைய குவிந்திருக்கின்றன.
8. Realplayer தேவை இல்லை. Raagaவில் இது முக்கியத் தொல்லை.
9. லினக்ஸ், Firefox எல்லாவற்றிலும் பாடுகிறது. Raaga லினக்சில் மக்கர் செய்யும். Realplayer plugin போடு என்று அழும் !

தளத்துக்கு போய் பாட்டு கேட்டுப் பார்த்து சொல்லுங்களேன்..யார் கண்டார்? தமிழ்ப் பதிவுலகில் இதைத் தொடர்ந்து வானொலிப் பதிவுகள் வந்தாலும் வரலாம். வந்தாலும் நல்லா இருக்கும் தான்.

Raaga, 5 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ இப்பொழுதும் அப்படியே இருக்கிறது. நுட்ப அளவில் ஒரு மாற்றமும் இல்லை. Youtube போன்ற தளங்கள் நிகழ்படப் பகிர்வுகளை பரவலாக்கியது போல் இந்த தளமும் இந்தியப் பாடல் பகிர்வுகளை பரவலாக்கக் கூடும். கூடிய சீக்கிரம் இந்த தளம் Raagaவை ஏறக் கட்டி விடும் என்பது என் கணிப்பு. பார்க்கலாம்.


பி.கு.
1. இந்த இடுகையை நீங்கள் திறக்கும்போது தானாகவே பாடத் தொடங்கி விடும். இது போல் அல்லாமல் பயனர் விரும்பி பாட வைக்க musicplug நிரலில் autoplay=true என்பதை false என மாற்றிக் கொள்ளுங்கள்.
2. தமிழ்த் திரைப்பாடல்களை துல்லியமாக, எளிதாகத் தேட ஆன்ந்த் ஒரு நிரல் உருவாக்கி உள்ளார். தகவலுக்கு நன்றி, மு.கார்த்திகேயன்.

தொடர்புடைய இடுகை:

வலைப்பதிவில் ஒலிப்பதிவு இடுவது எப்படி?


Comments

22 responses to “உங்கள் வலைப்பதிவில் பாடல்கள் ஒலிபரப்புவது எப்படி?”

 1. Anonymous Avatar
  Anonymous

  அருமையான தரம். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

 2. வடுவூர் குமார் Avatar
  வடுவூர் குமார்

  பாடல் முழுவதும் கேட்டு முடிக்கிற வரை நீளமாக எப்படி எழுதுவது என்று ஒரு பதிவையும் போடுங்களேன்.
  :-))
  பாட்டு நல்லா இருக்கு.

 3. Anonymous Avatar
  Anonymous

  என்னா போடு போடுதுப்பா. என்னா பார்மட்டுப்பா ? WMAவா ?

 4. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  anonymous 1 – நன்றி.

  anonymous 2 – என்ன formatனு தெரிலங்க..embedded player, பதிவிறக்க முடிஞ்சா தான என்ன formatனு பார்க்கலாம்?

  வடுவூர் குமார் – 🙂 என் வலைப்பதிவ திறந்து வைச்சிட்டு அப்படியே மிச்சவங்களோட பதிவுகளையும் படிங்க..பாட்டு முடிஞ்சிடும் 🙂

 5. Anonymous Avatar
  Anonymous

  எம்படட் பிளேயர்னாலும் எங்கையாவது சேவ் பண்ணி வைக்குமேப்பா ? Local Settings, Temp folder, இந்த மாரியான ஏரியாவுல. கண்டுபிடிச்சி சொல்லுங்க தல.

  தமிழ்பீட்ல எறக்குன போக்கிரி பாட்டவுட இதுல இருக்கறது பெசலா இருக்கு.

 6. யோகன் பாரிஸ்(Johan-Paris) Avatar
  யோகன் பாரிஸ்(Johan-Paris)

  ரவி சங்கர்!
  இதைச் செய்ய நெடு நாளாக ஆசை!! தெரியவில்லை.சயந்தனும் சொல்லித் தந்தார்.எல்லா முறையையும் முயற்சிக்கிறேன்.
  இப்படியான தகவல்களைத் தாருங்கள்§
  ஆனந்தின் சேகரிப்பு பார்த்தேன் கேட்டேன்.

 7. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  anonymous – நானும் temp, local settings எல்லாம் துழாவிப் பார்த்துட்டேங்க..கண்டுபிடிக்க முடியல 🙁 நீங்க முயன்று சொல்லுங்க.

  யோஹன் – மகிழ்ச்சி. நன்றி

 8. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  நான் சொன்ன யோசனைய வைச்சு நானே ஒரு குட்டி வானொலி தொடங்கியாச்சு 🙂

  பார்க்க – பாட்டு 1

  இதில எனக்குப் பிடித்த திரையிசைப் பாடல்களை தொடர்ந்து ஒலிபரப்ப இருக்கேன். பாடல் பெயர்கள், படப் பெயர்கள் தமிழில் குறிப்பிடப்படுவதால் கூகுள் தேடலிலும் சிக்கும். Raaga, Musicplug.in போன்ற தளங்கள் தமிழில் பெயர்களை தர தற்போது வழியில்லாத நிலையில் இது உதவியாக இருக்கும்.

 9. "வற்றாயிருப்பு" சுந்தர் Avatar
  "வற்றாயிருப்பு" சுந்தர்

  ரவிசங்கர்.

  musicplug.in தளத்தைத்தான் பாடும் நிலா பாலு – வலைப்பதிவில் ஒரு வருடமாக உபயோகித்துக்கொண்டிருக்கிறேன். 🙂

  செயல்முறையை விவரமாக வெளியிட்டதற்கு நன்றி.

 10. பாலராஜன்கீதா Avatar
  பாலராஜன்கீதா

  நன்றி ரவிசங்கர்.

 11. சிவபாலன் Avatar
  சிவபாலன்

  Ravi,

  Thanks a lot!!

 12. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  பாலராஜன் கீதா, சிவபாலன் – 🙂

  சுந்தர் – என்னது ஒரு வருசமா பயன்படுத்துறீங்களா? இத எல்லாம் நாலு பேத்துக்கு சொல்லிக் கொடுங்களேன்..அருமையான தளம்..இத்தனை நாள் பார்க்காமல் விட்டுவிட்டேனே என்று வருத்தப்பட்டேன்

 13. கொழுவி Avatar
  கொழுவி

  சுந்தர் – என்னது ஒரு வருசமா பயன்படுத்துறீங்களா? இத எல்லாம் நாலு பேத்துக்கு சொல்லிக் கொடுங்களேன்..அருமையான தளம்..இத்தனை நாள் பார்க்காமல் விட்டுவிட்டேனே என்று வருத்தப்பட்டேன் //

  நீங்க எப்பவுமே ஓடி முடிஞ்ச படங்களையே ரிலீஸ் பண்ணுறீங்களே..

 14. "வற்றாயிருப்பு" சுந்தர் Avatar
  "வற்றாயிருப்பு" சுந்தர்

  ரவிசங்கர்

  தளத்தின் மேலாளர் சையத் ஹீசைன் தமிழர்தான். இங்க நியூஜெர்ஸில இருக்கார். நிறைய மேம்படுத்திக்கிட்டே இருக்காங்க.

  இதுல இன்னொரு விசேஷம் என்னன்னா, நீங்களே கரோக்கில பாடி அந்தப் பாட்டை வலையேத்தலாம்.

 15. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  கொழுவி – 4 பேருக்கு நல்லதுன்னா 40 தடவ கூட release பண்ணலாம் 😉

  சுந்தர் – தளத்தில் தமிழ்ப்பாடல்களை முதன்மைப்படுத்தியதை பார்க்கையிலேயே யாரோ தமிழ் ஆள் பின்னால் இருக்கார்னு ஊகிக்க முடிஞ்சது..நம்ம ஆளுங்கிறதுல பெருமை தான்..இன்னிக்கு உள்ள technology , trends எல்லாம் போட்டு கலக்கலா இருக்கு site..தேடல்ல auto-suggest வந்தப்ப ஆடிப் போய்ட்டேன். வாழ்க musicplug!

 16. உலகன் Avatar
  உலகன்

  இன்னும் பரிசோதித்துப் பார்க்கவில்லை. ஆனால் படிக்கும்போதே இசைப் பிரியர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கிறது.

  மிகவும் பயனுள்ள பதிவு. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

 17. Dingloo Avatar
  Dingloo

  Hello, en peyar Hussain.

  Ella nanbargalukkum Music Plugin saarbaaga, ennudaya vanakkam.

  Ayya, ennada ivan englishla ezhutharaanennu kovikka vendaam, Sundar Sir kitte athu onnum kathukkanum. Till then, Englishla type panren, konjam adjust pannikkonga.

  Intha page padikka romba santhoshamaa irukku. Musicplugin site unga manusukku pidicha sitea kondu vara muzhu muyarchi pannuvom. (Unga aasirvaadham thaan). Mukkiyamaa, thamizhle paadalgal peyar kondu vara muyarchippom.

  Unga permissionoda, intha pagea englishla translate pannren. Ithai minnadiye pannaama vittathukku mannichikonga.

  Romba romba santhoshathoda,
  Hussain

 18. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  உலகன் – மகிழ்ச்சி 🙂

  hussain – நீங்கள் வந்து மறுமொழிந்ததில் பெரு மகிழ்ச்சி. தாராளமாக இதை மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள். தளத்தின் இடைமுகப்பு (interface), பாடல் பெயர்கள், தேடல் வசதி எல்லாமே தமிழ்ல கொண்டு வந்தா அருமையா இருக்கும். பல சமயம் பாடல்களை ஆங்கிலத்தில் தேடுறது சிரமமா இருக்கு. உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்

 19. Dubukku Avatar
  Dubukku

  உபயோகமான பதிவு. தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன் நன்றி.

  http://www.desipundit.com/2007/03/05/broadcastsongs/

 20. பொன்ஸ் Avatar
  பொன்ஸ்

  நன்றி ரவிசங்கர்.. நல்ல பகிர்வு 🙂

 21. கோவை ரவீ Avatar
  கோவை ரவீ

  அன்பின் ரவிசங்கர்,
  வற்றாயிருப்பு சுந்தர் சார் தான் அவரின் பாடும் நிலா தளத்தில் எழுத
  ஒரு வாய்ப்பு தந்தார். அவரின் மறுமொழிகள் பார்த்தேன். நாங்கள் ஒரு வருடத்தில்
  300 பாடல்களூக்கு மேல் பதிவு செய்துவிட்டோம். நீங்கள் தமிழ்மணத்தில் தினமும்
  ஒரு பாடல் தற்போதும் வருகிறது. ம்யூசிக் ப்ளக் நானும் உபயோகபடுத்தியுள்ளேன்.
  அருமையான தளம். நீங்கள் விரும்பிய பாடகரின் பாடல்களை பதிவேற்றலாம்.
  சுட்டியை பெறல்லாம் நான் பல பாடல்களை ஏற்றியுள்ளேன். தங்களின் விளக்கம் அருமை. வாழ்த்துக்கள்.

 22. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  டுபுக்கு, பொன்ஸ், கோவை ரவீ – நன்றி